சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்காக தமிழகத்தை சேர்ந்த 5 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது
- 2020ம் ஆண்டில் சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்காக விருது வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் டெல்லி, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த போலீசார் இடம் பெறுகின்றனர்.
- இதில் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், க்யூ பிரிவு எஸ்.பி மகேஷ், திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்த், சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி பண்டரிநாதன், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
- நம் நாட்டின், முதல் உள்துறை அமைச்சரான சர்தார் படேலின், 145வது பிறந்த நாள், நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில், கேவாடியாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மலரஞ்சலி செலுத்தினார்.
- அதைத் தொடர்ந்து, கேவாடியா - ஆமதாபாத் இடையே, சபர்மதி நதிக்கரையோரத்தில், நாட்டின்முதல் கடல் விமான சேவையை, அவர் துவக்கி வைத்தார்.
- மொத்தம், 200 கி.மீ., துாரத்தை, 45 நிமிடங்களில், இந்த கடல் விமானம் மூலம் பயணிக்க முடியும். சாலை மார்க்கமாக, ஆமதாபாதில் இருந்து, கேவாடியா செல்ல, ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டும்.
- 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனம், இந்த சேவையை வழங்குகிறது. நாளொன்றுக்கு, இரண்டு முறை இந்த சேவை வழங்கப்படும்.
- விமானத்தின் அடிப்பகுதி தண்ணீரில் மிதக்கும் வகையிலும், வானில் பறப்பதற்கு ஏற்ப, இரு இறக்கைகளும் இதில் இருக்கும்; இது, 'மிதக்கும் விமானம்' என அழைக்கப்படுகிறது.
- உலகில் முதன்முதலாக, 1910 மார்ச், 28ல், ஐரோப்பிய நாடான பிரான்சின் ஹென்ரி பாப்ரி, முதல் கடல் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்.
- சபர்மதி ஆற்றில், ஆமதாபாத் - கேவாடியா வரை செல்கிறது. தினமும் இரு விமானங்களை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்குகிறது. பயண துாரம், 200 கி.மீ., பயண நேரம், 45 நிமிடம். கட்டணம், ஒரு நபருக்கு 1,500 ரூபாய்
- வேகம், மணிக்கு, 290 கி.மீ., இது, 12 ஆயிரத்து, 500 அடி உயரம் வரை பறக்கும்* இந்த விமானத்தில், 14 பயணியர் செல்லலாம். ஒருவர், 7 கிலோ வரை, 'லக்கேஜ்' எடுத்துச் செல்லலாம்.
200 கி.மீ. ஃபிட் இந்தியா ஓட்டம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இன்று நடந்த தொடக்க நிகழ்வில் திரைப்பட நடிகர் வித்யுத் ஜம்வால் பங்கேற்றார். ஓட்டத்தின் தொடக்கத்தில் சில கி.மீ-கள் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் ஓடினார்.
- இந்த நிகழ்ச்சியை இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை ஒருங்கிணைத்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் 200 கி.மீ தூர ஓட்டத்தில் இந்தோ-திபெத்திய காவல் படையின் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள், பல்வேறு மத்திய ஆயுதப்படை காவல் படைகளின் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
- இந்த ஓட்டம் இரவுப் பகலாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தார் பாலைவனத்தின் குன்றுகளையும் வீரர்கள் ஓடிக் கடக்கின்றனர்.
- கிஷன்கார்க் கோட்டை என்ற முக்கியமான இடம் உட்பட பல்வேறு போர் மற்றும் சண்டைகள் நடைபெற்ற சர்வதேச எல்லைகோட்டை ஒட்டிய பாதையில் பெரும்பாலான ஓட்டம் நடைபெறுகிறது.
அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை : பதக்கம் வென்ற இந்தியர்கள்
- பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்று வரும் அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில், 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் முன்னணி வீரா்களில் ஒருவரான சிவ தாபா தனது அரையிறுதியில் 1-2 என்ற கணக்கில் பிரான்ஸின் லூன்ஸ் ஹம்ராவிடம் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.
- ஆசிய வெள்ளிப் பதக்கம் வென்ற கவீந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ) 2-1 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் வீரர் சாமுவேல் கிஸ்டோஹூரிக்குச் சென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்
- பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்று வரும் அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள கவிந்தா் சிங் பிஷ்த் இறுதிச்சுற்றில் பிரான்ஸின் சாமுவேல் கிஸ்டோஹரியிடம் தோல்வியுற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
- தொடர்ந்து நடைபெற்ற 91 கிலோ எடை பிரிவில், மற்றொரு இந்திய வீரரான சஞ்ஜீத் இறுதிச்சுற்றில் பிரான்ஸின் சோஹேப் பவுபியாவை வென்று தங்க பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு சாம்பியனான அமித் பங்கல், அமெரிக்க ரெனே ஆபிரகாமை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!
- தமிழகத்தில் தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான எஸ்யூ-30 எம்கேஐ விமானம், பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையை தாங்கிச் சென்றது.சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் பயணித்து தொலைதூரம் சென்ற பின், ஏவுகணை செலுத்தப்பட்டது.
- மேலும் வங்கக் கடலில் நிறுவப்பட்டிருந்த இலக்கை பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணையை நிலம் அல்லது கடல் எங்கேயிருக்கும் இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது. மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.