Type Here to Get Search Results !

TNPSC 30th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் SAM ஏவுகணை சோதனை வெற்றி

  • வங்கக் கடலில் இருந்து எதிரி போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் (ஏஎஸ்எம்) ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி மாதிரி கப்பலை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. 
  • இந்த சோதனை ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை தாக்கியதும் மாதிரி கப்பல் முற்றிலும் சேதம் அடைந்து தீப்பிடித்து எரிந்தது.
பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு ராணுவ வீரர்களுக்காக சாய் என்ற செயலியை இந்திய ராணுவம் அறிமுகம்
  • இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீன ராணுவத்தினர், சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பெற முயற்சிகள் செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
  • இதையடுத்து, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டது.
  • இந்நிலையில், ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக செயலி ஒன்றை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 'சாய்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • பணியில் இருக்கும் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், இந்த செயலியை பயன்படுத்தலாம்.இந்த செயலி, மிகவும் பாதுகாப்பானது. அதன் வாயிலாக பகிரப்படும் தகவல்கள், 'ஹேக்' செய்ய முடியாத வகையில், தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
  • இதில், 'ஆண்ட்ராய்டு' மொபைல் போனில் உள்ள, 'வாட்ஸ் ஆப், டெலிகிராம், சம்வத், ஜிம்ஸ்' மற்றும் 'மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ காலிங்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. 
  • இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை உருவாக்கிய கர்னல் சாய் சங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
குஜராத்தில் மூலிகை தோட்டம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தை, பிரதமர் மோடி திறந்துவைத்தார். இங்கு, 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார். 
  • 17 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில், 380 மூலிகைகளின், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான செடிகள் வளர்க்கப் படுகின்றன. 
  • இதன் பின், ஒற்றுமை சிலை அருகே, பல மாநிலங்களின் கைவினைப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வணிக வளாகத்தை, பிரதமர் திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்துக்கு, 'ஏக்தா மால்' என, பெயரிடப்பட்டுள்ளது.
  • ஏக்தா மாலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சர்தார் படேலின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டம் - இந்தியன் ரயில்வே
  • ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்திலிருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 
  • ரயிலில் செல்லும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின்போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.
  • பயணத்தின்போது பிரச்னை எதுவும் ஏற்பட்டால் 182 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம். இது போன்றவர்களுக்கு விரைந்து உதவி வழங்கப்படுவதுடன் இந்த நடைமுறை சரியாக அனுசரிக்கப்படுகிறதா என மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர். 
  • இத்திட்டத்தின் கீழ் பெண் பயணிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். 
ஒற்றுமை சிலை வலைதளம் துவக்கி வைத்தார் பிரதமர்
  • குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். 
  • பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
  • தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel