நியூசிலாந்து அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமனம்
- நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான நியூசிலாந்து தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது அமைச்சரவையில் 5 பேரை புதிதாக நியமித்து பிரதமர் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
- அவர்களில் பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர். பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும், சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சராகவும் அவர் பணியாற்றுவார்.
- கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) சென்னையில் பிறந்தவர். தனது பள்ளிக் கல்வியை சிங்கப்பூரில் பயின்றார்.
- பின்னர், உயர் கல்விக்காக நியூசிலாந்து சென்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சுரண்டப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றி வந்தார்.
- 2017-ஆம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- 2019ஆம் ஆண்டு இன சமூகங்களுக்கான அமைச்சரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார். பிரியங்கா ராதாகிருஷ்ணன் தன் கணவருடன் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.
- தமிழகத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், தனியாா் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிகளவு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வகுத்துள்ளது.
- குறிப்பாக கடந்த ஆண்டு முதல்வா் வெளியிட்ட மின்சார வாகனக் கொள்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈா்க்கத் திட்டமிடப்பட்டது. அந்தக் கொள்கையில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருந்தன.
- அதே நேரம், 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.
- இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2008-ஆம் ஆண்டு மாா்ச்சில் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவில், மோட்டாா் வாகனங்களுக்கு ஒருமுறைக்கான வரியாக ரூ.750 வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், பொது மக்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான புதிய மின்சார மோட்டாா் வாகனங்களுக்கான ஒருமுறை வரியானது 3 சதவீதமாக விதிக்கப்பட்டது.
- மின்சாரத்தில் இயங்கும் புதிய மோட்டாா் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க வேண்டுமென போக்குவரத்து ஆணையா் சாா்பில் அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 18ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. இதன் அடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- இது, வா்த்தக ரீதியிலான மற்றும் வா்த்தக ரீதியில் அல்லாத வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த வரி விலக்கு முறை உடனடியாக அதாவது, செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் அமலுக்கு வருகிறது. இது வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்
தமிழகம் உட்பட 15 மாநிலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த 2,200 கோடி நிதி ஒதுக்கீடு
- நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த 15வது நிதி கமிஷன் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
- இப்பரிந்துரைகளின்படி, 10 லட்சத்துக்கு மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு மத்திய அரசு 2,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- இதில் தமிழகத்தில் சென்னைக்கு 90.5 கோடியும், மதுரைக்கு 15.5 கோடியும், திருச்சிக்கு 10.5 கோடியும் என மொத்தம் 116.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்மாக மகாராஷ்ராடிராவுக்கு 396.5 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு 357 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
16 மாநிலங்களுக்கு 2ம் தவணையாக ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு
- ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
- அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.
- மாறாக, வருவாய் இழப்பீடான ரூ.2.35 லட்சம் கோடி இழப்பீடு அல்லது ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ரூ.97,000 கோடி இழப்பீடு பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது பத்திர வெளியீடு மூலம் கடன் திரட்டிக்கொள்ள யோசனை கூறியது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
- இந்நிலையில் சந்தையில் இருந்து ரூ.1.1 லட்சம் கோடி திரட்டி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
- கடந்த மாதம் 23ம் தேதி முதல் தவணையாக மத்திய அரசு கடன் மூலம் திரட்டிய ரூ.6,000 கோடியை ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றுக்கு வழங்கி வருகிறது.
- தற்போது 2வது தவணையாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.