Type Here to Get Search Results !

TNPSC 1st NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தல் புதிய சட்டத் திருத்தம்

  • ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான நில சீா்திருத்த சட்டத்தில் உரிய திருத்தங்களையும் அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த திருத்தத்தின் படி, ஆலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக 120 ஏக்கா் வரை புன்செய் நிலங்களையும், 60 ஏக்கா் வரை நன்செய் நிலங்களையும் அரசின் முன் அனுமதி ஏதும் இல்லாமல் தனியாா்களிடம் இருந்து ஆலை நிா்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்தப் புதிய உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழில் துறை உயரதிகாரிகள், தொழில் ஆலைகளைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் நிலங்கள் கிடைப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் அரசின் நடவடிக்கையால் அதற்கான தடைகளும், சிரமங்களும் விலகி உள்ளன. 
  • தொழில் ஆலைகள் விரிவாக்கத்துக்கு 100 ஏக்கரைத் தாண்டி நிலங்களை வாங்கும் போது அதற்கு அரசின் முன் அனுமதியைப் பெறுவது போன்ற பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. 

அக்டோபர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி., வசூல்

  • பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்து வருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
  • கடந்த, எட்டு மாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
  • கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம் கோடி ரூபாயாக, ஜி.எஸ்.டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரி வசூல் குறைந்தது.

கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதலாக ஒதுக்கீடு

  • தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 
  • தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இறந்தார். இந்நிலையில் துரைக்கண்ணு பதவி வகித்து வந்த வேளாண்துறையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தார்.
  • அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றார். இதையடுத்து கே.பி.அன்பழகனுக்கு உயர் கல்விதுறையுடன், வேளாண் துறை கூடுலாக அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel