Type Here to Get Search Results !

TNPSC 24th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு உபி. அமைச்சரவை ஒப்புதல்

  • முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் காதல் வலையில் விழவைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்தரபிரதேசம், மத்திய பிர தேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.
  • இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்தார். 
  • இது தொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன்படி, மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது.
  • இதன் அடிப்படையில் மாநில அரசு கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அவசர சட்டத்துக்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதன்படி, பெண்களை கட்டா யமாக மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் லவ் ஜிஹாத்தில் ஈடுபடும் ஆண்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாவர். 
  • இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதா விரைவில் கூட உள்ள உ.பி. சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு மசோதா நிறைவேறியபின் முறைப்படி சட்டமாக்கப்படும்.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

  • கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். 
  • இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது.
  • பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 மார்ச்சில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனையின்போது 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது.அதன் பிறகு குறுகிய தொலைவு பாயும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இந்த வரிசையில் இந்திய ராணுவத்தின் சார்பில் அந்தமான் தீவில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஒரு தீவில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை மற்றொரு தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி தகர்த்தது. இது 290 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் குறுகிய தொலைவு ஏவுகணையாகும்.

அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்

  • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 'போயிங் - 777' அதிநவீன விமானம், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
  • அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' விமானம் நவ.,24 தனது முதல் பயணத்தை துவங்கியது. டில்லியிலிருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.
  • டில்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி, அங்கிருந்து வேறு விமானம் வாயிலாக, திருப்பதி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

நிலவில் இருந்து மாதிரிகள் சேகரிக்க ஆளில்லா விண்கலம் அனுப்பியது சீனா

  • நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், சீனாவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த, 1976க்கு பின், முதல் முறையாக, நிலவிலிருந்து பாறை துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து, சீனா ஆய்வு செய்ய உள்ளது.
  • இதற்காக, 'சாங் இ - -5' என்ற ஆளில்லா விண்கலத்தை, நேற்று அதிகாலை, சீனா விண்ணில் ஏவியது. சீனாவின் ஹனைன் மாகாணத்தில் உள்ள, வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச் 5' ராக்கெட் வாயிலாக, 'சாங் இ - -5' விண்கலம் ஏவப்பட்டது.
  • நிலவில், இதுவரை கால் பதிக்கப்படாத, 'ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்' என்ற பகுதியிலிருந்து, 2 கிலோ பாறை துகள்களை எடுத்து வர சீனா திட்டமிட்டுள்ளது. 
  • இந்த விண்கலம், நிலவிலிருந்து பாறைத்துகள்களை சேகரித்து, அடுத்த சில மாதங்களில் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இத்திட்டம் வெற்றி அடைந்தால், அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்யும் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

கேரள அரசின் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை சட்டம் வாபஸ் பெறப்படுகிறது பினராய் அறிவிப்பு

  • கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், கேரள போலீஸ் சட்டம் 118 ஏஇல் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்ட அவசர சட்டத்தை வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி ைவக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • சமூக இணையதளங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
'வாகன சேவைகள் - 2020, மின்சார போக்குவரத்து மாநாடு - 2020, புதிய நடைமுறையில் வாய்ப்புகளை பெறுதல்' என்னும் காணொலி மாநாடு
  • 'வாகன சேவைகள் - 2020, மின்சார போக்குவரத்து மாநாடு - 2020, புதிய நடைமுறையில் வாய்ப்புகளை பெறுதல்' என்னும் காணொலி மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 
  • காற்று மாசை குறைப்பதற்கான விரிவான லட்சியத்தை அடைய வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தது, பேட்டரி விலையை வாகனத்தின் விலையிலிருந்து பிரித்து விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மின் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். 
  • சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் வாகன உற்பத்தித் தொழில் மேம்படுத்தப்படும். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் 'கியோஸ்க்' அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel