ஸ்வீடன் நாட்டில் மாணவர் பருவநிலை விருது
- சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது' கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.
3 நாட்களில் 7 கண்டங்கள், 208 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை
- ஐக்கிய அரபு எமிரேட்சை(யுஏஇ) சேர்ந்த பெண் டாக்டர் காவ்லா அல் ரோமைதி. இவர் 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 நொடிகளில், உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- கடந்த பிப்.,13ம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது பயணத்தை முடித்த இவர், இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
தகவல் தொழில்நுட்ப மாநாடு 2020
- கர்நாடக அரசுடன் இணைந்து கர்நாடக தொழில்நுட்ப சங்கம் இந்த தொழில்நுட்ப மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்டவை இம்மாநாட்டில் பங்கேற்கின்றன.
- இம்மாநாடு 21-ம் தேதி வரை நடைபெறும். 25 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் மாநாட்டில் பங்கேற்கின்றன. 200 இந்திய நிறுவனங்கள் காணொலி அரங்குகளை அமைத்துள்ளன.
- 4 ஆயிரம் தொழில்நுட்ப பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 75 கட்டுரை தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
- தகவல் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் காரணமாகவே இத்துறையில் இந்தியா மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- சிறந்த வல்லுநர்கள் இருப்பதால், சிறந்த சந்தை வாய்ப்புகள் இத்துறையில் உருவாகி உள்ளன. தொழில்நுட்ப வல்லுநர்கள் இத்துறைக்கு தேவைப்படும் தீர்வுகளைக் கண்டறியும் போது அது உலகுக்கே பயன்படும் வகையில் அமையும்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. சமீபத்தில் கூட இத்துறையினருக்கு நெருக்குதலாக அமைந்த பல்வேறு பிரச்சினைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏழைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகதான், 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் நிகழும். அதற்காகதான் தொழில் நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
- மேலும் தொழில்நுட்பங்கள் மனித நேயம் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் மேம்படும். இதன் ஒருபகுதியாகதான் அரசின் அனைத்து செயல் திட்டங்களும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் பிரதான செயல் திட்டத்தில் தொழில்நுட்பத்துக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது.
- தொழில்நுட்பம் வாயிலாக மனிதர்கள் மதிப்புடன் வாழ வழியேற்படுகிறது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஒரே கிளிக் மூலம் பல்வேறு மானிய சலுகைகளைப் பெற முடிகிறது. கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை நம்பியே இருக்கும் சூழல் நிலவுகிறது. ஏழை மக்களுக்கு ஊரடங்கு காலத்திலும் உதவி கிடைக்க வழியேற்படுத்தியது இந்த தொழில் நுட்பம்தான்.
மலபார் கடற்படை பயிற்சி 2020
- இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்றாக சேர்ந்து கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நான்கு நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு மலபார் கடற்படை பயிற்சி என்று பெயர்.
- இந்த மலபார் கடற்படை பயிற்சியின் 24வது பயிற்சி தற்போது நடந்து வருகிறது. 2007க்கு பின் முதல்முறையாக இந்த பயிற்சியில் ஆஸ்திரேலியா மீண்டும் கலந்து கொண்டுள்ளது.
- இந்த மலபார் கடற்படை பயிற்சியின் முதல்கட்ட கூட்டு பயிற்சி கடந்த 3ம் தேதி விஷாகப்பட்டினம் கடல் பகுதியில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட பயிற்சி அரபிக்கடல் பகுதியில் நடந்து வருகிறது. இன்று அரபிக்கடலில் நடந்த பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு கடற்படையின் போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டது.
- இரண்டு நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. விமானங்களை துரத்துவது, குறி வைத்து தாக்குவது, தாக்குதலில் இருந்து தப்பிப்பது, போர் கப்பல்களை தாக்கி அழிப்பது என்று பல கட்ட பயிற்சிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.
- இந்திய ராணுவம் சார்பாக இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல் கலந்து கொண்டது. அந்த கப்பலுக்கு சொந்தமான் மிக் 29கே விமானமும், பி-8i விமானமும் இதில் பயிற்சி மேற்கொண்டது. அமெரிக்காவின் போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இதில் கலந்து கொண்டது. அந்த கப்பலுக்கு சொந்தமான F-18, E2C விமானங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டது.
- இந்த பயிற்சி சுமார் 6 மணி நேரம் தீவிரமாக நடந்தது. அதேபோல் ஆஸ்திரேலியா சார்பாக HMAS Ballarat மற்றும் ஜப்பான் சார்பாக JS Murasame ஆகிய போர் கப்பல்கள் இன்று பயிற்சி மேற்கொண்டது. இதனால் ஆரம்பிக்கடலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. வரும் 20ம் தேதி நான்கு நாடுகளும் ஒன்றாக இங்கு கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
- வரும் 2020-21 கல்வியாண்டில் மத்திய இருப்பின் எம்.பி.பி.எஸ் இடங்களின் கீழ் மருத்துவச் சேர்க்கையில் 'கோவிட் போராளிகளின் வாரிசு' என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
- கோவிட் சிகிச்சை மற்றும் மேலாண்மையில்,கோவிட் போராளிகளின் சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
- கல்வியாண்டு 2020-21ல் மத்திய இருப்பின் 5 எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் எழுதிய புத்தங்களை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
- குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், 'தி ரிபப்ளிகன் எதிக்' (The Republican Ethic), 'லோக்தந்த்ரா கே ஸ்வார்' (Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் வெளியிட்டார்.
- அதேபோன்று தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்.