- கண் பார்வை என்பது மிக அவசியமான ஒன்று. இந்த கண் பார்வை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக கண் பார்வை தினத்தை அறிவித்துள்ளது.
- மனிதர்கள், மிருகங்கள் என அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று, கண் பார்வை. கண் பார்வையின்மை, பார்வைக்குறைபாடு உள்ளிட்டவை பற்றி உலக அளவில் அறிவதற்காகவும், பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு, உலக கண் பார்வை தினம் என அறிவித்தது.
- அதன்படி இந்தாண்டு அக்டோபர் 8 ஆம் தேதி "உலக பார்வை தினம்" உலகளவில் கொண்டாடப்படுகிறது.
- இந்த தினத்தன்று கண்களின் முக்கியத்துவம் குறித்த பல கருத்தரங்குகள், பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வுகளும் நடத்தப்படும். மேலும், பல இடங்களில் கண்தானம் செய்யகோரிய பதாகைகளும், அதுகுறித்த மக்களிடையே ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
- மேலும், உலகளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக்குறைபாடு உள்ளதாகவும், 246 மில்லியன் பேர் மிககுறைவான பார்வை திறனோடும், 39 மில்லியன் பேர் பார்வையில்லாமலும் வருகின்றனர். அதில் பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார் 90 சதவீத பேர், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தில் இருக்கின்றனர்.
- மனிதர்களாகிய நாம், சராசரியாக நிமிடம் ஒன்றுக்கு 12 முறை இமைக்கின்றோம். நமது கண்கள் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 36,000 பைட் தகவல்களை கையாள்கிறது.
- கண்களில் இமைகளில் உள்ள முடிகளின் ஆயுள் காலம், 5 மாதங்கள் மட்டுமே. அதுமட்டுமின்றி, நமது கண்விழிகள் ஒரு நொடியில் 50 பொருட்களை பாதிப்பதாக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- தற்பொழுது கொரோனா பரவிவரும் சூழலில், உலக கண் பார்வை தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பிக்கொண்டே வருகின்றனர்.
உலக பார்வை தினம் / WORLD VISION DAY
October 06, 2020
0
Tags