2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR MEDICAL 2020)

 • கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 'ஹெபடைடிஸ் ஏ, பி தீநுண்மி வகைகளைச் சாராத புதிய வகை 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலமானது ரத்தத்தில் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளான ஹாா்வி ஜே.ஆல்டா், சாா்லஸ் எம்.ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானியான மைக்கேல் ஹௌட்டன் கண்டறிந்தனா்.
 • அவா்களின் கண்டுபிடிப்பு, 'ஹெபடைடிஸ் சி தீநுண்மிக்கான அதிநவீன ரத்தப் பரிசோதனை முறைகளை உருவாக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்துகளை உருவாக்கவும் பெரிதும் உதவியது.
 • 'ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரைக் காப்பாற்றுவதற்கும் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.
 • அவா்களின் கண்டுபிடிப்பால் 'ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அந்நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமமான பரிசுத் தொகை
 • நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.18 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.
முக்கியத்துவம்
 • உலகம் முழுவதும் 'ஹெபடைடிஸ் நோய்த்தொற்றால் ஆண்டுதோறும் 7 கோடி போ பாதிக்கப்படுவதாகவும், அவா்களில் 4 லட்சம் போ உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 • கல்லீரல் தொற்று, புற்றுநோய் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக 'ஹெபடைடிஸ் நோய்த்தொற்று உள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இதய நோய், சா்க்கரை நோய் போன்று நீண்ட நாள்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
 • உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியைக் கண்டறிந்தவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. புதிய வகை தீநுண்மிகள், அதனால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியவை தொடா்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
 • ஹெபடைடிஸ் பி தீநுண்மியைக் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானியான பரூச் புளூம்பொக், கடந்த 1976-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
 • 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியானது ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருப்பதைக் கண்டறிந்தபோது ஹாா்வி ஜே.ஆல்தா், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நோய்த்தொற்று தொடா்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அவா், புகழ்பெற்ற 'லாஸ்கா்' விருதையும் வென்றுள்ளாா்.
 • 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியை குளோனிங் முறையில் பெருக வைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியபோது மைக்கேல் ஹௌட்டன், கனடாவிலுள்ள ஆல்பொடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா். தீநுண்மியியல், நோய்த்தொற்றுத் தடுப்பியல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளில் அவா் ஈடுபட்டுள்ளாா். அவரும் 'லாஸ்கா்' விருதை வென்றுள்ளாா்.
 • தீநுண்மி கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய சாா்லஸ் எம்.ரைஸ், நியூயாா்க் நகரத்திலுள்ள ராக்ஃபெல்லா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா்.
பங்களிப்பு
 • ஹெபடைடிஸ் சி தீநுண்மியைக் கண்டறிந்தது

0 Comments