Type Here to Get Search Results !

TNPSC 3rd OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விண்ணில் செலுத்தப்பட்டது 'கல்பனா சாவ்லா' விண்கலம்

  • சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவைப்படும் பொருள்களை ஏற்றிக் கொண்டு, கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரிடப்பட்ட விண்கலத்தை தனது 'சிக்னஸ்' ராக்கெட் மூலம் வா்ஜீனியா மாகாணம், வாபாப்ஸ் தீவிலுள்ள ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டிருந்தது.
  • எனினும், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு வானிலை சரியானதைத் தொடா்ந்து அந்த விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
  • அந்த விண்கலத்தில், விண்வெளியில் நடக்கும்போது பயன்படுத்துவதற்கான 360 டிகிரி கோண கேமரா, பெண்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கழிவறை, பல வகையான உணவுப் பொருள்கள், விண்வெளியில் பயிரிடுவதற்கான முள்ளங்கி விதைகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.

சவ்ரியா ஏவுகணை சோதனை வெற்றி

  • ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில், சவ்ரியா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நடத்திய இந்த சோதனையில், வங்காள விரிகுடாவில் வைக்கப்பட்ட இலக்கை சவ்ரியா துல்லியமாக தாக்கி அழித்தது. 
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டே சவ்ரியா தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 1,000 கிமீ வரையிலான இலக்கைச் சென்று துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும். 
  • உலகின் மிகச்சிறந்த 10 ஏவுகணைகளில் ஒன்று என்ற பெருமையை சவ்ரியா பெற்றுள்ளது. எதிரி நாட்டினரால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பது தனிச்சிறப்பு. மேலும், செயற்கைக்கோள்களின் பார்வையிலும் சிக்காது. ஒலியை விட பலமடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும்.

அடல் சுரங்கப்பாதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • இமாச்சல பிரதேசத்தின் ரோதங் கணவாய் கீழே, மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் 9.02 கிமீ தூரத்திற்கு அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இது, மலைகளின் மீது 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இதனால், உலகில் மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ரூ.3,300 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இந்த சுரங்கப்பாதையின் மூலம் மணாலி-லே இடையே 46 கிமீ தூரம் குறைந்து, 4-5 மணி நேர பயண நேரமும் குறைகிறது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2002ம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

ரிலையன்ஸ் ரீடெய்லில் TPG நிறுவனம் ₹ 1837 கோடி முதலீடு

  • தொலைதொடர்பு சேவையைத் தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். அந்தவகையில் சில்வர்லேக், ஜெனரல் அட்லாண்டிக், முபதலா உள்ளிட்ட பெரு நிறுவனங்களை தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி முதலீடு நிறுவனம் 5512 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
  • ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1.22 சதவீத பங்குகளின் மூலம், ஜி.ஐ.சி.நிறுவனம் இந்த முதலீட்டை செய்துள்ளது. அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த டி.பி.ஜி.தனியார் முதலீடு நிறுவனமும், 0.41 சதவீத பங்குகளின் மூலம், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் 1837 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

இந்தியா-வங்கதேச கடற்படைகளின் 2வது கூட்டு பயிற்சி 

  • 'பாங்கோசாகர்' என்ற பெயரில் இந்தியா, வங்கதேசம் கடற்படைகள் இடையே கடந்தாண்டு முதல் கூட்டு பயிற்சி தொடங்கியது.
  • இரு நாடுகள் இடையேயான 2வது கூட்டு பயிற்சி வடக்கு வங்க கடல் பகுதியில் தொடங்கியது.
  • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கில்டன், குக்ரி போர் கப்பல்களும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் பங்கேற்றுள்ளன. இதே போல் வங்க தேச போர்க்கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றன.
  • இந்த கூட்டு பயிற்சி முடிந்த பின் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ரோந்து பயிற்சிகள் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கின்றன.
  • சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்து பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இந்த கூட்டு ரோந்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel