Type Here to Get Search Results !

TNPSC 2nd OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 


இந்திய போர் விமானங்களுக்கு ரூ.660 கோடியில் உதிரிபாகங்கள் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் ஒப்புதல்

  • அமெரிக்காவின் லாக்கிட் மார்ட்டின் நிறுவனம் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை தயாரித்து வருகிறது. இவற்றை சரக்கு விமானங்களாகவும் போர் விமானங்களாகவும் பயன்படுத்த முடியும். 
  • கடந்த 2008-ம் ஆண்டில் லாக்கிட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து ரூ.6,000 கோடி விலையில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களை இந்தியா வாங்கியது. இவை இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
  • தற்போது 5 விமானங்கள் மட்டுமே உள்ளன. இந்த ரகத்தைச் சேர்ந்த மேலும் 6 விமானங்களை வாங்க அமெரிக்கா வுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த பின்னணியில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு தேவையான ரேடார், ஜிபிஎஸ் கருவிகள், இரவில் பார்க்க உதவும் கண்ணாடி உள்ளிட்ட உதிரி பாகங் களை வழங்குமாறு லாக்கிட் மார்ட்டின் நிறுவனத்திடம் கோரப்பட்டது. இவற்றை வழங்க அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு ரூ.660 கோடி மதிப்பிலான உதிரி பாகங்களை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்பு துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்திய பெருங்கடல் பசிபிக், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
  • உலகம் முழுவதும் 17 நாடுகளுக்கு மட்டுமே சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த விமானங்களில் 20 டன் எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல முடியும். 
  • அதாவது ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள், கனரக வாகனங்கள், படகுகளை கொண்டு செல்ல முடியும். போர் முனைக்கு வீரர்களையும் அழைத்துச் செல்ல முடியும். ஓடுபாதையில் மிக குறுகிய தொலைவிலேயே மேலெழும்பும் திறன் படைத்தது.
  • லடாக்கில் இந்திய - சீன எல்லைக் கோட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள டவ்லத் பெக் ஓல்டியில் சிறிய அளவிலான விமானப் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் அண்மையில் தரையிறக்கப்பட்டது.
நேபாளத்துக்கு 41 ஆம்புலன்ஸ் நன்கொடை வழங்கிய இந்தியா
  • மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நம் தரப்பில் நேபாளத்தில் செயல்படும் பல்வேறு அமைப்பினருக்கு, 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகள், நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டன. 
  • இவற்றுடன், நம் நாட்டின் சார்பில், 1994 முதல், அந்நாட்டிற்கு, 823 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வழங்கியுள்ள சிறப்பு வகை ஆம்புலன்ஸ்களில், வென்டிலேட்டர், இ.சி.ஜி., கருவிகள், சக்கர நாற்காலி, இணைய சேவை வசதிகள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான புனேவில் ஆய்வு மையம் தொடக்கம்
  • மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான மேற்கு பிராந்திய மையத்தை சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா தொடங்கி வைத்தார். 
  • ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் கீழ் இந்த மையம் செயல்படும்.
  • நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் விஜய் பட்கர், தாவரவியல் துறையின் தலைவரும் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் டாக்டர் ஏ பி அடே, தேசிய மருத்துவ குணமுள்ள தாவரங்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஜெ எல் சாஸ்திரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
  • நிகழ்ச்சியில் பேசிய கொட்டேச்சா, மருத்துவ குணமுள்ள தாவரங்களை பயிரிடுவதில், வாரியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதில் மருத்துவ குணமுள்ள தாவரங்களுக்கான பிராந்திய மையம் பெரும் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel