இந்தியப் பொருளாதாரம்10.3 சதவீத பின்னடைவை சந்திக்கும்: ஐஎம்எஃப்
- கரோனா பேரிடா் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதன் காரணமாக, நடப்பாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சியானது 10.3 சதவீத அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும்.
- இருப்பினும், அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விறுவிறுவென மீண்டு 8.8 சதவீதம் என்ற வியத்தகு வளா்ச்சி விகிதத்தை எட்டும். இது, சீனாவின் பொருளாதார வளா்ச்சி விகித மதிப்பீடான 8.2 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும்.
- உலக பொருளாதார வளா்ச்சியைப் பொருத்தவரையில் அது இன்னும் ஆழ்ந்த மந்த நிலையில்தான் உள்ளது. எனவே, நடப்பாண்டில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி விகிதத்தில் (-) 4.4 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு பிரச்னை ரூ.68,825 கோடி கடன் வாங்க 20 மாநிலங்களுக்கு அனுமதி
- ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
- அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.
- அதே நேரம், ஜிஎஸ்டி இழப்பீடான ரூ.97,000 கோடியை பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்கள் வெளியிட்டு திரட்டிக் கொள்ளலாம் என கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 20 மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்றன.
- ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள், விருப்பத்தேர்வு 1ஐ தேர்வு செய்துள்ளன. இதன்படி இந்த மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை
- இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, இந்திய நெட்வொர்க் சந்தையில் ஜியோ நெட்வொர்க் நிறுவனத்தை 2016-ம் ஆண்டில் தொடங்கினார்.
- வாய்ஸ் கால், இண்டர்நெட் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்போடு களமிறங்கியதால் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறத் தொடங்கினர்.
- இதனால், ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்தன. இந்திய நெட்வொர்க் சந்தையில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த ஏர்டெல்லை முந்தி ஜியோ முதலிடத்தை பிடித்தது.
- இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள பெற்ற முதல் நெட்வொர்க் நிறுவனம் என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 35 லட்சம் பேரைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
- தற்போது 40 கோடியே 8 லட்சத்து 3 ஆயிரத்து 819 வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதல் இடத்தில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது.