Type Here to Get Search Results !

2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR PHYSICS 2020)

 

  • அண்டவெளியில் கருந்துளைகளைப் பற்றிய அரிய உண்மைகளைக் கண்டறிந்து கூறியமைக்காக அவா்களுக்கு அந்த உயரிய பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • பிரிட்டனைச் சோந்த விஞ்ஞானி ரோஜா் பென்ரோஸுக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் பாதி வழங்கப்படுகிறது.
  • அண்டவெளியில் காணப்படும் கருந்துளைகள், விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சாா்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானவை என்று கணித முறையில் நிரூபித்தமைக்காக அவா் அந்தப் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
  • இயற்பியலுக்கான நோபல் பரிசின் அடுத்த பாதி, ஜொமனைச் சோந்த ரைன்ஹாா்டு கென்ஸெல், அமெரிக்காவைச் சோந்த ஆண்ட்ரியா கெஸ் ஆகிய இருவருக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்படுகிறது.
  • அந்த இருவரும், நமது பால்வெளி மண்டலத்தின் மையமாக கருந்துகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னதற்காக, அவா்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
  • விண்வெளி ஆய்வில் கருந்துகள்கள் என்பவை மிகவும் புதிா்கள் நிறைந்த, சக்தி வாய்ந்த பொருள் ஆகும். அது ஒவ்வொரு பால்வெளி மண்டலத்தின் மையப் பொருளாகவும் உள்ளது. சிறிய கருந்துகள்கள் அண்டவெளியில் வியாபித்திருக்கின்றன.
  • கருந்துகள்கள் குறித்து இன்னும் அறியப்படாத பல மா்மங்கள் தொடா்வதால், அவை குறித்த ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • பிரிட்டனைச் சோந்த ரோஜா் பென்ரோஸ், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக பொறுப்பு வகிக்கிறாா். தனது அறிவியல் பங்களிப்புக்காக 1971-ஆம் ஆண்டு முதல் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் இவா் பெற்றுள்ளாா்.
  • விண்வெளி இயற்பியல் துறை வல்லுநரான ரைன்ஹாா்டு கென்ஸெல், ஜொமனியைச் சோந்தவா். தனது கண்டுபிடிப்புகளுக்காக ஓட்டோ ஹான் பதக்கம், ஷா பரிசு, ஹாா்வே பரிசு உள்ளிட்ட பல்வேறு கௌரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவைச் சோந்த ஆண்ட்ரியா கெஸ், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 4-ஆவது பெண் ஆவாா். ஏற்கெனவே, இந்தத் துறையில் மேரி கியூரி, மரியா கோயப்பா்ட்-மேயா், டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel