- ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல் துறை சாதனை யாளர்களுக்கு நோபல் பரிசு கள் வழங்கப்படுகின்றன.
- உலகின் உயர்ந்த விருதாக இது கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, மருத்துவம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குரியவர் பெயர் அறிவிக்கப்பட்டது.
- ஏலம் விடுவது தொடர்பான புதிய கோட்பாடுகளை உருவாக்கியதற்காக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்கள் பால் மில்குரோம், 72, ராபர்ட் வில்சன், 83, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான, பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்களான பால் மில்குரோம், ராபர்ட் வில்சன், இந்தாண்டு பொருளாதார நோபல் பரிசைப் பெற உள்ளனர்.
- ஏலம் விடுவது தொடர்பாக புதிய கோட்பாடுகளை வகுத்ததுடன், புதிய வழிமுறைகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். அது பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. மேலும், ஏல முறை குறித்த ஆராய்ச்சிகளையும், இவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
- ரேடியோ அலைவரிசை, மீன் பிடிக்க குத்தகை, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் நேரம் ஒதுக்க என, பல்வேறு விஷயங்களுக்கு, இவர்களது கோட்பாடுகள் சரியான தீர்வாக அமைந்துள்ளதாக, தேர்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
- விருது பெறும் மில்குரோம், பிஎச்.டி., படித்தபோது, அவரது வழிகாட்டியாக இருந்தவர் வில்சன். கடந்த, 1970களில் இருந்தே, ஏலம் தொடர்பான ஆய்வுகளில் இருவரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.