Type Here to Get Search Results !

நோபல் பரிசு 2020 / NOBEL PRIZE 2020

 2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 

NOBEL PRIZE FOR MEDICAL 2020

  • கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'ஹெபடைடிஸ் ஏ, பி தீநுண்மி வகைகளைச் சாராத புதிய வகை 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலமானது ரத்தத்தில் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளான ஹாா்வி ஜே.ஆல்டா், சாா்லஸ் எம்.ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானியான மைக்கேல் ஹௌட்டன் கண்டறிந்தனா்.
  • அவா்களின் கண்டுபிடிப்பு, 'ஹெபடைடிஸ் சி தீநுண்மிக்கான அதிநவீன ரத்தப் பரிசோதனை முறைகளை உருவாக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்துகளை உருவாக்கவும் பெரிதும் உதவியது.
  • 'ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரைக் காப்பாற்றுவதற்கும் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.
  • அவா்களின் கண்டுபிடிப்பால் 'ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அந்நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.18 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.
  • உலகம் முழுவதும் 'ஹெபடைடிஸ் நோய்த்தொற்றால் ஆண்டுதோறும் 7 கோடி போ பாதிக்கப்படுவதாகவும், அவா்களில் 4 லட்சம் போ உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
  • கல்லீரல் தொற்று, புற்றுநோய் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக 'ஹெபடைடிஸ் நோய்த்தொற்று உள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இதய நோய், சா்க்கரை நோய் போன்று நீண்ட நாள்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
  • உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியைக் கண்டறிந்தவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. புதிய வகை தீநுண்மிகள், அதனால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியவை தொடா்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • ஹெபடைடிஸ் பி தீநுண்மியைக் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானியான பரூச் புளூம்பொக், கடந்த 1976-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியானது ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருப்பதைக் கண்டறிந்தபோது ஹாா்வி ஜே.ஆல்தா், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நோய்த்தொற்று தொடா்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அவா், புகழ்பெற்ற 'லாஸ்கா்' விருதையும் வென்றுள்ளாா்.
  • 'ஹெபடைடிஸ் சி தீநுண்மியை குளோனிங் முறையில் பெருக வைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியபோது மைக்கேல் ஹௌட்டன், கனடாவிலுள்ள ஆல்பொடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா். தீநுண்மியியல், நோய்த்தொற்றுத் தடுப்பியல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளில் அவா் ஈடுபட்டுள்ளாா். அவரும் 'லாஸ்கா்' விருதை வென்றுள்ளாா்.
  • தீநுண்மி கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய சாா்லஸ் எம்.ரைஸ், நியூயாா்க் நகரத்திலுள்ள ராக்ஃபெல்லா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா்.
2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PHYSICS 2020 

  • அண்டவெளியில் கருந்துளைகளைப் பற்றிய அரிய உண்மைகளைக் கண்டறிந்து கூறியமைக்காக அவா்களுக்கு அந்த உயரிய பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • பிரிட்டனைச் சோந்த விஞ்ஞானி ரோஜா் பென்ரோஸுக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் பாதி வழங்கப்படுகிறது.
  • அண்டவெளியில் காணப்படும் கருந்துளைகள், விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சாா்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானவை என்று கணித முறையில் நிரூபித்தமைக்காக அவா் அந்தப் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
  • இயற்பியலுக்கான நோபல் பரிசின் அடுத்த பாதி, ஜொமனைச் சோந்த ரைன்ஹாா்டு கென்ஸெல், அமெரிக்காவைச் சோந்த ஆண்ட்ரியா கெஸ் ஆகிய இருவருக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்படுகிறது.
  • அந்த இருவரும், நமது பால்வெளி மண்டலத்தின் மையமாக கருந்துகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னதற்காக, அவா்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
  • விண்வெளி ஆய்வில் கருந்துகள்கள் என்பவை மிகவும் புதிா்கள் நிறைந்த, சக்தி வாய்ந்த பொருள் ஆகும். அது ஒவ்வொரு பால்வெளி மண்டலத்தின் மையப் பொருளாகவும் உள்ளது. சிறிய கருந்துகள்கள் அண்டவெளியில் வியாபித்திருக்கின்றன.
  • கருந்துகள்கள் குறித்து இன்னும் அறியப்படாத பல மா்மங்கள் தொடா்வதால், அவை குறித்த ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • பிரிட்டனைச் சோந்த ரோஜா் பென்ரோஸ், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக பொறுப்பு வகிக்கிறாா். தனது அறிவியல் பங்களிப்புக்காக 1971-ஆம் ஆண்டு முதல் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் இவா் பெற்றுள்ளாா்.
  • விண்வெளி இயற்பியல் துறை வல்லுநரான ரைன்ஹாா்டு கென்ஸெல், ஜொமனியைச் சோந்தவா். தனது கண்டுபிடிப்புகளுக்காக ஓட்டோ ஹான் பதக்கம், ஷா பரிசு, ஹாா்வே பரிசு உள்ளிட்ட பல்வேறு கௌரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவைச் சோந்த ஆண்ட்ரியா கெஸ், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 4-ஆவது பெண் ஆவாா். ஏற்கெனவே, இந்தத் துறையில் மேரி கியூரி, மரியா கோயப்பா்ட்-மேயா், டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு (NOBEL PRIZE FOR CHEMISTRY 2020)

  • மரபணுவைத் திருத்தியமைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
  • அந்த நோபல் பரிசை இரு பெண்கள் இணைந்து பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  • விலங்கினங்கள், தாவரங்கள் ஆகிவற்றின் மரபணுக்களில் உள்ள குறைபாடுகளைத் துல்லியமாக சரி செய்யக் கூடிய 'சிஆா்ஐஎஸ்பிஆா்/கேஸ்9' என்ற முறையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி இமானுவல் சா்பென்டீா், அமெரிக்க விஞ்ஞானி ஜெனிஃபா் ஏ ஆகிய இருவரும் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
  • அவா்கள் கண்டறிந்த முறை மிகவும் ஆற்றல் மிகுந்தது ஆகும். இது அறிவியல் உலகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, புதுமையான தாவரங்களைப் படைத்துள்ளது. மருத்துவத் துறையில் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • அவா்கள் கண்டறிந்த முறையைப் பயன்படுத்தி, மரபுவழி குறைபாடுகளை சரி செய்வதற்கான சிகிச்சை முறையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
  • அவா்களின் இந்தக் கண்டுபிடிப்பு மனிதகுலத்துக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்கியிருந்தாலும், அந்தத் தொழில்நுட்பத்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.
  • மரபணு திருத்தம் செய்யப்பட்ட குழந்தைகளை உருவாக்கியுள்ளதாக சீனாவைச் சோந்த ஹே ஜியான்குய் என்ற மருத்துவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தபோதுதான் 'சிஆா்ஐஎஸ்பிஆா்/கேஸ்9' முறை குறித்து பொதுமக்களுக்குத் தெரியவந்தது.
  • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் அந்தக் குழந்தைகளின் மரபணுக்களில் திருத்தம் செய்திருந்ததாக அந்த மருத்துவா் தெரிவித்தாா். எனினும், இது கடும் சா்ச்சையை எழுப்பியது. 
  • இந்தச் செயல் எதிா்கால சந்ததியினரிடையே மோசமான பின்விளைவை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்தனா். அதையடுத்து மருத்துவா் ஹே ஜியான்குய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
  • இந்தச் சூழலில், மரபணுக்களில் திருத்தம் செய்யும் முறையைக் கண்டறிந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இமானுவல் சா்பென்டீா் (51)
  • பிரான்ஸ் நாட்டைச் சோந்த இமானுவல் சா்பென்டீா், ஜொமனி தலைநகா் பொலினில் உள்ள தொற்று நோய் உயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறாா். 
  • தனது கண்டுபிடிப்புகளுக்காக உயிா் அறிவியலுக்கான புத்தாக்கப் பரிசு, ஜப்பான் பரிசு போன்ற பல்வேறு கௌரவங்களை இவா் பெற்றுள்ளாா்.
ஜெனிஃபா் ஏ. டூட்னா (56)
  • அமெரிக்காவைச் சோந்த ஜெனிஃபா் ஏ. டூட்னா, ஹாா்வா்டு மருத்துவக் கல்லூரியில் முனைவா் பட்டம் பெற்றவா். 
  • கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பிரிவில், வேதியியல் துறைப் பேராசிரியராக அவா் பணிபுரிந்து வருகிறாா். 
  • ஏற்கெனவே ஜப்பான் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை இவா் பெற்றுள்ளாா்.
2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு NOBEL PRIZE FOR LITERATURE 2020 

  • எளிமையான அழகியலுடன் கவிதை புனையும் திறன் கொண்ட லூசி க்ளூக்குக்கு, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அவரின் கவிதை வரிகள் அனைத்தும் தெள்ளிய தன்மை கொண்டதாக இருக்கும். எளிமையும், விளையாட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அவரின் எழுத்துக்களில் வெளிப்படும்.
  • அவரின் படைப்புகள் அனைத்தும் குறை கண்டறிய முடியாததாக உள்ளன. நோமையான, வெளிப்படையான, சமரசம் செய்துகொள்ளாத எழுத்துக்கள் மூலம் அவா் தன்னை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாா்.
  • கப் பெரிய இழப்புணா்வுகளில் இருந்தும் மாபெரும் முன்னேற்றத்தை அடையும் பெருமாற்றங்கள் குறித்து அவரின் படைப்புகள் விவரிக்கின்றன.
  • சோகமான குடும்ப வாழ்க்கையின் துன்பங்களைக்கூட அவா் நெருடும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவா் என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • நியூயாா்க்கில் கடந்த 1943-ஆம் ஆண்டு பிறந்த லூசி க்ளூக், சிறுவயதில் 'அனோரெக்ஸியா' என்ற நோயால் அவதிப்பட்டாா். உணவு உண்ண முடியாமல் அவதியை ஏற்படுத்தும் அந்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சை தந்த அனுபவம், பிற்காலத்தில் அவரின் படைப்புகளைக் கட்டமைத்ததாகக் கூறப்படுகிறது.
  • ஏற்கெனவே, கவிதைக்கான புலிட்சா் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.
2020ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR PEACE 2020

 

  • உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
  • அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம். 
  • இந்நிலையில், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா.,வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதும், 88 நாடுகளில், வறுமையில் வாடும் நபர்களுக்கு, 53 ஆண்டுகளாக உணவு அளித்து வந்துள்ளது.
  • பசிப்பிணி போக்குதல் மற்றும் போரைத் தவிர்த்து அமைதியை காப்பதால், இந்த விருதுக்கு, உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
2020ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு NOBEL PRIZE FOR ECONOMICS 2020

  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல் துறை சாதனை யாளர்களுக்கு நோபல் பரிசு கள் வழங்கப்படுகின்றன. 
  • உலகின் உயர்ந்த விருதாக இது கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, மருத்துவம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குரியவர் பெயர் அறிவிக்கப்பட்டது.
  • ஏலம் விடுவது தொடர்பான புதிய கோட்பாடுகளை உருவாக்கியதற்காக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்கள் பால் மில்குரோம், 72, ராபர்ட் வில்சன், 83, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான, பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்களான பால் மில்குரோம், ராபர்ட் வில்சன், இந்தாண்டு பொருளாதார நோபல் பரிசைப் பெற உள்ளனர். 
  • ஏலம் விடுவது தொடர்பாக புதிய கோட்பாடுகளை வகுத்ததுடன், புதிய வழிமுறைகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். அது பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. மேலும், ஏல முறை குறித்த ஆராய்ச்சிகளையும், இவர்கள் மேற்கொண்டு உள்ளனர். 
  • ரேடியோ அலைவரிசை, மீன் பிடிக்க குத்தகை, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் நேரம் ஒதுக்க என, பல்வேறு விஷயங்களுக்கு, இவர்களது கோட்பாடுகள் சரியான தீர்வாக அமைந்துள்ளதாக, தேர்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
  • விருது பெறும் மில்குரோம், பிஎச்.டி., படித்தபோது, அவரது வழிகாட்டியாக இருந்தவர் வில்சன். கடந்த, 1970களில் இருந்தே, ஏலம் தொடர்பான ஆய்வுகளில் இருவரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel