அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள்
- தலைநகர் தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதன்படி இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும், ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ., அலுவலகம்; உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
- சென்னையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
- இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன.
- இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியா டெலிகாம் ஒழுங்குமுறை அமைப்பு-ன் (TRAI) புதிய தலைவரின் நியமனம் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மருந்து துறை செயலாளர் பி.டி. வாகேலா இப்போது TRAI-ன் புதிய தலைவராக இருப்பார் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- வாகேலியின் நியமனம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் நீடிப்பார். அவர் தற்போதைய தலைவர் RS சர்மாவின் பதவியில் அமர்வார்.
- குஜராத் கேடரின் வாகேலா அக்டோபர் 1 முதல் பொறுப்பேற்கவுள்ளார். வாகேலா தற்போது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையில் (டிஓபி) இருக்கிறார், அங்கு அவர் செப்டம்பர் 30 வரை ஒரு வருடம் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- மருந்துத் துறைக்கு முன்பு, வாகேலா குஜராத்தில் வணிக வரி ஆணையராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பட்டியலில் முக்கிய பங்கு வகித்த குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் அவரும் அடங்குவார்.
இந்தியா டென்மாா்க் உச்சி மாநாடு
- பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-டென்மாா்க் உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
- இந்தியா டென்மாா்க் இடையிலான உச்சிமாநாடு காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெட்ரிக்சனுடனான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி கூறியதாவது:
- ஜனநாயக மதிப்பீடுகள், ஒப்புக்கொண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளின்படி கூட்டாகப் பணிபுரிதல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.
- சரக்கு மற்றும் சேவைகளின் உலகளாவிய விநியோகத்தில் ஒருவரை அதிக அளவில் சாா்ந்திருந்தால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை கரோனா தொற்று புலப்படுத்தியுள்ளது.
- இதை கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவைகள் விநியோகத்தை பன்முகப்படுத்துவதற்கான பணிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா பணிபுரிந்து வருகிறது.
- கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு, அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ஒருமித்த கருத்துடைய நாடுகளின் ஒத்துழைப்பு உதவும் என்று தெரிவித்தாா்.
- பேச்சுவாா்த்தையை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 'பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீா்வளம், நீடித்த நகா் மேம்பாடு, வணிகம், வேளாண்மை, கடல் வாணிபம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
- அரசியல் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார உறவுகளை விஸ்தரிக்கவும், உலகளாவிய பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிக்கும்.
- இதுதவிர, உலக வா்த்தக அமைப்பில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பங்காற்றவும் இருநாட்டு தலைவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தில் இலவச ஆழ்துளை கிணறு ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்
- ஆந்திர மாநில முதல்வர் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தண்ணீர் கனவு (ஜல கலா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- மாநிலத்தில் 2 லட்சம் ஆழ்துளை கிணறு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 144 கிராமப்புற தொகுதிகள், 19 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் போர் ஒத்திகைப் பயிற்சி
- அரபிக் கடலில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்திய கடற்படைகளும் ஜப்பான் கடற்படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- இவை 5 கட்டங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை செப்., 26 துவங்கியது.
- வடக்கு அரபிக்கடல் பகுதியில் நடந்த இப்பயிற்சியின் நான்காவது கட்டத்தில் இரு நாட்டினைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
- இந்தியாவின் சென்னை தர்க்காஷ், தீபக் போர்க்கப்பல்களும், ஜப்பான் நாட்டின் இகாசுச்சி, காகா போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.