- பெருந்தொற்று காலத்திலும் கடுமையாக உழைத்து பெருமளவு அறுவடையை உறுதி செய்திருக்கும் விவசாயிகளின் கைகளில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பத்திரமாக இருக்கிறது. பயிர் நஷ்டத்தால் ஏற்படும் நிதிச்சுமையால் விவசாயிகள் அவதியுறாத வகையில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், சராசரி விளைச்சலை கருத்தில் கொண்டு நிதியின் அளவை மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் இல்லாத பயிர்களுக்கு 30 சதவீதமும், நீர்ப்பசனம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதமும் மத்திய மானியம் கிடைக்கும்.
- தானியங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 327-க்கும், வேர்க்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 540-க்கும், சோளம் விதைத்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 5215-க்கும், தினை விதைத்துள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 189-க்கும், செப்டம்பர் 30-க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். திருச்சிராப்பள்ளியில், கரும்பு விவசாயிகள் அக்டோபர் 31-க்குள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ 2,650 செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பயிர் கடன்களை பெற்றுள்ள விவசாயிகள் தாங்கள் கடன் வாங்கியுள்ள வங்கியிலேயே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் நெல், தானியங்கள், வேர்க்கடலை, சோளம், தினை ஆகியவற்றுக்கு மொத்த காப்பீட்டு தொகையில் வெறும் 2 சதவீதமும், பருத்திப் பயிர்களுக்கு மொத்த காப்பீட்டு தொகையில் வெறும் 5 சதவீதமும் செலுத்தினால் போதும்.
- தமிழகத்தில் இது வரை 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ 1258 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- மொத்த பிரிமீயம் தொகையான ரூ 156 கோடியில், மத்திய அரசு ரூ 58 கோடியும், தமிழ் நாடு அரசு ரூ 72 கோடியும், விவசாயிகள் ரூ 26 கோடியும் செலுத்தியுள்ளனர். கட்டுபடியாகக்கூடிய காப்பீட்டின் மூலம் வேளாண் உற்பத்திக்கு ஆதரவு அளிப்பதற்காக 2016 கரீப் பருவத்தில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது.
- எதிர்பாராத நிகழ்வுகளால் பயிர் நஷ்டம்/பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் வேளாண் துறையில் நீடித்த உற்பத்திக்கு ஆதரவு அளிப்பதை பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- புதுமையான மற்றும் நவீன வேளாண் நடைமுறைகளில் ஈடுபட விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. குறுகிய கால பருவம் சார்ந்த வேளாண் செயல்முறை கடன்கள்/குறிப்பிட்ட பயிர்களுக்கான விவசாயி கடன் அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
- 2017 கரிப் பருவத்தில் இருந்து பயிர் கடன் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிர் கடனுக்கான இலக்கு இந்த வருடம் ரூ 400 கோடியாக இருக்கும் நிலையில், திருச்சிராப்பள்ளியில் உள்ள 13,111 விவசாயிகளுக்கு இது வரை ரூ 102 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் எப்போதுமே பாதிக்கப்படுவதால், எந்தவிதமான நெருக்கடியில் இருந்தும் அவர்கள் மீளும் வகையில் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வேளாண் சட்டங்கள் சமீபத்தில் இயற்றப்பட்டன.