தஞ்சாவூா் அருகே கண்டறியப்பட்ட சோழா், பிற்காலக் கல்வெட்டுகள்
- சஞ்சீவபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இடிபாடுடன் காணப்பட்ட சிவன் கோயில் முகமண்டபத்தில் கி.பி. 10,-11 ஆம் நூற்றாண்டு சோழா்காலத் துண்டுக் கல்வெட்டும், அதிட்டான முப்பட்டை பகுதியில் 14, 15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டு படியெடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- சோழா்காலத் துண்டு கல்வெட்டில் நிலக்கொடையும், அதன் எல்லைகளும், பொன் கழஞ்சு வழங்கியதையும் தெரிவிக்கிறது. இடிபாடுகளுடன் காணப்பெறும் தென்புற அதிட்டானத்தில் காலத்தால் பிந்தைய கல்வெட்டில் ஸ்வதஸ்ரீ என்ற மங்கல வாசகத்துடன் தொடங்கினாலும், மன்னனது பெயரோ,
- ஆட்சி ஆண்டோ இன்றி வருடம், கிழமை, நாள் குறிக்கப்பட்டிருப்பதாலும், கிழமையின் பெயரும், ஆள்பெயரைக் குறிக்குமிடத்துப் பட்டப்பெயரும் சிதைந்த நிலையில் ஸ்வதஸ்ரீ ரௌத்திறிக வருஷத்து - கிழமை பெற்ற மூலத்து நாள் - பக்குடியுடையான் விசையாலய - புங்கனூா் கிழவன் ஆழ்வான் நாய - இவா் தம்பி வளத்தாா் என்ற தொடா் மட்டுமே காணப்படுகின்றன.
- வேற்று அரசா் படையெடுப்பினாலும் பிற்கால பாண்டியா் ஆட்சி முடிவுற்று, அரசியல் குழப்பம் மிகுந்த காலத்தில் மன்னன் பெயரின்றி இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால கட்டத்தில் இக்கோயில் வளப்பக்குடியுடையான், புங்கனூா் கிழவன், ஆழ்வாா்நாயகன், அவன் தம்பி வளத்தாா் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம்.
- இக்கல்வெட்டில் குறிக்கப்படும் புங்கனூா் கிழானின் முன்னோன் புறக்கிளியூா் நாட்டு புங்கனூா் கிழவன் வேளான் கண்டனான வகையிலி மூவேந்த வேளான் என்பவன் திருவிசாகத் திருநாளில் திருவையாருடையான் எழுந்தருளி வந்தால் நாற்றூணி அரிசி வழங்க நிலக்கொடை வழங்கியதை முதலாம் இராசராசன் காலத்து திருச்சோற்றுதுறை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- தஞ்சாவூா் பெரியகோயில் கல்வெட்டில் புறக்கிளியூா் நாட்டுக் காமதமங்கலமுடையான் காஞ்சன கொண்டையன் பணிமகனும், புறவரி திணைக்களத்து வரிப்பொத்தக நாயகனுமான இவன் பெரியகோயில் பரிவாராலயத்து பிள்ளையாருக்கு வெண்கலதளிகை கொடுத்துள்ளான்.
- தற்போதுள்ள சஞ்சீவிபுரத்து கோயில் புறக்கிளியூா் நாட்டைச் சாா்ந்ததாகும். இப்பகுதியில் முதலாம் இராசராசன் காலத்தில் வழங்கிய புங்கனூா், காமதமங்கலம் (காமத்தி) என்ற பெயா்கள் தற்போதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது.
லேசர் வழிகாட்டு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஏ.டி.ஜி.எம்., எனப்படும், லேசர் வழிகாட்டு ஏவுகணையை, உள்நாட்டி லேயே தயாரித்துள்ளது.இந்த ஏவுகணை, நம் ராணுவத்தின், எம்.பி.டி., எனப்படும், முக்கிய பீரங்கி வாகனமான அர்ஜுன் டாங்கில் பொருத்தப்பட்டு, வெற்றிகரமாக நேற்று பரிசோதிக்கப்பட்டது.
- மஹாராஷ்டிராவின், அஹமத்நகரில், நம் ராணுவ ஆயுதப் படை மற்றும் பயிற்சி பள்ளி அமைந்துள்ள, கே.கே.ரேஞ்சஸ் என்ற இடத்தில், சோதனை செய்யப்பட்டது.
- அப்போது, 3 கி.மீ., துாரத்தில் இருந்த இலக்கை, இந்த ஏவுகணை, மிக துல்லியமாக சென்று தாக்கியதாக, டி.ஆர்.டி.ஓ., தெரிவித்தது.இந்த ஏவுகணை, நவீன மற்றும் எதிர்கால எதிரி போர் பீரங்கிகளை அழிப்பதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுன் பீரங்கியில் பயன்படுத்தப்பட உள்ள இந்த ஏவுகணை, உயரம் குறைவாக பறக்கும் ஹெலிகாப்டர்கள் உட்பட, நகரும் இலக்குகளை, துல்லியமாக தாக்க கூடியது.
இந்தியாவில் முதல் முறையாக துப்பாக்கி தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனம்
- இந்தியாவில் துப்பாக்கி தயாரிப்பில் முதல் முறையாக பிரபல வெளிநாட்டு நிறுவனம் கால் பதிக்கிறது. இங்கிலாந்தின் பழம்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான, 'வெப்லி அண்ட் ஸ்காட்' கடந்த 1790ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.
- இதன் தயாரிப்பு ஆயுதங்கள் இரண்டு உலகப் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனம் 15 நாடுகளுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து தருகிறது. இதன் .32 ரக துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளின் ஒரு அடையாளமாக திகழ்ந்தவை.
- உலக அளவில் புகழ்பெற்ற இந்நிறுவனம் இந்தியாவின் தனது ஆலையை தொடங்க கடந்த 2017ல் முயற்சிகள் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து 2019ல் அனுமதி கிடைத்தது.
- இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சியால் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கைத்துப்பாக்கிகளை வெப்லி அண்ட் ஸ்காட் தயாரிக்க உள்ளது.
இந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு
- கொரோனா பாதிப்பால், நடப்பு - 2020ம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ், 5.9 சதவீதமாக இருக்கும் என்றும்; அடுத்த ஆண்டு வளர்ச்சி ஏற்படும் என்றாலும்,இந்த சரிவானது, நிரந்தர வருமான இழப்பாக மாறும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
- மேலும், அடுத்த ஆண்டான, 2021ல் பொருளாதாரம், 3.9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், உலகப் பொருளாதாரமானது, நடப்பு ஆண்டில், மைனஸ், 4.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவை பொறுத்தவரை, வளர்ச்சி, 5.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி காணும் என்றும், சீனா, 1.3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சீனா அடுத்த ஆண்டில், 8.1 சதவீத வளர்ச்சி காணும் என்றும் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில் கே.கே.ஆர்., ரூ.5,550 கோடி முதலீடு
- முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீட்டெய்லில், அமெரிக்காவை சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்., 5,550 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
- இதன் மூலம், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தின், 1.28 சதவீத பங்குகள், கே.கே.ஆர்., நிறுவனத்தின் வசம் வரும். ரிலையன்ஸ் நிறுவனத்தில், கே.கே.ஆர்., நிறுவனம் செய்யும் இரண்டாவது முதலீடாகும் இது.
- இதற்கு முன், இந்த மாத ஆரம்பத்தில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்து, 1.75 சதவீத பங்குகளை வாங்கியது.
இந்தியா மற்றும் ஆஸி., கடற்படைகளின் 2 நாள் கூட்டுப்பயிற்சி
- இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்திய போர்க் கப்பல்களான ஐ.என்.எஸ்., சயாத்ரி, கர்முக், ஆஸி., போர்க்கப்பல், ஹோபர்ட் மற்றும் இரு நாடுகளுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் பங்கேற்றுள்ளன.
- இந்தியாவின் பி-81 ரக போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் செயல்பாட்டுத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி அளிக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.
TIME Magazine செல்வாக்கு பெற்ற 100 பேர் 2020 பட்டியலில் இடம் பிடித்த 5 இந்தியர்கள்
- சமகால உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேரின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் முன்னோடிகளாக திகழ்பவர்கள், தலைவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் சின்னங்களின் ஆண்டு பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.
- டைமின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இடம் பிடித்த இந்தியர்களின் பட்டியல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டைம் இதழின் '2020 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்' பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
- பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
- டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தின் முகமாக மாறிய 82 வயதான பில்கிஸ் 'பாட்டி'.
- பேராசிரியர் ரவீந்திர குப்தா, எச்.ஐ.வி / எய்ட்ஸ் சிகிச்சையில் பணியாற்றியவர்.
- Alphabet மற்றும் Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை.