Type Here to Get Search Results !

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப பார்வை / Technical Vision introduced by the Reserve Bank of India

  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் இணைய வழி பரிவர்த்தனைகளை பாதுகாக்கும் வகையில் அதை மேம்படுத்தும் "தொழில்நுட்ப பார்வை" ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • இதில் GUARD என்ற ஐந்து தூண் பாதுகாப்பு முறையை செயல்படுத்துகிறது. GUARD ஆனது நிர்வாக மேற்பார்வை, தொழில்நுட்ப முதலீடு, பொருத்தமான ஒழுங்கு முறை, இணைய பாதுகாப்பு திறன் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • ரிசர்வ் வங்கி தரப்பில் "தொழில்நுட்ப பார்வை" இணைய பாதுகாப்பு குறித்த போர்டு மேற்பார்வை மற்றும் நகர்புற கூட்டுறவு வங்கிகளின் ஐடி சொத்துக்களை சிறப்பாக நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் இது உதவும் என்று தெரிவித்துள்ளது.
  • சைபர் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் வங்கிகளுக்கான ஆஃப்சைட் மேற்பார்வை முறையை இது செயல்படுத்தும். மேலும், ஆவணங்களை பாதுகாப்பது சிக்கல்கள், சவால்களை சரி செய்வது ஆகியவற்றில் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.
  • பங்குதாரர்களுக்கு கணக்கு பங்கு பரிவர்த்தனைகளை பகிர்வதற்கான பாதுகாப்பையும் இந்த தொழில்நுட்ப பார்வை உறுதிப்படுத்துகிறது, என்று ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கிகளின் கீழ் கொண்டு வரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சட்டம் வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு வைப்புத் தொகையையும் பாதுகாக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel