அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது.
- அவ்வகையில், வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
- ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
- ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் முதல் முறை எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதா நிறைவேற்றம்
- வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தன.
- எனவே, ஆளும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை மட்டுமே அவை அலுவலில் பங்கேற்றன.
- இதனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே ஒரே நாளில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவை வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.
- இந்திய தொழில்நுட்ப கழக (திருத்த) மசோதா, கொள்ளை நோய்கள் (திருத்த) மசோதா, அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா, கம்பெனிகள் (திருத்த) மசோதா, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், தேசிய தடய அறிவியல் பல்கலை மசோதா மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலை மசோதா.
5 ஐ.ஐ.டி.,க்களுக்கு தேசிய அங்கீகாரம் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்
- இந்தியாவில், ஐ.ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையங்கள், 25 உள்ளன. அதிகாரம் இல்லைஇவற்றில், 5 மையங்களை, மத்திய அரசு நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் கூட்டுடன், 15 மையங்கள் நடத்தப்படுகின்றன.
- இவற்றுடன், குஜராத்தின் சூரத், மத்திய பிரதேசத்தின் போபால், பீஹாரின், பாகல்பூர், கர்நாடகாவின் ரெய்ச்சூர், திரிபுராவின் அகர்தலா நகரங்களில், புதிய, ஐ.ஐ.டி.,க்கள் துவக்கப்பட்டு உள்ளன.
- கடந்த, 1860ம் ஆண்டின் சொசைட்டி ரிஜிஸ்டிரேஷன் சட்டத்தின் கீழ் செயல்படும் இந்த மையங்களுக்கு, பட்டம் அல்லது பட்டயங்கள் வழங்குவதற்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த மையங்களுக்கு தேசிய அங்கீகாரம் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம், புதிய ஐந்து, ஐ.ஐ.டி.,க்கள், மாணவர்களுக்கு தேசிய அங்கீகாரத்துடன் பட்டயங்கள், பி.டெக்., எம்.டெக்., பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்க முடியும்.
- இதனால், இந்த மையங்கள், அதிக அளவில் மாணவர்களை ஈர்த்து, தகவல் தொழில்நுட்ப துறையில் வலுவான ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்த முடியும். இம்மையங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டுடன் செயல்படும்.
- புதிய கல்விக் கொள்கை, புதிய இந்தியாவை கட்டமைக்க உதவும். ஐ.ஐ.டி.,க்களுக்கு மத்திய அரசு, 50 சதவீத மானியம் வழங்குகிறது. மாநில அரசுகள், 35 சதவீதமும், தொழில்துறை, 15 சதவீத பங்களிப்பையும் வழங்குகின்றன.
- வட கிழக்கு மாநிலத்தில் மட்டும், தொழில்துறையினரின் பங்களிப்பிலும், 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து நடந்த விவாதத்திற்கு பின், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன், சட்ட திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரான 370 பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
- காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
- காஷ்மீரில் தற்போது உருது மற்றும் காஷ்மீரி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளித்து அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாக அடுத்த பெரிய நடவடிக்கையாக அலுவல் மொழிகள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள அகழ்வாராய்ச்சியில் ரோமானிய பேரரசரின் முத்திரை கண்டுபிடிப்பு
- கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே கொடுங்கல்லூர்- பரவூருக்கு இடையிலான 'பட்டணம்' எனும் பகுதி உள்ளது. இங்கு 'பாமா' தொல்பொருள் நிறுவனம் தலைமையில் 10வது சீசன் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
- இதில், ரோமானிய பேரரசராக அகஸ்டஸ் சீசர் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பயன்படுத்திய மோதிர முத்திரை 'ஸ்பின்க்ஸ்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிர முத்திரை கிமு 1 முதல் கிபி 1ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.
- மேலும் கிரேக்க-ரோமானிய கலை மரபில் மனித தலையின் சிறிய சிற்பமும் அங்கு காணப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக குழுக்களின் தங்குதளமாக ேகரள மாநிலம் 'பட்டணம்' பகுதி இருந்து வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆதாரமாக இவை உள்ளன.
- இவை 'பட்டணம்' பகுதியில் இருந்து கிடைக்கும் 3வது பழங்கால ெபாருட்கள் ஆகும். ஏற்கனவே, விலைமதிப்பற்ற கொர்னேலிய கல்லால் செய்யப்பட்ட 2 லாக்கெட்டுகள் இங்கிருந்து கிடைத்துள்ளன. அவற்றில் சிங்கம் வடிவ லாக்கெட் 2010ல் கண்டுபிடிக்கப்பட்டது.
- அதுபோல ரோமானிய தெய்வமான 'பார்ச்சூன்' உருவத்துடன் கூடிய லாக்கெட் 2014ம் ஆண்டில் கிடைத்தது. இவை 3ம் ஒரே பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரேக்க - ரோமானிய காலத்தில் மோதிர முத்திரையாக பயன்படுத்தப்பட்ட, விலைமதிப்பற்ற இந்த கலைப்பொருட்கள், தெற்காசியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- ேமலும் பட்டணம்' பகுதியில் கண்டெடுத்த ஸ்பின்க்ஸ்'சும், அகஸ்டஸ் சீசர் பயன்படுத்திய ேமாதிர முத்திரையும் ஒன்றுபோல் உள்ளன என ரோமின் அகழ்வாராய்ச்சி இயக்குநரும், ரோம் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜூலியோ ரோகோவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.