ஆர்பிஐ கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் மசோதா நிறைவேற்றம்
- கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது.
- பொதுமக்களின் சேமிப் புக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் கூட்டுறவு வங்கி களை ரிசர்வ் வங்கி கண்காணிப்பின்கீழ் கொண்டுவர புதிய மசோதா வழிவகை செய்துள்ளது.
- இதன் மூலம் கடந்த ஜூன் 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் அமலாக வழியேற் பட்டுள்ளது. இதன்படி கூட்டுறவு சங்க பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வரும்.
- நாட்டில் மொத்தம் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இனி இவை அனைத்தும் ரிசர்வ் வங்கி கண்காணிப் பின்கீழ் வரும்.
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா
- இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார்.
- இந்த ராஜினாமாவிற்கு மொத்தம் மூன்று சட்ட மசோதாக்கள் காரணம் ஆகும். இந்த மசோதாக்களை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லோக்சபாவில் நிறைவேறிய 3 விவசாய மசோதாக்கள்
- மசோதா 1 - விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020;
- மசோதா 2 - விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020
- மசோதா 3 - அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020.
- இதில் மசோதா 1 செவ்வாய் கிழமை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட நிலையில், மீதம் உள்ள இரண்டு மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பில் வென்றது.
1. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020
- இந்த மசோதா மூலம் அதிகார்பூர்வ விவசாய மார்க்கெட்கள், மண்டிகளுக்கு வெளியிலும் விவசாய பொருட்களை விற்க முடியும். குறிப்பிட்ட இடத்தில்தான் விவசாய பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை போய், இனி எங்கும் வேண்டுமானாலும் இதை வர்த்தகம் செய்யலாம்.
- அதேபோல் வெளியில் இப்படி செய்யப்படும் வர்த்தகத்திற்கு மார்க்கெட் வரி உள்ளிட்ட வரிகளை மாநில அரசுகள் பெற முடியாது. அதேபோல் இப்படி பொருட்களை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டியது இல்லை
2. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020
- பண்ணை பொருட்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், அதை வாங்குவதையும் ஒழுங்குபடுத்த இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
- இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் தங்கள் பண்ணை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
3. அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020
- இந்த திருத்த மசோதா மொத்தமாக அத்தியாவசிய பொருட்களின் சந்தையை மாற்ற போகிறது. இதன் மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்படுகிறது.
- இதனால் இந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இனிமேல் எந்த கட்டுப்பாடும் இருக்காது.
புனே பொறியியல் கல்லூரிக்கு உத்கிருஷ்ட் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருது
- அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு 14 பிரிவுகளில் இரண்டாவது உத்கிருஷ்ட் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதை விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் வழங்கினார்.
- 900-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த வருட விருதுக்காக தங்களை பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், 14 பிரிவுகளில் 34 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- புனே பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த பிரிவில் முதல் பரிசை வென்றது. 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்து சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது.