Type Here to Get Search Results !

TNPSC 10th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய - ஜப்பான் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

  • இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. அத்துடன், இந்தியா, நேபாளம் போன்ற அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 
  • இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு நாடுகளும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் மற்றும் ஜப்பான் தூதர் சுசுகி சடோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
  • இரு நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பு, இரு நாட்டு ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளுதல், ரகசிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் உட்பட அனைத்து அம்சங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தி உள்ளது.
  • இதுபோன்ற ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த நாடுகளில் உள்ள ராணுவ வசதிகளை இந்தியா இணைந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். 
  • அங்குள்ள விமான தளங்கள், துறைமுகங்களை இந்தியா தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும். அதேபோல் அந்த நாடுகளும் இந்தியாவில் உள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
  • சீனாவும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதார் துறைமுகங்களில் தனது நிலையை பலப்படுத்தி இருக்கிறது. அங்கு தனது போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி உள்ளது. 
  • மேலும், கம்போடியா போன்ற சிறிய நாடுகளிலும் தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு அருகில் மட்டும் 6 முதல் 8 போர்க் கப்பல்களை சீனா நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கரிபியன் பிரிமீயர் லீக் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

  • வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தது. 
  • இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில், பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. 

அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயா்

  • சா்வதேச விண்வெளிக் கலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுக்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, அமெரிக்காவின் நாா்த்ராப் குருமன் நிறுவனம் தனது சிக்னக் விண்கலத்தை தயாா் செய்து வருகிறது.
  • அந்த விண்கலத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோந்த கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியிருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 
  • இந்தியாவின் பஞ்சாம் மாநிலத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கலத்தின் மூலம் கடந்த 1997-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றாா்.
  • அதனைத் தொடா்ந்து, 2003-ஆம் ஆண்டு விண்வெளி சென்று திரும்பிய கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில், அதிலிருந்த கல்பனா சாவ்லாவும், மற்ற 6 விண்வெளி வீரா்களும் உயிரிழந்தனா்.

ஏற்றுமதி மற்றும் வருவாயை அதிகரிக்க மீன்வளத்தை பெருக்க ரூ20,050 கோடியில் திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னாவை செப்டம்பர் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் நுட்பம் மூலம் தொடங்கி வைக்கிறார்.
  • தற்சார்பு இந்தியா அறிவிப்பின் ஒரு பகுதியாக, பிரதமர் மீன்வள திட்டத்தில் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை ரூ20,050 கோடியில் மீன்வளத்துறை மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. 
  • 2024-25 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 70 லட்சம் டன் அளவுக்கு மீன் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 2024-25ல் மீன்வளத் துறையின் ஏற்றுமதி ரூ.1,00,000 கோடியளவுக்கு இருக்கும். 
  • மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு வருவாய் இரட்டிப்பாகும். மீன்களைப் பிடித்த பிறகு ஏற்படும் இழப்புகளை 20-25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும். 
  • மீன்வளத் துறை மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூடுதலாக 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • இதில் கடல் சார்ந்த தொழில்கள், மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ12,340 கோடியும், மீன்வளத்துக்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ7,710 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • மீனவர்கள் மற்றும் பண்ணை குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
  • அப்போது அவர் பேசியதாவது: இந்த திட்டம் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 4 முதல் 5 ஆண்டுகளில் ரூ20,000 கோடி முதலீடு செய்யப்படும். இதில் முதல் கட்டமாக தற்போது ரூ1,700 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 
  • இந்த திட்டத்தின் கீழ் பாட்னா, பூர்ணியா, சீதாமார்கி, மாதேபுரா, கிஷான்கஞ்ச் மற்றம் சமஸ்திபூர் ஆகிய இடங்களிலும் பல்வேறு வசதிகள் கொண்டுவரப்படுகின்றன. 
  • மீன்வளத்துறையில் புதிய உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள் மற்றும் மீனவர்கள் புதிய சந்தைகளை அணுக இந்த திட்டம் வழி வகுக்கும். வரும் 3 அல்லது 4 ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
  • மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம், உற்பத்தி நிலை, மீன் பிடித்த பிறகு கையாள்வதற்கான கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, நவீனப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு சங்கிலியை பலப்படுத்துதல், தடமறிதல், மீன்வள மேலாண்மை கட்டமைப்பை உடனுக்குடன் மேற்பார்வை செய்தல் மற்றும் மீனவர்களின் நலன் ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதாக இது இருக்கும். 
  • நீலப் புரட்சித் திட்டத்தின் சாதனைகளை உறுதிப்படுத்தும் அதேசமயத்தில், மீன்பிடி கலன் காப்பீடு, மீன்பிடி கலன் / படகுகளை புதிதாக வாங்குதல் / தரம் உயர்த்துதலுக்கு உதவி, பயோ டாய்லெட்கள், உப்பு / உவர்நிலப் பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, சாகர் மித்ராக்கள், எப்.எப்.பி.ஓ.கள்/சி.கள், தாய் கருவாக்கல் மையங்கள், மீன்வளம் மற்றும் நீர்வள உயிரின வளர்ப்பு ஸ்டார்ட் அப்கள், தொடக்க நிலை முயற்சிகள், ஒருங்கிணைந்த அக்குவா பூங்காக்கள், ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமங்கள் வளர்ச்சி, நீர்வாழ் உயிரின ஆய்வகங்கள் நெட்வொர்க் மற்றும் விரிவாக்க சேவைகள், தடமறிதல், சான்றளித்தல் மற்றும் அங்கீகாரம் பெறுதல், ஆர்.ஏ.எஸ்., பயோபிளாக் & கூண்டு முறை, இ-டிரேடிங் / மார்க்கெட்டிங், மீன்வள மேலாண்மைத் திட்டங்கள் போன்றவற்றில் புதிய முயற்சிகளை எடுக்கவும் இத் திட்டம் வகை செய்கிறது.
  • `தொகுப்பு அல்லது அந்தப் பகுதி சார்ந்த அணுகுமுறைகளில்' இத் திட்டம் முதன்மையாக கவனத்தைச் செலுத்தும். கழிமுகப் பகுதிகள் மற்றும் தண்ணீர் செல்லும் தொடர்புப் பகுதிகள் மூலம் மீன்வள தொகுப்புப் பகுதிகள் உருவாக்கப்படும். 
  • கடற்பாசி சேகரித்தல் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். 
  • தரமான மீன்குஞ்சுகள் உற்பத்தி, தீவனம் அளித்தல், இனங்கள் பரவலாக்கத்தில் சிறப்பு கவனம், முக்கியமான கட்டமைப்பு வசதிகள், சந்தைப்படுத்தல் தொடர்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • இப்போதைக்கு, முதல்கட்டமாக இத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ.1723 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. வருவாய் உருவாக்கும் திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.
  • பிஹாரில் இத் திட்டத்தில் ரூ.1390 கோடி முதலீடு செய்யப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு ரூ.535 கோடியாக இருக்கும். இதனால் கூடுதலாக 3 லட்சம் டன் மீன் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • நடப்பு நிதியாண்டில் (2020-21) பிகாரில் மறுசுழற்சி நீர்வாழ் உயிரிழன முறைமை, நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு பயோபிளாக் குளங்கள் உருவாக்குதல், செயற்கைமுறை மீன் குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்புக்குப் புதிய குளங்கள் உருவாக்குதல், அலங்கார மீன் வளர்ப்புப் பிரிவுகள், நீர்நிலைகள் / ஈரமான பகுதிகளில் கூண்டுகள் நிறுவுதல், ஐஸ் தயாரிப்பு நிலையங்கள், குளிர்பதனம் செய்த வாகனங்கள், ஐஸ் பெட்டிகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், ஐஸ் பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனங்கள், ஐஸ் பெட்டியுடன் கூடிய சைக்கிள், மீன்களுக்கான தீவன பயிர்கள், விரிவாக்கம் மற்றும் ஆதரவு சேவைகள், தரமான குஞ்சுகள் கிடைக்கும் வங்கி உருவாக்குதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ரூ.107 கோடி ஒதுக்கியுள்ளது.
இ-கோபாலா என்ற செயலி அறிமுகம்
  • மீனவர்கள், பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சந்தைப்படுத்தல் தகவல்களை அறிந்துகொள்ள இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். 
  • இ-கோபாலா என்பது விரிவான கலப்பின உற்பத்தி சந்தைப்படுத்தலுக்கு உதவுவதாகவும், விவசாயிகளின் நேரடி பயன்பாட்டுக்கான முனையமாகவும் இருக்கும். 
  • இப்போது விந்து, சினைக்கரு போன்ற இனப்பெருக்கம் சார்ந்த ஊனீர்களை நோயற்றதாக வாங்க மற்றும் விற்க டிஜிட்டல் வசதி எதுவும் இல்லை; 
  • தரமான இனச்சேர்க்கை சேவைகள் அளிப்பது (செயற்கைக் கருத்தரித்தல், கால்நடை முதலுதவி, தடுப்பூசி, சிகிச்சை போன்றவை) கால்நடை சத்துணவு குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுதல், பொருத்தமான ஆயுர்வேதா மருந்து/ இனக்குழு கால்நடை மருந்துகள் பயன்படுத்துதல் ஆகிய வசதிகள் இதன் மூலம் கிடைக்கும். 
  • தடுப்பு மருந்து தர வேண்டிய காலம், கருத்தரிப்பை கண்டறிதல், குட்டிகள் வளர்ப்பு போன்றவை குறித்து தகவல்கள் அனுப்பவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அந்தப் பகுதியில் அமல் செய்யப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவும் இப்போது எந்த நடைமுறையும் அமலில் இல்லை. 
  • உற்பத்தியை 70 லட்சம் டன் அதிகரிப்பது
  • மீன் ஏற்றுமதி, வருவாயை இரட்டிப்பாக்குவது
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம்
  • பிகார் மாநிலம் புர்ணியாவில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அளித்த 75 ஏக்கர் நிலத்தில் ரூ.84.27 கோடி செலவில் இது அமைந்துள்ளது. 
  • அரசுத் துறையில் மிகப் பெரிய விந்து உற்பத்தி நிலையமாக இது இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் விந்து தொகுப்புகள் இங்கு உருவாக்கப்படும். 
  • பிகாரில் உள்ள உள்நாட்டு மீன்வளங்களைப் பாதுகாப்பதில் இது புதிய வடிவத்தை அளிக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விந்து தேவைகளை இது பூர்த்தி செய்யும்.
  • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.வி.எப். ஆய்வகத்தை பாட்னாவில் கால்நடை பராமரிப்புப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 
  • 100 சதவீத மானிய உதவியுடன் நாடு முழுக்க மொத்தம் 30 இ.டி.டி மற்றும் ஐ.வி.எப். ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. உள்நாட்டு இனங்களின் மேன்மையான இனங்களை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கி, உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும் இது இருக்கும்.
  • ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பிகாரில் பெருசராய் மாவட்டத்தில் பரோனி பால் ஒன்றியத்தில் செயற்கைக் கருவூட்டலுக்கு பாலினம் தேர்வு செய்த விந்தணு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 
  • செயற்கைப் புலனறிதல் மூலமாக, பாலினம் தேர்வு செய்யப்பட்ட விந்தணு பயன்படுத்துவதால் பெண் இனங்கள் மட்டுமே உருவாகும் (90 சதவீதம் வரையில் துல்லியத்தன்மை இருக்கும்) இதனால் நாட்டில் பால் உற்பத்தி இரட்டிப்பாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel