தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கை / TAMILNADU ELECTRONICS HARDWARE MANUFACTURING POLICY 2020
TNPSCSHOUTERSSeptember 08, 2020
0
தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கை -- 2020 ஐ, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார். தொழில் துறை அமைச்சர் சம்பத் பெற்றுக் கொண்டார்.
கொள்கையின் நோக்கங்கள்
வரும், 2025க்குள், தமிழகத்தின் மின்னணுவியல் துறை உற்பத்தி உயர்த்தப்படும்.
இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பை, 25 சதவீதமாக உயர்த்துவோம்.
2024க்குள், மின்னணு வன்பொருள் உற்பத்தி துறையின், மனிதவள தேவையை பூர்த்தி செய்ய, ஒரு லட்சம் பேருக்கு, பயிற்சி அளிக்கப்படும்
மொபைல் போன்கள், எல்.இ.டி., தயாரிப்புகள், 'பேப்லெஸ் சிப்' வடிவமைப்புகள், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகன மின்னணுவியல் போன்ற துறைகளில், தமிழகத்தில் செய்யப்படும், மதிப்பு கூட்ட அளவு கணிசமாக அதிகரிக்கப்படும்
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துதல் மற்றும் தொழிலகங்களுக்கு உகந்த சூழலை வளர்த்தெடுப்போம்.
முக்கிய அம்சங்கள்
மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில், முதலீடு செய்ய முனைவோருக்கு, முதலீட்டு தொகையில், 30 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும்
தொழில் ரீதியாக, பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் திட்டங்களை செயல்படுத்துவோருக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நிலம் வாங்கும் செலவில், 50 சதவீத மானியம் தரப்படும்
நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு, அதிகபட்சமாக, ௫ சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்
மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழிலகங்கள் வாங்கும் நிலங்களுக்கு, 50 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை, முத்திரை தீர்வுகளுக்கு விலக்களிப்பு உண்டு
முதன் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம்; பெண் ஊழியர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு, மாதம் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம் வழங்கப்படும்
ஐந்து ஆண்டுகளுக்கு, மின்சார வரிவிலக்கு தரப்படும். அறிவுசார் மூலதனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சான்றளிப்பு மானியம், காப்புரிமை விண்ணப்பங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை, 50 சதவீத மானியம் தரப்படும்.
சான்றிதழ்களுக்கு, ஒரு நிறுவனத்திற்கு, 1 கோடி ரூபாய் வரை, 50 சதவீதம் மானியம் தரப்படும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மானியம் மற்றும் நடைமுறையில் உள்ள தொழில் கொள்கை 2014ன்படி இதர சலுகைகள் உண்டு
பெரிய முதலீடுகள் அல்லது சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு, சிறப்பு தொகுப்பு சலுகை வழங்கப்படும்.
பிற சலுகைகள்
மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையங்கள் அருகில், தொழிலகங்களில் பணிபுரிவோருக்கு, குடியிருப்பு திட்டங்கள் உருவாக்கப்படும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வழியாக, புத்தாக்க மானியங்கள், புத்தொழில் மானியங்கள், விதை மூலதனம் போன்ற சலுகைகள் வழியாக, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.