- பிகார் மாநிலம் புர்ணியாவில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அளித்த 75 ஏக்கர் நிலத்தில் ரூ.84.27 கோடி செலவில் இது அமைந்துள்ளது.
- அரசுத் துறையில் மிகப் பெரிய விந்து உற்பத்தி நிலையமாக இது இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் விந்து தொகுப்புகள் இங்கு உருவாக்கப்படும்.
- பிகாரில் உள்ள உள்நாட்டு மீன்வளங்களைப் பாதுகாப்பதில் இது புதிய வடிவத்தை அளிக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விந்து தேவைகளை இது பூர்த்தி செய்யும்.
- ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.வி.எப். ஆய்வகத்தை பாட்னாவில் கால்நடை பராமரிப்புப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- 100 சதவீத மானிய உதவியுடன் நாடு முழுக்க மொத்தம் 30 இ.டி.டி மற்றும் ஐ.வி.எப். ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. உள்நாட்டு இனங்களின் மேன்மையான இனங்களை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கி, உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும் இது இருக்கும்.
- ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பிகாரில் பெருசராய் மாவட்டத்தில் பரோனி பால் ஒன்றியத்தில் செயற்கைக் கருவூட்டலுக்கு பாலினம் தேர்வு செய்த விந்தணு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- செயற்கைப் புலனறிதல் மூலமாக, பாலினம் தேர்வு செய்யப்பட்ட விந்தணு பயன்படுத்துவதால் பெண் இனங்கள் மட்டுமே உருவாகும் (90 சதவீதம் வரையில் துல்லியத்தன்மை இருக்கும்) இதனால் நாட்டில் பால் உற்பத்தி இரட்டிப்பாகும்.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் / Rashtriya Gokul Mission Scheme
September 11, 2020
0