Type Here to Get Search Results !

பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா / Pradhan Mantri Matsya Sampada Yojana

 

  • பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னாவை செப்டம்பர் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் நுட்பம் மூலம் தொடங்கி வைக்கிறார்.
  • தற்சார்பு இந்தியா அறிவிப்பின் ஒரு பகுதியாக, பிரதமர் மீன்வள திட்டத்தில் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை ரூ20,050 கோடியில் மீன்வளத்துறை மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. 
  • 2024-25 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 70 லட்சம் டன் அளவுக்கு மீன் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 2024-25ல் மீன்வளத் துறையின் ஏற்றுமதி ரூ.1,00,000 கோடியளவுக்கு இருக்கும். 
  • மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு வருவாய் இரட்டிப்பாகும். மீன்களைப் பிடித்த பிறகு ஏற்படும் இழப்புகளை 20-25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும். 
  • மீன்வளத் துறை மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூடுதலாக 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • இதில் கடல் சார்ந்த தொழில்கள், மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ12,340 கோடியும், மீன்வளத்துக்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ7,710 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • மீனவர்கள் மற்றும் பண்ணை குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
  • அப்போது அவர் பேசியதாவது: இந்த திட்டம் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 4 முதல் 5 ஆண்டுகளில் ரூ20,000 கோடி முதலீடு செய்யப்படும். இதில் முதல் கட்டமாக தற்போது ரூ1,700 கோடி முதலீடு செய்யப்படுகிறது. 
  • இந்த திட்டத்தின் கீழ் பாட்னா, பூர்ணியா, சீதாமார்கி, மாதேபுரா, கிஷான்கஞ்ச் மற்றம் சமஸ்திபூர் ஆகிய இடங்களிலும் பல்வேறு வசதிகள் கொண்டுவரப்படுகின்றன. 
  • மீன்வளத்துறையில் புதிய உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள் மற்றும் மீனவர்கள் புதிய சந்தைகளை அணுக இந்த திட்டம் வழி வகுக்கும். வரும் 3 அல்லது 4 ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
  • மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம், உற்பத்தி நிலை, மீன் பிடித்த பிறகு கையாள்வதற்கான கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, நவீனப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு சங்கிலியை பலப்படுத்துதல், தடமறிதல், மீன்வள மேலாண்மை கட்டமைப்பை உடனுக்குடன் மேற்பார்வை செய்தல் மற்றும் மீனவர்களின் நலன் ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதாக இது இருக்கும். 
  • நீலப் புரட்சித் திட்டத்தின் சாதனைகளை உறுதிப்படுத்தும் அதேசமயத்தில், மீன்பிடி கலன் காப்பீடு, மீன்பிடி கலன் / படகுகளை புதிதாக வாங்குதல் / தரம் உயர்த்துதலுக்கு உதவி, பயோ டாய்லெட்கள், உப்பு / உவர்நிலப் பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, சாகர் மித்ராக்கள், எப்.எப்.பி.ஓ.கள்/சி.கள், தாய் கருவாக்கல் மையங்கள், மீன்வளம் மற்றும் நீர்வள உயிரின வளர்ப்பு ஸ்டார்ட் அப்கள், தொடக்க நிலை முயற்சிகள், ஒருங்கிணைந்த அக்குவா பூங்காக்கள், ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமங்கள் வளர்ச்சி, நீர்வாழ் உயிரின ஆய்வகங்கள் நெட்வொர்க் மற்றும் விரிவாக்க சேவைகள், தடமறிதல், சான்றளித்தல் மற்றும் அங்கீகாரம் பெறுதல், ஆர்.ஏ.எஸ்., பயோபிளாக் & கூண்டு முறை, இ-டிரேடிங் / மார்க்கெட்டிங், மீன்வள மேலாண்மைத் திட்டங்கள் போன்றவற்றில் புதிய முயற்சிகளை எடுக்கவும் இத் திட்டம் வகை செய்கிறது.
  • `தொகுப்பு அல்லது அந்தப் பகுதி சார்ந்த அணுகுமுறைகளில்' இத் திட்டம் முதன்மையாக கவனத்தைச் செலுத்தும். கழிமுகப் பகுதிகள் மற்றும் தண்ணீர் செல்லும் தொடர்புப் பகுதிகள் மூலம் மீன்வள தொகுப்புப் பகுதிகள் உருவாக்கப்படும். 
  • கடற்பாசி சேகரித்தல் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். 
  • தரமான மீன்குஞ்சுகள் உற்பத்தி, தீவனம் அளித்தல், இனங்கள் பரவலாக்கத்தில் சிறப்பு கவனம், முக்கியமான கட்டமைப்பு வசதிகள், சந்தைப்படுத்தல் தொடர்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • இப்போதைக்கு, முதல்கட்டமாக இத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ.1723 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. வருவாய் உருவாக்கும் திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.
  • பிஹாரில் இத் திட்டத்தில் ரூ.1390 கோடி முதலீடு செய்யப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு ரூ.535 கோடியாக இருக்கும். இதனால் கூடுதலாக 3 லட்சம் டன் மீன் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • நடப்பு நிதியாண்டில் (2020-21) பிகாரில் மறுசுழற்சி நீர்வாழ் உயிரிழன முறைமை, நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு பயோபிளாக் குளங்கள் உருவாக்குதல், செயற்கைமுறை மீன் குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்புக்குப் புதிய குளங்கள் உருவாக்குதல், அலங்கார மீன் வளர்ப்புப் பிரிவுகள், நீர்நிலைகள் / ஈரமான பகுதிகளில் கூண்டுகள் நிறுவுதல், ஐஸ் தயாரிப்பு நிலையங்கள், குளிர்பதனம் செய்த வாகனங்கள், ஐஸ் பெட்டிகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், ஐஸ் பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனங்கள், ஐஸ் பெட்டியுடன் கூடிய சைக்கிள், மீன்களுக்கான தீவன பயிர்கள், விரிவாக்கம் மற்றும் ஆதரவு சேவைகள், தரமான குஞ்சுகள் கிடைக்கும் வங்கி உருவாக்குதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ரூ.107 கோடி ஒதுக்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel