Type Here to Get Search Results !

TNPSC 3RD AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இருமொழி கல்விக் கொள்கையே தொடரும்: முதல்வா் பழனிசாமி உறுதி
  • தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எப்போதும் அனுமதிக்காது எனவும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்
பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்
  • பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். 
  • சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடந்த இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன், பந்தய தூரத்தை (52 லேப்) 1 மணி, 28 நிமிடம், 01.283 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். 
  • கடைசி சுற்றின்போது அவரது காரின் டயர் பங்ச்சர் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சாமர்த்தியமாக காரை இயக்கிய ஹாமில்டன் 7வது முறையாக பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ கோப்பையை 7வது முறையாக முத்தமிட்டார்.
  • ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+5.856 வி.) 2வது இடமும், பெராரி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (+18.474 வி.) 3வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை 4 பந்தயங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மெர்சிடிஸ் வீரர்கள் ஹாமில்டன் (88 புள்ளி), வால்டெரி போட்டாஸ் (58 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.
  • ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் (52 புள்ளி), மெக்லாரன் ரெனால்ட் வீரர் லேண்டோ நோரிஸ் (36 புள்ளி), பெராரியின் லெக்ளர்க் (33 புள்ளி) அடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஆந்திரத்தில் இ-ரக்ஷாபந்தன் திட்டம் அறிமுகம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்
  • ஆந்திரத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ-ரக்ஷாபந்தன் திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
  • ஆந்திர மாநில சிஐடி மற்றும் காவல்துறையின் சார்பில் சைபர் இணையக் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் ஒரு மாத கால திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இ-ரக்ஷாபந்தனின் ஒரு பகுதியாக இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கில் இணைய வல்லுநர்கள் பல்வேறு வகையான இணைய குற்றங்கள் குறித்து பேசுவதோடு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
  • இ-ரக்ஷாபந்தன் திட்டத்தையொட்டி வானொலி நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திரக் காவல்துறை மற்றும் மாநில சிஐடி பிரிவு ஆகஸ்ட் மாதத்தை சுதந்திரம் மற்றும் மின் பாதுகாப்பு மாதமாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel