Type Here to Get Search Results !

TNPSC 31st AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9% சரிவு

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன்பிறகு தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கில், மாநிலங்களுக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், நிலவிய ஊரடங்கால் நிறுவனங்கள், தொழில்துறைகள் பல மாதங்கள் முடங்கி கிடந்ததால், திரும்பவும் மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
  • ஏராளமானோர் வேலை பறிபோனதால் வாழ்வாதாரம் இழந்தனர். இதுதொடர்பாக தனியார் அமைப்புகள் கணிப்புகள் வெளியிட்டன. துறை வாரியாகவும் இழப்புகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
  • இந்த சூழ்நிலையில், இந்திய பொருளாதார சரிவு தொடர்பாக மத்திய அரசின் புள்ளியியல் துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 
  • அதில், நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது. 
  • கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. இதுபோல், உற்பத்தி துறையில் மொத்த மதிப்பு கூட்டு வளர்ச்சி 39.9 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 3 சதவீதம் அதிகரித்திருந்தது.
  • மொத்த மதிப்பு கூட்டல், கட்டுமான துறையில் 50.3 சதவீதம், சுரங்க துறையில் 23.3 சதவீதம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் சப்ளை மற்றும் இதர சேவை துறைகளில் 7 சதவீதம் சரிந்துள்ளது. 
  • வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து, தகவல் மற்றும் சேவைகள் துறைகளில் 47 சதவீதம், ரியல் எஸ்டேட் மற்றும் சேவைகளில் 5.3 சதவீதம், பொது நிர்வாகம், பாதுகாப்பு துறைகளில் 10.3 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் விவசாய துறை மட்டும் 3.4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 
  • ஜிடிபி கடந்த 2011-12 நிதியாண்டை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டதில், நடப்பு நிதியாண்டில் ரூ.26.90 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த மதிப்பு ரூ.35.35 சதவீதமாக உள்ளது. 
  • இதன்படி, ஜிடிபி 23.9 சதவீதம் சரிந்துள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது என மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்ததை விட கடும் பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  • நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் அரசின் மொத்த வருவாய் ரூ.2.03 லட்சம் கோடி. செலவு ரூ.10.5 லட்சம் கோடி என மத்திய அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. 
  • இதன்படி நிதிப்பற்றாக்குறை 8.21 லட்சம் கோடியாக உள்ளது. இது, பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டு முழுவதுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 103.1% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 7.5 சதவீதமாக இருக்கும் தனியார் அமைப்பில் இருந்த பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர். ஆனால், மத்திய அரசு 3.5% என மதிப்பீடு செய்திருந்தது.
  • முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, தொடர்ந்து 5வது மாதமாக, கடந்த ஜூலையில் 9.6% சரிந்துள்ளது. அதாவது, ஸ்டீல் 16.5%, சுத்திகரிப்பு 13.9%, சிமெண்ட் 13.5%, இயற்கை எரிவாயு 10.2%, நிலக்கரி 5.7%, கச்சா எண்ணெய் 4.9%, மின் உற்பத்தி 2.3% சரிந்துள்ளது. 
  • உர உற்பத்தி மட்டும் 6.9% அதிகரித்துள்ளது நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மேற்கண்ட 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 20.5% சரிந்துள்ளது என மத்திய அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் எதிர்க்கட்சி தலைவரானார் ப்ரித்தம் சிங்

  • சிங்கப்பூரில் கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. ப்ரித்தம் சிங்கின் ஒர்க்கர்ஸ் பார்ட்டி கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. 
  • இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், ப்ரித்தம் சிங்கை பிரதான எதிர்க்கட்சித்தலைவராக சபாநாயகர் இந்திராணி ராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறை.
இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே வர்த்தகரீதியிலான முதல் நேரடி விமானம்
  • டெல் அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்குச் சென்ற இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும், மருமகனுமான ஜரேட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும், இஸ்ரேல் அதிகாரிகளும் பயணம் செய்தனர்.
  • இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த ஆக. 13-ஆம் தேதி கையெழுத்தானது. 
  • அதன் தொடர்ச்சியாக இந்த விமானம் சென்றுள்ளது. அதில் பயணம் செய்த அதிகாரிகள், இரு நாடுகளிடையேயான ஒப்பந்தம் குறித்து மேலும் ஆலோசனை செய்வார்கள்.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 118 புதிய வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

  • 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 118 புதிய அவசர வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தரச் சான்றிதழ்களை வழங்கினார். 
  • தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் கீழ் மொத்தம் 1005 அவசர கால வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 65 பச்சிளம் குழந்தைகளுக்கான வாகனங்களும், 871 அடிப்படை அவசர கால மற்றும் மலையோரப் பகுதிகளுக்கான வாகனங்களும், 65 மேம்பட்ட அவசர கால வாகனங்களும், 41 இருசக்கர வாகன வாகனங்களும் இயங்கி வருகின்றன.
  • இதன்படி தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக, ரூ.20.65 கோடி மதிப்பீட்டில், 90 அவசரகால வாகனங்கள், ₹3.9 கோடி செலவில் அதிநவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 ரத்த தான வாகனங்கள், தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 18 அவசரகால வாகனங்கள் உள்ளிட்ட 118 ஆம்புலன்ஸ் வானங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • முதுகலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது எளிதில் செல்ல முடியாத கடினமான பகுதி, தொலைதூரப் பகுதி, மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசு மருத்துவர்களுக்கு, கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டது. 
  • இதை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2017ல் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மருத்துவ மேற்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து மருத்துவ சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • அதில்,'மருத்துவர்கள் பணிபுரியும் பகுதிகளை பாகுபடுத்தி வெயிட்டேஜ் நிர்ணயித்தது தவறு. அரசாணையில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை. 
  • அதனால் அதுகுறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில்,' மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் தற்போது பிறப்பிக்க முடியாது'' என உத்தரவிட்டிருந்தது.
  • இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உட்பட சில மாநிலங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
  • விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பு வாதத்தில்,'முதலாவதாக இந்த வழக்கு விவகாரத்தை பொருத்தமட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மாறுபட்ட வாதங்களை முனைத்து வருவதால், அதனை ஏற்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டது. 
  • இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவ கவுன்சில், ''பி.ஜி டிப்ளமோவிற்கு இட ஒதுக்கீடும், முதுநிலை மருத்துவப் படிப்புற்கு இன்சர்வீஸ் என்பதும் வருடங்களை கணக்கில் கொண்டு தான் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் இதில் மாநில அரசு தலையிட முடியாது'' என குறிப்பிடப்பட்டது.
  • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கடந்த ஜூலை 14ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண்மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,' முதுகலை மருத்துவப் படிப்பில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது.
  • இதில் இந்திய மருத்துவ கவுன்சில் தலையிட அதிகாரம் கிடையாது. குறிப்பாக மேற்கண்ட இடங்களில் சுமார் 5 ஆண்டுகள் மருத்துவர்கள் இன்சர்வீஸ் செய்து இருக்க வேண்டும். அதுகுறித்த வழிமுறைகளை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 
  • மேலும் இடஒதுக்கீடு அளிக்கும் விதிமுறை விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அதன் சட்டத்தை மீறுவது போன்று அதன் செயல்பாடுகள் உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஏற்கனவே இடஒதுக்கீடு இருந்தால் இந்த உத்தரவு என்பது அதனை பாதிக்காது'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
  • தமிழகத்தை பொருத்தமட்டில் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் இடங்கள் போக மீதம் இருக்கக்கூடிய சுமார் 950 இடங்களில் மலை கிராமப் பகுதிகள் போன்றவற்றில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு உள் இடஒதுக்கீடு வழங்கி வந்தது. 
  • இதில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் இதற்கு தடை விதித்ததால் கடந்த மூன்று வருடங்களாக நடைமுறைப் படுத்தாமல் இருந்து வந்த நிலையில், மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது 950 அரசு மருத்துவர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் புதிய பிரதமராக முஸ்தாபா அதிப் தேர்வு
  • லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் கடந்த ஆக.4-ம் தேதி 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து , பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 
  • 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.இந்த வெடிவிபத்திற்கு ஆளும் அரசின் அலட்சியம் தான் காரணம். உடனடியாக அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சர்களும் விலகினர். இந்நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக லெபனான் அதிபர் மைக்கேல் ஆவோன், பார்லி சபாநாயகர் நபிப் பெர்ரியை சந்தித்து பேசினார். 
  • இதையடுத்து புதிய பிரதமராக முஸ்தாபா அதிப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவர் லெபானானுக்கான ஜெர்மன் தூதராக இருந்தார்.
11 அடுக்கு உறை கிணறு: 6-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. 
  • இதில் கடந்த 7ம் தேதி அகரத்தில் நடைபெற்ற பணியின்போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கபட்டிருந்தது. இதன் ஒரு உறை என்பது முக்கால் அடி உயரமும், இரண்டு அறை அடி அகலமும் கொண்டுள்ளது.
  • மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டுபிடிக்கபட்ட நிலையில், இன்று மேலும் 6 உறைகள் சேர்த்து 11 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பண்டைய தமிழர்கள் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க உறை கிணற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண்க்கு ஒரு ரூபாய் அபராதம்
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தண்டனை அபராத தொகையான ஒரு ரூபாயை செலுத்துவதாக கூறியிருக்கிறார். 
  • இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 15க்குள் அவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
  • கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
  • இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
  • அதில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். 
  • அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel