மருத்துவ கழிவுகளை அகற்ற ஜெர்மன் - சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு
- மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மன் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளனர்.
- வேதிப்பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள், மருத்துவ கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை கையாள்வதில் தற்போது பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த மருத்துவ கழிவுகளை தற்பொழுது ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அளிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர்.
- இந்த மருத்துவ கழிவுகளை வைத்து உரம் தயாரித்து, கழிவுநீர் கழிவுகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளுடன் மிகக்குறைந்த சரி உள்ள ரசாயன கலவையை கலந்து மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.
விமானப்படை வேலை புதிய செயலி அறிமுகம்
- இந்திய விமானப்படை சார்பில், 'MY IAF' என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படை குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும், அனைத்துத் தகவல்களையும், அறிந்துகொள்ள முடியும். விமானப்படைக்குத் தேர்வாகும் முறை, பாடத்திட்டம், பயிற்சி, கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.
- மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலிகள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், 'உமாங்க்' (ஆதார் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறுவதற்கான செயலி), 'பீம்'(பணமில்லா பரிவர்த்தனைக்கான செயலி), 'டிஜி லாக்கர்' (கல்விச்சான்றிதழ் உள்ளவற்றை பாதுகாக்கும் செயலி), 'எம்பாஸ்போர்ட் சேவா' (பாஸ்போர்ட் பெறுவதை எளிமைப்படுத்துவதற்கான செயலி) போன்றவை பிரபலமானவை.
உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை வென்றுள்ளார் 20 வயது இந்திய இளைஞர்
- ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற Mental Calculation World Championship போட்டியில் உலகின் அதிவேகமான மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை வென்றுள்ளார்.
- லண்டனில் நடைபெற்ற உலகில் மனதில் அதிவேகமாக கணக்கு போடுவார்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியான Mental Calculation World Championship போட்டி லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் பங்கேற்றார்.
- இவர் இதுவரை உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என 50 லிம்கா சாதனையையும், 4 உலக சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.