5 மாநிலங்கள், மத்திய பிரதிநிதிகளுடன் திருநங்கைகளுக்கான திட்டங்கள், கொள்கைகள் வகுக்க தேசிய குழு: மத்திய அரசு அமைத்தது
- திருநங்கையர்களுக்கான கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்க, மத்திய - மாநில அரசகளை சேர்ந்த தேசிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
- சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவராக கருதப்படும் திருநங்கைகள், சமூகத்தில் ஏராளமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு படிப்பு, வேலை உட்பட பல்வேறு உரிமைகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பெற்றோர்கள் மட்டுமின்றி, சமூகத்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கை திசை மாறி, பாலியல் தொழில் செய்வது உள்ளிட்ட சட்ட விரோத வழிகளில் செல்கின்றனர். இவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தடைகள் மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்காக திட்டங்கள், கொள்கைகளை வகுப்பதற்காக மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
- இந்த தேசிய குழுவின் தலைவராக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் செயல்படுவார். இதன் துணை தலைவராக அத்துறையின் இணை அமைச்சர் செயல்படுவார்.
- திருநங்கையர்களுக்கான கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள், திட்டங்கள் ஆகியவற்றை இக்குழு உருவாக்கும்.
- இதில், 5 மாநிலங்களின் பிரதிநிதிகள், 10 மத்திய அரசு துறை, திருநங்கையர் சமுதாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.
- இக்குழுவில் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள்
- இது தவிர, இப்பகுதிகளை சேர்ந்த 5 திருநங்கையர்களும் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவை மலேசியா, மியான்மர் மற்றும் சிங்கப்பூருடன் இணைக்கும் கேபிள் திட்டம்
- டிஜிட்டல் வளர்ச்சிக்கு தற்போதைய காலத்தில் ஆசியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஆப்டிகல் பைபர் கேபிள்களை இணைக்கும் பணியை சிங்கப்பூரை சேர்ந்த ஓரியண்ட் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக ஜப்பானின் என்இசி நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஜப்பானை சேர்ந்த NEC Corp மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Orient Link Pte. Ltd நிறுவனங்கள் இணைந்து எம்எஸ்டிஎன் கேபிள் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
- இதன் மூலமாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. 8100 கிலோ மீட்டர் பகுதியை இணைக்ககூடிய இந்த பணி 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறைவடையும் என கூறப்படுகிறது.
- இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் என அந்த நிறுவனங்களும் கூறியுள்ளன.
பிரிட்டனில் காந்தியின் கண்ணாடி ரூ. 2.55 கோடிக்கு ஏலம்
- இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
- கண்ணாடியை வைத்திருந்தவர், ஒரு வாரத்திற்கு முன் தங்க முலாம் பூசிய பிரேம்களை கொண்ட அந்த மூக்கு கண்ணாடியை தனது வீட்டின் ஒரு பெட்டியில் இருந்து எடுத்துள்ளார். காந்தி இயல்பாகவே தான் உபயோகித்த பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் பழக்கம் கொண்டவர்.