மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
- கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய கல்வித்துறை என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அமைச்சரவையில் முதல் மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சராக பி.வி.நரசிம்மராவ் இருந்தார்.
- இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழுவின்பரிந்துரையில்தான் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கல்வித்துறையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.
- கடந்த 2018-ம் ஆண்டே இந்தப் பெயர் மாற்றம் குறித்து இந்திரா காந்தி தேசிய கலை இயக்க மையத்தின் தலைவர் ராம் பகதூர் ராய், கல்வி குறித்த மாநாட்டில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்எஃப் தலைவராக ராகேஷ் அஸ்தானா நியமனம்
- எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைவராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளாா். அதுபோல, உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக (உள்நாட்டு பாதுகாப்பு) ஐபிஎஸ் அதிகாரி வி.எஸ்.கே.கெளமுதி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (பிசிஏஎஸ்) தலைவராக இப்போது இருந்துவரும் 1984-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்தானா, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) தலைவா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தாா்.
மணிப்பூரில் ரூ.3,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல்
- மணிப்பூரில் ரூ.3,000 கோடி மதிப்பில் 13 நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்க மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
- தில்லியில் இருந்து காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில், 'வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கும், நாட்டிற்கும் மணிப்பூா் பேருதவியாக இருந்து வருகிறது. அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேலும் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.
- மணிப்பூரில் ரூ.16,023 கோடியில் 874.5 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.2,250 கோடியிலான திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
- புதிய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலை மாநில முதல்வா் விரைவுப்படுத்த வேண்டும். மணிப்பூா் - இம்பாலா இடையேயான உயா்வழிச்சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது.
பழங்குடிகளின் சுகாதாரம், ஊட்டச்சத்து சாா்ந்த தகவல்கள்: 'ஸ்வஸ்தியா' வலைதள பக்கம் தொடக்கம்
- நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக விரிவான தகவல்களை பெற 'ஸ்வஸ்தியா' என்ற வலைதள பக்கத்தை மத்திய அரசு தொடங்கியது.
- பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களில் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட 177 மாவட்டங்களின் தரவுகள் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
- 177 மாவட்டங்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், பழங்குடிகள் மக்கள்தொகை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, பாலின விகிதம், பெண்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், சுகாதார மையங்கள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள் இந்த வலைதள பக்கத்தில் கிடைக்கப்பெறும்.
செப் 1ம் தேதியை காவலர் தினமாக மேற்கு வங்கம் அறிவிப்பு
- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களாக போலீசாரை கவுரவிக்கும் விதமாக செப்-1ம் தேதியை காவலர் தினமாக கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- மாநிலத்தில் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று இருந்தது. 18 போலீசார் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர்.
- கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து வந்த போலீசாரின் பங்களிப்பை பாராட்டி கவுரவிக்கும் வகையில், செப்1-ம் தேதியை மாநில காவலர் தினமாக அறிவித்து அன்று நடக்கவுள்ள விழாவில் உயர்தியாகம் செய்த போலீசாரின் குடும்பத்தினரின் ஒருவருக்கு அரசு பணி ஆணை வழங்கவும், காவலர் நலத்துறையை மறு கட்டமைப்பு செய்து சலுகைகள் அறிவிக்கப்படும்.
அலையாத்தி காடுகளை அழிக்கும் $9 பில்லியன் திட்டம் ஒப்புதல் அளித்த வியட்நாம்
- இயற்கையைப் பாதுகாக்கும் விதமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள கான் யிஹோ (Can Gio Mangrove Biosphere Reserve) சதுப்புநிலப் பகுதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- இந்த சதுப்புநிலப் பகுதியானது 2000-ம் ஆண்டில்தான் முதன்முதலில் அதிகாரபூர்வப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு உட்படுத்தப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து இதை உள்ளூர் மேலாண்மை வாரியம்தான் நிர்வகித்து வருகின்றது.
- இந்த சதுப்பு நிலப் பகுதியின் மொத்தப் பரப்பளவு 75,740 ஹெக்டேர். இதுதான் இப்போது வரை உலகிலேய மிகப்பெரிய மீட்டெடுக்கப்பட்ட சதுப்புநில மறுவாழ்வுப் பகுதியாகும்.
- இது கடுமையான புயலிலிருந்தும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடுகளிலிருந்தும் நகரத்தைப் பாதுகாக்கிறது. இவ்வாறு நகரத்தைப் பாதுகாக்கும் இந்த சதுப்பு நிலப் பகுதியில்தான் வசிப்பிடங்களும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான கட்டமைப்புகளும் வரவுள்ளது.
- இதை வின்க்ரூப்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதோடு கான் யிஹோ டூரிஸ்ட் சிட்டியில் 2,870 ஹெக்டேரில் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதை உருவாக்க தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் உள்ள மணலை அந்நிறுவனம் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
- வின்க்ரூப்ஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டமானது 2031-ல் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,30,000 மக்கள் புதிதாகக் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும் வருடத்திற்கு 9 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை ஹோ சி மின் நகரத்தின் மிகப்பெரிய மாவட்டமான கான் யிஹோவில் 70,000 மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் இயற்கை வளங்களை அழிக்கக்கூடும் என்பதால் இதற்கான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
- அலையாத்திக் காடுகள், கடலின் அலையைக் கட்டுப்படுத்தி சுனாமி போன்ற ஆபத்துகளிலிருந்து காத்து வருகின்றன. மேலும், பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதேபோலத்தான் அலையாத்திக் காடுகளும் நீரை உறிஞ்சி நிலத்தில் சேமித்து வைத்திருக்கும்.
- அவை, நீராதாரத்திற்கு மிக முக்கியமானவை. அதோடு பல்லுயிரிய வளம் நிறைந்தவை. அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அரசுகள் உணராதவரை, இதுபோன்ற இயற்கை வள இழப்புகள் பூமியில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.