சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி
- ஆகஸ்ட் 15, 2020 அன்று, 74 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி தனது உரையின் போது தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனைத் தொடங்கினார் .
- ‘தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ என்ற புதிய திட்டம் 15.08.2020 தொடங்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்.
- அதில் அவர்களுக்கு இருக்கும் நோய், நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், பரிசோதனை அறிக்கைகள், கொடுப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.
- தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
- பணியின் கீழ், ஒவ்வொரு இந்தியரும் ஒரு சுகாதார அடையாள அட்டையைப் பெற வேண்டும். அடையாள அட்டையில் நபரின் கடந்தகால மருத்துவ நிலை, சிகிச்சை மற்றும் நோயறிதல் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். பணி முற்றிலும் தொழில்நுட்ப அடிப்படையிலானது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கைதிகளுக்கான சிறப்பு கோவிட் மையம்
- சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை பிரிவு, மகளிர் சிறை என 3 சிறைகளில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 வார்டுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 1 வார்டு என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தண்டனை பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த மையத்தினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
- 2004 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். 2007 ம் ஆண்டு துவங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
- கேப்டனாகத் தோனி தலைமையில் இந்தியா அணி, ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான தொடர்களையும் (50 ஓவர்,டி20, சாம்பியன்ஸ் டிராபி) வென்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
- சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் வழியைப் பின்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.