Type Here to Get Search Results !

TNPSC 11th AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை விடுவித்தது மத்திய அரசு

 • 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாத வருவாய் பற்றாக்குறைக்கான நிதி ஒதுக்கீடாக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195.08 கோடியை ஆகஸ்ட் 11, 2020 அன்று மத்திய அரசு விடுவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று காலத்தில் மாநில அரசுகளுக்கு இது கூடுதல் வருவாயாக இருக்கும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த நிதியைப் பெற்றுள்ளன.

ரூ.8,722 கோடியில் ராணுவ தளவாட கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்

 • இந்திய பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான பல்வேறு ஆயுத கொள்முதல் முன்மொழிவுகள் தொடா்பாக முடிவெடுப்பதற்காக இந்த கவுன்சில் கூடியது.
 • பாதுகாப்புப் படைகளுக்கு ரூ.8,722 கோடி மதிப்பில் பல்வேறு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • இதில் இந்திய விமானப் படைக்காக 'ஹெச்டிடி-40' ரக ஆரம்பப் பயிற்சி விமானங்கள் 106 கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து (ஹெச்.ஏ.எல்.) வாங்கப்படவுள்ளன. 
 • அந்த நிறுவனத்தின் விமானங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு தரச்சான்று அளிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • தரச்சான்று அளித்த பிறகு முதல்கட்டமாக 70 பயிற்சி விமானங்கள் கொள்முதல் செய்யப்படும். அவை விமானப் படையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு எஞ்சிய 36 பயிற்சி விமானங்கள் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்படும்.
 • அத்துடன், ஏகே-203 ரக துப்பாக்கிகளும், மேம்படுத்தப்பட்ட நவீன ஆளில்லா விமானங்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதில் சில ஆளில்லா விமானங்கள் லேசா் தொழில்நுட்பத்திலான குண்டுகளையும், துல்லியமாக தாக்குதல் நடத்தக் கூடிய ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் இருக்கும்.
 • இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களில் பிரதானமாக பொருத்தப்படும் அதிவேக தாக்குதல் துப்பாக்களின் (எஸ்ஆா்ஜிஎம்) மேம்படுத்தப்பட்ட வகைகளும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இவை எதிரிகளின் அதிவேக தாக்குதலை சமாளிக்கவும், திறம்பட பதில் தாக்குதல் நடத்தவும் உதவும்.
 • பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ரக ஆயுத வாகனங்களை தாக்கக் கூடிய வகையிலான 125 மி.மீ. ரக ஏவுகணைகளும் (ஏபிஎஃப்எஸ்டிஎஸ்) ராணுவத்துக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளன. அந்த ஏவுகணையின் உதிரி பாகங்களில் 70 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

 • கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் அதிபர், விளாதிமீர் புடின் அறிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து இது சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 • கேமாலியா ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. தடுப்பூசியை தயாரிக்க மற்றும் உலகெங்கும் சந்தைப்படுத்துவதற்காக, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • கேமாலியா ஆராய்ச்சி மையம் மற்றும் பின்னோபார்ம் நிறுவனம் ஆகியவை, இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ளன. இவ்வாறு, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது
 • இந்த தடுப்பூசிக்கு, 'ஸ்புட்னிக் வி' என்று பெயரிட்டுள்ளோம். நாட்டின் முதல் விண்கலத்தை நினைவுகூரும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெறுவதற்காக, 20 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. அவை, 100 கோடி மருந்துகள் கேட்டுள்ளன.
ஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
 • பெற்றோருக்கு சொந்தமான அல்லது குடும்ப சொத்தை பிரிப்பதில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு நீண்ட காலமாக உள்ளது. கடந்த காலங்களில், 'இந்து பெண்கள் சொத்து சட்டம்,' என இருந்தது. 
 • அதன் மூலம், பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. அங்குள்ள பூர்வீக சொத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. மேலும், திருமணத்தின் போது பெற்றோர் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் சீதனம் மட்டுமே அவர்களுக்கான அதிகபட்ச சொத்தாக கருதப்பட்டது.
 • இந்நிலையில், கடந்த 1956ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி நிறைவேற்றப்பட்ட ''இந்து வாரிசுரிமை சட்டம்' தான் பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்று முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.
 • உதாரணமாக ஒரு ஆணுக்கு, மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் குடும்பத் தலைவனாக இருக்கும் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் ஆகியோருக்கு மட்டுமின்றி, மகள்களுக்கும் சம பங்குகளாக கிடைக்கும். அதில், அனைவருக்கும் சமஉரிமை உண்டு எனவும் குறிப்பிடப்பட்டது.
 • இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டும் இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை அப்போதைய அரசான காங்கிரஸ் கட்சி நடைமுறைக்கு கொண்டு வந்தது. 
 • இதில் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமைகள் உண்டு என விரிவுபடுத்தப்பட்ட சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 
 • ஆனால், 2005க்கு முன்னதாக பெற்றோர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பாகப்பிரிவினை மேற்கொண்டாலோ பெண்கள் தங்களுக்கான பங்கு சொத்துக்களை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது.
 • இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பெற்றோர் சொத்தில் ஆண்களுக்கு இணையாக மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் செல்லத்தக்க ஒன்றா?' என கேள்வி எழுப்பப்பட்டது. 
 • இதை விசாரித்த நீதிமன்றம், '2005ம் ஆண்டு முன்பு தந்தை உயிரிழந்து இருந்தால் குடும்ப சொத்தின் பங்குகளை மகள் பெற முடியாது,' என்று ஒரு நீதிபதியும், 'சொத்தில் சமஉரிமை உண்டு,' என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர்.
 • இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. 
 • அதில், 'திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் 2005-ன்படி, குடும்ப சொத்தின் பங்கீட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமபங்கு உண்டு. இதில் பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் எப்போதும் கண்டிப்பாக அவர்களுக்கு மகளாகத்தான் இருப்பாள். 
 • அதில் எந்தவிதமான மாற்றமோ அல்லது சமரசமோ கிடையாது. கடந்த 2005ம் ஆண்டு இது குறித்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னரே தந்தை இறந்து இருந்தாலும், இந்த உத்தரவு பொருந்தக்கூடிய ஒன்றாகும். அதனை மீறும் அதிகாரம் கிடையாது,' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 • இதில், கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு விசாரித்த மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி இருந்தது. 
 • தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மை இந்தியா இயக்க அகாடமி கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைப்பு
 • தூய்மை இந்தியா இயக்க அகாடமியை ஜல் சக்தி துறைக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். கண்டகி முக்தபாரத் என்ற ஒரு வார கால இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 
 • கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த எஸ் பி எம் அகாடமியை அமைச்சர் தொடங்கி வைத்தார். 
 • ஸ்வச்சாக்கிரஹிக்கள் இதர களப்பணியாளர்கள், அனைத்து பங்குதாரர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், நடவடிக்கை மாறுதல்களைத் தொடர்வதற்காகவும் அலைபேசி இணைய வழி கற்றல் மூலம் இந்த வகுப்புகள் நடைபெறும். ஓ டி எஃப் பிளஸ் பற்றி பாடங்கள் நடைபெறும். எஸ் பி எம் (ஜி) இரண்டாம் கட்டக் குறிக்கோள்களை அடைவதற்கு இவை முக்கிய பங்காற்றும்.
 • திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தாத நிலை அனைத்து கிராமங்கள், மாவட்டங்கள் மாநிலங்களிலும் 2 அக்டோபர் 2019 அன்று எய்தப்பட்டது. இது வரலாற்று சாதனையாகும். கிராமப்புற இந்தியா திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைந்துவிட்டது.
 • இந்த மாபெரும் வெற்றியை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஸ் பி எம் (ஜி) இரண்டாம் கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 • திறந்தவெளியைக் கழிப்பறையாக உபயோகிக்காத நிலையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வது, திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது, ஆகியவையே இந்த இரண்டாம் கட்டத்தின் நோக்கமாகும். 
 • ஒருவர் கூட விட்டுப் போகாமல், ஒவ்வொருவரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும். தூய்மை பாரதம் திட்டம் (கிராமம்) இரண்டாம் கட்டப் பணிகளுடன் தொடர்புடைய ஸ்வச்சாக்கிரஹிக்கள், உறுப்பினர்கள் சமூக அடிப்படையிலான அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிறருக்கு திறன் மேம்பாட்டுக்காக, அலைபேசி அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய விஷயங்கள் எஸ்பிஎம் அகடமி மூலம் கற்றுத் தரப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel