Type Here to Get Search Results !

SRIJAN ONLINE PORTAL -பாதுகாப்பு உற்பத்திக்கான துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர்ட்டல் ஸ்ரீஷன்



  • ஆகஸ்ட் 14, 2020 அன்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் சுயசார்பு இந்தியா கொண்டாட்டத்தின் (Atma Nirbhar Bharat Saptah -ஆத்மா நிர்பர் பாரத் சப்தா )நிறைவு நாளான இன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு உற்பத்திக்கான துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர்ட்டல் ஸ்ரீஷன் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்உள்நாட்டுத் தயாரிப்புக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பொருள்களில் இருந்து வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் ஒற்றைச்சாளர ஆன்லைன் விற்பனைப் போர்ட்டலாக ஸ்ரீஷன் உள்ளது
  • ஐடெக்ஸ்-இன் கீழ் பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்-அப் சவாலுக்கு நான்கு ஒப்பந்தங்களும் தொழிற்சாலைப் பங்குதாரர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாயின.  விருப்பத் தெரிவிப்பு அறிக்கை முன்மொழிவுக்கான வேண்டுகோள்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளன
  • இந்தத் தருணத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களைப் பொறுத்து சுயசார்புக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.  பாதுகாப்புப் பிரிவில் உள்ளூர்மயமாக்கல் மற்றும் சுயசார்பு முயற்சிகளில் தாமாகவே முன்வந்து பங்கேற்குமாறும், பொறுப்புடைமையை வெளிப்படுத்துமாறும் இந்தியத் தொழில் பங்குதாரர்களை திரு சிங் கேட்டுக்கொண்டார்
  • பாதுகாப்பு உற்பத்தியில் சுயசார்பு என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படாமல் எதிர்கால ஏற்றுமதி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது.  
  • இதன் இலக்குகள் தொடர்ச்சியான முயற்சிகளால் நிறைவேற்றப்படும்.  இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அரசு தனித்திருப்பவற்றை நிறுவனமயமாக்குதல், நேரடி அந்நிய முதலீட்டு வரம்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். 
  • ”சிறிது காலம் முன்பு வரை பாதுகாப்பு அமைச்சகக் கொள்முதலுக்காக நாம் உலகில் கிடைக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருந்தது, இப்பொழுது நமது கண்ணோட்டம் மாறி உள்ளது. அண்மைக்கால நவீன கருவியை நாமாகவே எவ்வாறு தயாரிப்பது அல்லது மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து எவ்வாறு தயாரிப்பது அல்லது தொழில்நுட்பத்தை மாற்றித் தருவது ஆகியன குறித்து சிந்திக்கிறோம். 
  • ஸ்ரீஷன் போர்ட்டலை உருவாக்கியதற்காக டிடிபி-யை பாராட்டிய திரு சிங் பாதுகாப்புத் துறையில் சுய-சார்பு என்ற இலக்கை அடைவதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தொழில்துறை பங்குதாரர்கள் அளிப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.  சுயசார்பு இந்தியா அறிவிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையானது பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்பதற்கான வாய்ப்புகளை தெரிவிக்கும் srijandefence.gov.in என்ற உள்நாட்டு இணைய வாயிலை வடிவமைத்துள்ளது.  இந்தப் போர்ட்டல் தனியார் துறையினர் உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய பொருட்களின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும். 

ஆண்டு

டிபிஎஸ்யூ-க்கள் /ஓஎஃப்பி/எஸ்ஹெச்கியூ-க்கள் எடுத்துக்காட்டியுள்ள பொருள்களின் எண்ணிக்கை

ஏற்றுமதியின் மதிப்பு மில்லியன் ரூபாய்

2019-20

1557

34035

2020-21

739

34514

ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மூவாயிரத்திற்கும் அதிகமான பிரத்யேகமான பொருள்கள் இணைய வாயிலின் வழியாகக் கிடைக்கும்

இந்துஸ்தான்ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்மேக்-IIஇன் கீழ் ரஷ்ய செயல்திட்டத்திற்காக ரூ.100 கோடி மொத்த மதிப்புள்ள 46 பொருள்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான விருப்பத்தெரிவிப்பு அறிக்கையை வழங்கியுள்ளது.

பெல் (BEL) ரூ.31 கோடி மொத்த மதிப்பில் கீழ்வரும் 5 பொருள்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான இஓஐ / ஆர்எஃப்பி வழங்கியுள்ளது. 

  1. பிரேசிங் ஒயர்: தற்போது இறக்குமதி செய்யப்படும் வேக்கம் பிரேசிங் செயல்முறைக்குத் தேவைப்படும் சிறப்பு உலோகக் கலவையே பிரேசிங் ஒயர் ஆகும்.
  2. நகரும் மேடை, 6 டிகிரி சுதந்திரம் மற்றும் சுமை 1000 – 2000 கிலோ: வாகன பாவனைப் பொருள்களுக்கான மிக முக்கியமான துணை சேர்க்கைப் பொருள். தற்போது இது இறக்குமதி செய்யப்படுகிறது.
  3. சிறிய ரக ஆயுத பாவனைப் பொருள்களுக்கான போலிக் கருவிகள்: இவை உள்நாட்டில் கிடைப்பதில்லை.  பல்வேறு சிறிய ரக ஆயுத பாவனைப் பொருள்களுக்கான முக்கியமான உபரி பாகங்களாக இவை இருக்கின்றன.
  4. ஒற்றை போர்ட் கம்ப்யூட்டர் - அச்சிட்ட சர்க்கியூட் போர்ட்: தற்போது இந்த அச்சிட்ட சர்க்கியூட் போர்ட்டுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  ஒற்றை போர்ட் கம்ப்யூட்டர் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  எனவே செலவைக் குறைக்கவும் நீண்டகாலம் பயன்படுத்தவும் இவற்றை உள்நாட்டில் தயாரிப்பது தேவையாக இருக்கிறது.
  5. 62 எக்ஸ் பகல்நேர சூம் லென்சை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.  நீண்ட தூரம் பாரக்கக் கூடிய பகல்நேரக் கண்காணிப்பு உபகரணம் ராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் இதர முகமைகளுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது.  இந்தக் கருவியின் ஒரு பாகமான பகல் நேர சூம் லென்ஸ் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  உள்நாட்டில் தயாரித்தால் இறக்குமதியை தவிர்ப்பதோடு உற்பத்தியில் தன்னிறைவையும் நீடித்து நிற்கும் தன்மையையும் பெற முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel