- ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் நட்சத்திரம் கேப்டன் ரோகித் ஷர்மா உட்பட 5 பேர் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- 2020ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது பெறுவோர் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரம் ரோகித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ஆகிய 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். 2019-ல் ரோஹித் சர்மா ஏராளமான ரன்களைக் குவித்தார். 5 டெஸ்டுகளில் 556 ரன்களும் ஒருநாள் ஆட்டத்தில் 1490 ரன்களும் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் எடுத்து சாதனை படைத்தார்.
Rajiv Gandhi Khel Ratna / ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2020
August 22, 2020
0
Tags