Type Here to Get Search Results !

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர் இந்தர்ஜித் கௌர் / INDERJIT KAUR

  • "முதல்" என்ற அடைமொழி பல முறை அவர் பெயருக்கு முன் சேர்க்கப்பட்டது, அதாவது பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவர், பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் போன்ற சிறப்புகள்.
  • ஆண்டு 1923 மற்றும் நாள் செப்டம்பர் ஒன்று. பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் கர்னல் ஷேர் சிங் சந்துவுக்கு மகளாக பிறந்தார். இது ஷேர் சிங் சாந்து மற்றும் அவரது மனைவி கர்த்தர் கவுரின் முதல் குழந்தை.
  • கர்னல் ஷேர் சிங், தனது மகள் இந்தர்ஜித் கௌர் சாந்துவின் பிறப்பை, ஒரு பையன் பிறக்கும்போது மக்கள் கொண்டாடும் அளவுக்கு ஆடம்பரமாக கொண்டாடினார்.
  • கர்னல் ஷேர் சிங் ஒரு முற்போக்கான மற்றும் தாராளவாத மனம் கொண்டவராகக் கருதப்பட்டார், பழமையான சிந்தனையும் , நடைமுறையில் உள்ள வழக்கங்களும், தனது குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, இந்த சிந்தனை இந்தர்ஜீத் கௌர் சந்துவை முன்னேற உதவியது.
  • இந்தர்ஜித் கௌர், பாட்டியாலாவின் விக்டோரியா பெண்கள் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை மேற்கொண்டார். பத்தாம் வகுப்பில் படித்த பிறகு, அவரது மேற்படிப்பு பற்றி குடும்பத்தில் விவாதம் தொடங்கியது.
  • இந்த நேரத்தில், கர்னல் ஷேர் சிங், பெஷாவருக்கு மாற்றப்பட்டார், மேலும் இந்தர்ஜித் மேற்படிப்புக்கு லாகூர் சென்றார். அங்கு ஆர்.பி. சோஹன் லால் பயிற்சி கல்லூரியில் அடிப்படை பயிற்சியும், லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் தத்துவயியலில் முதுகலை மேல்படிப்பை முடித்தார்.
  • இதன் பின்னர் அவர் விக்டோரியா பெண்கள் இடைநிலைக் கல்லூரியில் தற்காலிகமாக பணியைத் தொடங்கினார், மேலும் 1946ஆம் ஆண்டில் பாட்டியாலாவின் பெண்கள் மகளிர் கல்லூரியில் தத்துவம் கற்பிக்கத் தொடங்கினார்.
  • சில மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானில் இருந்து வரத் தொடங்கினர்.
  • இந்த கால கட்டத்தில் இந்தர்ஜித் கௌர் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு ஆர்வலராகவும் பணியாற்றத் தொடங்கினார்.மாதா சாஹிப் கௌர் தளத்தை உருவாக்க உதவினார் மற்றும் அதன் செயலாளரானார்.
  • இந்த குழு, தலைவி சர்தார்னி மன்மோகன் கவுரின் உதவியுடன், பாட்டியாலாவில் சுமார் 400 குடும்பங்களை புனரமைக்க உதவியது. இந்த மக்களுக்கு நிதி உதவி மற்றும் உடைகள் மற்றும் ரேஷன் போன்ற பிற உதவிகளை வழங்க குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி நாடப்பட்டது.
  • அந்த நாட்களில் சிறுமிகளும் உதவ முன்வந்தனர், இது அந்த காலகட்டத்தில் ஒரு அரிய விஷயம்.தொடக்கத்தில் வீட்டிலேயே இந்தர்ஜித் கௌர் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும்,ஒரு கிளர்ச்சியாளராக இருந்து கொண்டு எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது என்று அவர் அறிந்திருந்தார்.
  • இதன் பின்னர் அவர் அகதிகள் குழந்தைகளுக்கான மாதா சாஹிப் கௌர் தளம் பள்ளியை உருவாக்குவதிலும் பங்காற்றினார். அகதி சிறுமிக் தற்காப்புக்கலை பயிற்சி பெற உதவினார்.
  • 1955ஆம் ஆண்டில், பாட்டியாலா மாநில கல்வியியல் கல்லூரியில் பேராசிரியரானார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரண் கெளர், அவரது மாணவியாக இருந்தார்.
  • இதன் பின்னர், இந்தர்ஜித் கௌர் 1958 இல் சண்டீகர் கல்லூரியில் கல்வி பேராசிரியராக நியமிக்கப்பட்டு பின்னர் இதே கல்லூரியில் துணை முதல்வரானார்.
  • பின், பிரபல எழுத்தாளர் கியானி குர்ஜித் சிங்குடன் இந்தர்ஜித்திற்கு திருமணம் ஆனது.அவர் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் தன்னை தனது கணவரின் தோழி,கூட்டாளி மற்றும் வழிகாட்டி என கூறிக் கொள்வார். இந்த திருமணத்தில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
  • இந்தர்ஜித் கௌர் ஒரு மனித பிறவியாகவும், கல்வியாளராகவும் மற்றும் நிர்வாகியாகவும் பலரின் வாழ்க்கையில் தடம் பதித்தார்.
  • அவர் தனது காலகட்டத்தில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்தார் மேலும் அவர் தனது ஆளுமையிலும் இந்த மாற்றங்களை ஊக்கப்படுத்தினார்.
  • பர்தா அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில்,அவர்,இந்த பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது மட்டுமல்லாமல், சிறுமிகளின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் உழைத்தார்.
  • முன்பு ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களில் , பெண்களுக்கும் கதவுகள் திறந்தது.அதன் பிறகு பாட்டியாலாவில் உள்ள பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வரானார். இதே கல்லூரியிலிருந்துதான் அவர் தனது பணியை துவக்கியிருந்தார்.
  • ஒரு வருடத்திற்குள், அவர் இந்த கல்லூரியில் ஒரு அறிவியல் பிரிவைத் திறந்தார், இது மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. ஒரு முதல்வராக, சிறுமிகளின் கல்வியுடன் மற்ற ஆக்கப்பூர்வ கலைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். இதுதொடர்பாக, அவர் கிதா என்ற நாட்டுப்புற நடனத்தையும் புதுப்பிக்க உதவினார்.
  • குடியரசு தின அணிவகுப்பில் சிறுமிகளை சேரக்க வேண்டும் என்பதில் இந்தர்ஜீத் கௌர் ஒரு பெரிய பங்காற்றினார்,மேலும் அணிவகுப்பிற்கு பின் பஞ்சாபின் இந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனமான கிதா தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது.
  • பின்னர் அவர் குடும்பத்துடன் வாழ அமிர்தசரஸ்க்கு இடம் பெயர்ந்து , அங்குள்ள பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வரானார். அங்கேயும், படிப்பின் நிலையை உயர்த்த உதவினார். இதன் பின்னர், அவர் மீண்டும் பாட்டியாலாவுக்கு திரும்பினார், ஆனால் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக . வட இந்தியாவில் இந்த நிலையை அடைந்த முதல் பெண்மணியாக அவர் கருதப்படுகிறார்.
  • இந்தர்ஜித் கவுரும் பல சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிவடைவதற்கு சற்று முன்பு அவர் ராஜினாமா செய்தார்.
  • பின்னர் அவர் இரண்டு வருட இடைவெளி எடுத்துக் கொண்டு 1980 ஆம் ஆண்டில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel