- கணக்கெடுப்பில் வாரணாசி - சிறந்த “கங்கா டவுன்”. இந்தியாவில் தூய்மையான நகரம் என்ற விருதை மைசூரு வென்றது. இந்த கணக்கெடுப்பை வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் நடத்தியது.
- இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது.
- இதன்படி, ‘ஸ்வச் மஹோத்ஸவ்’ என்ற மெய்நிகர் திட்டத்தினை 2016-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டத்தின் படி, தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் தயார் செய்தது. மொத்தம் 129 சிறந்த நகரங்கள் மற்றும் மாநிலங்கள் வழங்கப்பட்டன. ஸ்வச் சர்வேஷன் 2020, 4,242 நகரங்கள், 62 கன்டோன்மென்ட் போர்டுகள் மற்றும் 92 கங்கா நகரங்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 28 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்நிலையில், இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த பட்டியலில் 2-வது இடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் பிடித்துள்ளது. 3-வது இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை பிடித்துள்ளது. பட்டியலில், தமிழகத்தில் கோவை நகரம் 40-வது இடம் பிடித்துள்ளது. சென்னை 45-வது இடத்திலும், மதுரை 42-வது இடத்திலும் உள்ளது.
- இந்தியாவின் தூய்மையான நகரம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுவது 2020- இந்த பட்டியல் 5-வது முறையாகும். முதன்முறையாக 2016-ம் ஆண்டு இந்தியாவின் தூய்மையான நகரத்திற்கான விருதை கர்நாடகா மாநிலம் மைசூரு வென்றது.
- தற்போது, இந்தூர் தொடர்ந்து 4-வது ஆண்டுகளாக (2017, 2018, 2019, 2020) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்வச் சர்வேஷன் 2020-Swacch Survekshan 2020
August 21, 2020
0
Tags