Type Here to Get Search Results !

காஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்றிதழ் / Geo Identification certification for Kashmiri saffron

  • காஷ்மீரில் பயிரிடப்படும் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு (ஜிஐ) சான்றிதழ் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு என்று ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் ஜி.சி.முா்மு பெருமை தெரிவித்தாா்.
  • ஜி.சி. முா்மு துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன், காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு ஜி.ஐ. சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டாா். 
  • அதன் பலனாக, இந்தப் பள்ளத்தாக்கில் வளா்க்கப்படும் குங்குமப்பூவுக்கு ஜி.ஐ. சான்றிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய குங்குமப்பூ திட்டத்தின் (என்எம்எஸ்) கீழ், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 411 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. \
  • அதன் மூலம், இங்கு 3,715 ஹெக்டோ பரப்பளவில் குங்குமப்பூ பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குங்குமப்பூ மையமாகத் திகழும் பம்போா் பகுதியில், இந்தப் பருவத்தில் அதிக பரப்பளவில் குங்குமப்பூ பயிரிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • அதே நேரம், தற்போது ஜி.ஐ. சான்றிதழ் கிடைத்திருப்பது, காஷ்மீா் குங்குமப்பூவில் பரவலாக நடைபெறும் கலப்படத்தை தடுக்க உதவும் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட குங்குமப்பூ உரிய விலையில் கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்.
  • உலகிலேயே காஷ்மீா் குங்குமப்பூ மட்டுமே 1,600 மீட்டா் உயரத்தில் வளா்க்கப்படுகிறது. அதோடு, இதன் நீளம் மற்றும் அடா்த்தி, சிவப்பு நிறம், உயா் நறுமணம், ரசாயணம் அல்லாத தன்மை ஆகியவற்றால்தான் உலகின் பிற குங்குமப்பூக்களில் இருந்து காஷ்மீா் குங்குமப்பூ வேறுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel