மாவட்டங்களுக்கான "டெல்டா தரவரிசை" பிப்ரவரி-ஜூன் 2020 - பிஜப்பூர் முதலிடம்
- நிதி ஆயோக் அமைப்பின் மாவட்டங்களுக்கான அபிலாஷை திட்டத்தின் 2020 பிப்ரவரி-ஜூன் மாதம் வரையிலான டெல்டா தரவரிசையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் முதலிடம் பெற்றுள்ளது
- ரி-போய் (மேகாலயா) மற்றும் பஹ்ரைச் (உத்தரபிரதேசம்) ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கின்றன.
- 2018 ஜனவரியில் தொடங்கப்பட்ட அபிலாஷை மாவட்டங்கள் திட்டம், முக்கிய சமூக பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த முன்னேற்றம் பெற்றுள்ள மாவட்டங்களை வளர்ச்சி பெற்றவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
- சுகாதாரம்-ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை-நீர்வளம், நிதி உள்ளடக்கம்-திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து வளர்ச்சி பகுதிகளில் அதிகரிக்கும் முன்னேற்றத்தைக் கொண்டு அபிலாஷை மாவட்டங்களுக்கான டெல்டா தரவரிசை (Delta ranking of Aspirational districts) மேற்கொள்ளப்பட்டுள்ளது.