- இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வரும் சூழலில், DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 'பாரத்' என்று பெயரிடப்பட்ட ட்ரோனை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்வதற்காக DRDO உள்நாட்டிலேயே இந்த ட்ரோனை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
- பாரத் ட்ரோன்களை சண்டிகரை சேர்ந்த ஆய்வகம் ஒன்று வடிவமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த கண்காணிப்பு ட்ரோன்களாக பாரத் இருக்கும் என நம்புகின்றனர்.
- எந்த ஒரு இடத்திலும் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த பாரத் ட்ரோன்களை வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிரிகளை கண்டறியும் வகையில் பிரத்யேக அம்சத்தை கொண்டுள்ளது.
- இதன் மூலம் இந்திய ராணுவத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என DRDO வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வானிலையையும் எதிர்கொண்டு கண்காணிக்கும் திறன் கொண்டது பாரத் ட்ரோன். இதன் மூலம் இரவு நேரங்களில் காடுகளில் மறைந்திருக்கும் மனிதர்களைக் கூட கண்டுபிடிக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
பாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE
July 22, 2020
0
Tags