Type Here to Get Search Results !

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி / AADMANIRBHAR BHARAT APP INNOVATION CHALLENGE

  • பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
  • உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
  • உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும்.
  • இந்திய செயலிகளுக்கு வலுவான சூழல் முறையைக் கட்டமைத்து, அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன், இந்தியத் தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கான மின்னணு இந்தியா, சுயசார்பு இந்தியா செயலிப் புத்தாக்க சவாலை அடல் புத்தாக்க இயக்கத்துடன் சேர்ந்து மெய்டி- நிதிஆயோக் ஆகியவை தொடங்கியுள்ளன. 
  • டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுயசார்பு இந்தியாவைக் கட்டமைத்து, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதன் மூலம் பிரதமரின் தொலைநோக்கைப் பூர்த்தி செய்ய இது உதவும். இது 2 டிராக்குகளில் இயங்கும்; தற்போது உள்ள செயலிகளை மேம்படுத்துதல், புதிய செயலிகளை உருவாக்குதல்.
  • இன்று தொடங்கப்பட்ட டிராக் 1 செயலி புத்தாக்க சவால், ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்தியச் செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும். 
  • இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகுக்கே உதவும் வகையில், ஸ்டார்ட் அப்களும், இந்தியத் தொழில் முனைவோரும் சிந்தித்து, உருவாக்கி, கட்டமைத்து, மேம்படுத்தி தொழில்நுட்பத் தீர்வுகளை நீடித்து இருக்கச் செய்ய பல்வேறு ரொக்கப் பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பை வழங்கி, இதற்கு உகந்த சூழலை இது உருவாக்கும். இந்தியாவுக்காக, உலகுக்காக மேக் இன் இந்தியா என்பது இதன் தாரகமந்திரம் ஆகும். இது ஒரு மாதத்துக்குள் நிறைவடையும்.
  • இதன் தொடர்ச்சியாக, சுயசார்பு இந்தியா செயலியின் இரண்டாவது டிராக்கையும் அரசு தொடங்கும். இந்திய ஸ்டார்ட் அப்-கள்/ தொழில் முனைவோர்/ நிறுவனங்கள் ஆகியவற்றை அடையாளம் காண இது விழையும். 
  • கருத்தியல், முன்மாதிரி ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை வெளியிட ஊக்குவிக்கும். இந்த டிராக் நீண்டகாலத்துக்குச் செயல்படும். இதன் விவரங்கள் தனியாக வழங்கப்படும்.
  • சுயசார்பு இந்தியா செயலி புத்தாக்க சவால் டிராக் 1, பின்வரும் 8 அகன்ற பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது;
  1. அலுவலக உற்பத்தித் திறன் மற்றும் வீட்டிலிருந்து பணி
  2. சமூகக் கட்டமைப்பு
  3. இ-கற்றல்
  4. கேளிக்கை
  5. சுகாதாரம் மற்றும் நலம்
  6. அக்ரிடெக் மற்றும் பின்- டெக் உள்ளிட்ட வர்த்தகம்
  7. செய்திகள்
  8. விளையாட்டுகள்
  • ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு துணைப்பிரிவுகள் இருக்க வாய்ப்புள்ளது.
  • புத்தாக்க சவால் innovate.mygov.in/app-challenge என்ற தளத்தில் ஜூலை 4-ஆம் தேதி முதல் கிடைக்கும். விண்ணப்பங்களை நிறைவு செய்து தாக்கல் செய்ய ஜூலை 18 கடைசி தேதியாகும். www.mygov.in. என்ற தளத்தில் லாக்-இன் செய்து ,விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் கருத்துருக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
  • தனியார் துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஒவ்வொரு டிராக்கிற்கும் சிறப்பு நடுவர் இருப்பார். அவர்கள் பெறப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் செயலிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். 
  • மக்களுக்கு தகவல்களை அளிக்க லீடர் போர்டுகளில் இது வெளியிடப்படும். தகுதியான , பொருத்தமான செயலிகளை அரசு ஏற்றுக்கொள்ளும். அவற்றுக்கு வழிகாட்டுவதுடன், அரசின் இ-சந்தை இடத்தில் பட்டியலிடப்படும்.
  • எளிய பயன்பாடு (UI/UX), வலுவான தன்மை, பாதுகாப்பு மற்றும் அளவிடுதல் உள்ளிட்டவை சில முக்கிய மதிப்பீட்டு அளவுகோல்கள் ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel