என்.எல்.சி. விபத்து மாவட்ட கலெக்டரிடம் ரூ.5 கோடி செலுத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு
- கடலூா் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் கொதி கலன் வெடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ. 5 கோடியை என்.எல்.சி நிா்வாகம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் செலுத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
- என்.எல்.சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் கொதி கலன் வெடித்த விபத்தில் 13 போ உரிழந்தனா். மேலும் 10 போ காயமடைந்து மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் பெரிய தலையுடன் எலும்புக்கூடுகள்
- தமிழகத்தில் கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது.
இந்தியா குளோபல் வீக் 2020
- யுகேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மீடியா நிறுவனமான இந்தியா ஐஎன்சி (India Inc) இந்த ''இந்தியா குளோபல் வீக் 2020 (India Global Week 2020)" நடத்தப்பட உள்ளது. இந்த முறை ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாற்று பியூஸ் கோயல் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் மொத்தம் 5000 உலக வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள். 30 நாடுகள் கலந்து கொள்கிறது. அதேபோல் 75+ நிகழ்வுகள் இதில் நடக்க உள்ளது. 250+ பேர் இதில் பேச உள்ளனர்.