Type Here to Get Search Results !

20th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பூசி வெற்றி
  • கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின், 'ஆஸ்ட்ராஜெனிகா' தடுப்பூசி மருந்து 18 முதல் 55 வயதுடைய 1,077 பேருக்கு செலுத்தப்பட்டதில் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
  • விரைவில் இந்தியாவில் பரிசோதனைஇந்நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 
  • கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள பிரிட்டன், 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலை.,யிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.
7வது முறையாக தங்க ஷூவை கைப்பற்றிய மெஸ்ஸி
  • ஸ்பெயினில நடைபெற்ற புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டித் தொடரில் 38 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி, 9 டிரா, 3 தோல்வியுடன் 87 புள்ளிகள் குவித்து முதலிடத்தை பெற்ற ரியல் மாட்ரிட் அணி 34-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
  • கடந்த முறை சாம்பியனான பார்சிலோனா அணி (38 ஆட்டங்களில் ஆடி 25 வெற்றி, 7 டிரா, 6 தோல்வி) 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.
  • இந்த போட்டி தொடரில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 25 கோல்கள் அடித்து அசத்தி 'தங்க ஷூவை' தனதாக்கினார். இதன் மூலம் லா லிகா போட்டியில் 7-வது முறையாக அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.
ரூ.9,000 கோடிக்கு வரியில்லா பட்ஜெட் முதல்வர் நாராயணசாமி தாக்கல்
  • மாணவர்களுக்கு தற்போது காலை வேளைகளில் பால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, கருணாநிதி காலை சிற்றுண்டி மற்றும் ஊட்டச் சத்து திட்டமாக விரிவுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. 
  • இதன்படி, மாணவர்களுக்கு காலையில் இட்லி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும். இந்த திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி துவக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் இணையவழி கல்வி பயில்வதற்கு வசதியாக அப்துல் கலாம் மாணவர்கள் கல்வி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் விலையில்லா 'லேப் டாப்' வழங்கப்படும்.
  • காமராஜர் மாணவர் நல நிதி என்ற சிறப்பு நிதி இந்த நிதியாண்டில் இருந்து தொடங்கப்படும். இதன் மூலம், மாணவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகவும், மற்ற நலத் திட்டங்களுக்காகவும் நிதியுதவி வழங்கப்படும்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், சட்டக் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகள்,பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருத்துவக் கல்லுாரிகளில் படிப்பதற்காக இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் அனைத்து வகையான நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கவும், சிறந்த சிகிச்சை அளிக்கவும் தற்போது செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மாற்றியமைக்கப்படும். 
  • புதுச்சேரியில் உள்ள 3 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களும் மருத்துவ பயன் பெறும் வகையில் அனைவருக்குமான ஒட்டுமொத்த முழு சுகாதார பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டே உடனடியாக துவக்கப்படும். 
  • இந்திராகாந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 16 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
  • ரூ.9,000 கோடிக்கான பட்ஜெட்டில் மாநில நிதி ஆதாரம் ரூ.5,267 கோடியாகும். மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் வழங்கும் நிதியையும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.2,023 கோடியாகும்.
  • மீதமுள்ள ரூ.1,710 கோடி வெளிச்சந்தை கடன் மற்றும் மத்திய நிதி நிறுவனங்களின் மூலம் திரப்படும்.2 மணி 45 நிமிடங்கள் முதல்வர் 'கெத்து'மதியம் 12:05 மணிக்கு, பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கிய முதல்வர் நாராயணசாமி, 2:50 மணிக்கு முடித்தார். 
  • பட்ஜெட் செலவு சம்பளம் - 1,966 கோடி (21.84%)
  • ஓய்வூதியம் - 1,177 கோடி (13.07%)
  • கடன் மற்றும் வட்டி - ரூ.1,625 கோடி (18.06%)
  • மின்சாரம் வாங்குவதற்கு - ரூ.1,525 கோடி (16.94%)
  • முதியோர் ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்கள் - ரூ.896 கோடி (9.96%)
  • தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள, பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு மான்யம் - ரூ.864 கோ டி(9.60%)
2020 டி20 உலகக்கோப்பையை ஒத்தி வைத்தது ஐசிசி
  • 2020 அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையும் பிப்ரவரி - மார்ச் 2023லிருந்து அக்டோபர்-நவம்பர் 2023 என்ற மழை சீசனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் ஐபிஎல் 2020-ஐ நடத்த செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 வரை அல்லது செப்டம்பர் 26 முதல் நவம்பர் 14 வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் ரூ.10,300 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்து 300 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. 
  • இந்த ஒப்பந்தங்களின் மூலமாக 13 ஆயிரத்து 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் எட்டு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 
  • எட்டு தொழில் நிறுவனங்கள்: தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான எட்டு புதிய புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 5 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், மூன்று காணொலிக் காட்சி மூலமாகவும் கையெழுத்தாகின.
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் விக்ரம் சோலாா் நிறுவனம் ரூ.5 ஆயிரத்து 423 கோடி முதலீடு செய்யவுள்ளது. சுமாா் 7 ஆயிரத்து 542 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சூரியமின் சக்தி உற்பத்திக்கான செல்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்பூங்கா திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • கோவை மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமாா் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருக்காலை திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமாா் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழிற் பூங்கா திட்டத்தை என்டிஆா்., உட்கட்டமைப்பு நிறுவனம் 125 ஏக்கா் பரப்பில் அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.36 கோடி முதலீட்டில் சுமாா் 465 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான முந்திரி பதப்படுத்தும் ஆலை, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில்-ஒரகடம் நெடுஞ்சாலையில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் சுமாா் 2 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தகவல் தரவு மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
  • கோவை மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் சுமாா் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எல்ஜி நிறுவனத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், ஈரோடு மாவட்டம் சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில் ரூ.40 கோடி முதலீட்டில் ஜெஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
  • மொத்தமாக எட்டு திட்டங்களின் மூலம் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீடுகள் வழியே சுமாா் 13 ஆயிரத்து 507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் கே.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்
  • தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 
  • இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். 
  • மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொந்தகையில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்து கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. ஆறாம் கட்டமாக நடப்பாண்டில் மத்தியத் தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியைப் பெற்று கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூா், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.
  • அண்மைக்கால அகழாய்வுகளும், அறிவியல் முறையான காலக்கணிப்புகளும் தமிழகத்தில் ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனா் என்பதை நிரூபித்துள்ளன.
  • கீழடி ஆய்வுகள் கிமு 6-ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனா் என்று தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் கங்கைச் சமவெளி பகுதியில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய இரண்டாம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருத்து இதுவரை அறிஞா்களிடையே நிலவி வந்தது. ஆனால், கீழடி அகழாய்வு கி.மு., 6-ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகி விட்டதை உணா்த்துகிறது.
  • இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக ஏறத்தாழ 14 ஆயிரத்து 535 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த தொல் பொருள்களைக் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தினை வருங்கால தலைமுறையினா், மாணவ-மாணவியா், அறிஞா்கள், தொல்லியல் வல்லுநா்கள் மற்றும் அயல்நாட்டு வல்லுநா்கள் அறியும் வகையில் அமைப்பது முக்கியமானது.
  • இதைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு அருகே கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெக்டோ நிலப்பரப்பில் ரூ.12.21 கோடி மதிப்பில் அகழ்வைப்பகம் அமைக்கப்பட உள்ளது. இந்த வைப்பகத்துக்கு முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். 
  • இந்த அகழ்வைப்பகமானது, தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் புராதன கட்டடங்கள் பாதுகாப்புப் பிரிவு மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பாண்டியராஜன், ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளா் கே.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
கொரோனா தடுப்பு மருந்து 'எய்ம்சில்' பரிசோதனை துவக்கம்
  • நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், 'பாரத் பயோடெக்' என்ற நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
  • இதற்கு, 'கோவாக்சின்' என பெயரிடப்பட்டுள்ளது.இந்த தடுப்பு மருந்தை, முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டில்லி எய்ம்ஸ் உட்பட, 12 மருத்துவமனைகளை, ஐ.சி.எம்.ஆர்., தேர்வு செய்துள்ளது.
  • டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி செய்யப்படும் பரிசோதனைகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்திய அமெரிக்க  கடற்படை பயிற்சி
  • சீனாவுக்கு எதிராக உலக நாடுகளின் அணிதிரட்டலுக்கு, இந்தியா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் கடல்சார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை ரோந்துகள், பயிற்சிகளில் ஈடுபடுகிறது.
  • இந்திய பசிபிக் மண்டலத்தில் இந்த நாடுகளின் கடற்படை சமீபகாலமாக மேலும் தங்களது நட்பை பலப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் PASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 
  • உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என்றழைக்கப்படுவது அமெரிக்காவின், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்பதாகும்.
  • இந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படை போர்க்கப்பல்களுடன், பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, டிக்கோடெரோகா, யுஎஸ்எஸ் பிரின்ஸ்டன், யுஎஸ்எஸ் ஸ்டெரெட் மற்றும் யுஎஸ்எஸ் ரால்ப் ஜான்சன் ஆகிய போர்க் கப்பல்களும், இன்று இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றன.
  • கடந்தமாதம் இதுபோன்ற கடற்படை பயிற்சியில், ஜப்பான் நாட்டு கடற்படையுடன் இணைந்து செயல்பட்டது இந்திய கடற்படை. அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் கடந்த சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது.
  • யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சுமார் 100,000 டன் எடையுள்ளது. 90 போர் விமானங்களை சுமக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
3 தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 9 கோடி தடுப்பூசிகள் வாங்க பிரிட்டன் ஒப்பந்தம்
  • உலகின் 3 மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி உருவாக்கி வரும் வேளையில் அவற்றிடம் இருந்து 9 கோடி தடுப்பூசிகளை வாங்க ஓப்பந்தம் செய்துள்ளதாக பிரிட்டன் வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலையால் கண்டுபிடிக்கப்பட்டு ஆஸ்ட்ராஜெனேக்காவால் தயாரிக்க்ப்பட்டுள்ள தடுப்பூசி, லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டு ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ள தடுப்பூசி, மற்றும் வால்நேவா நிறுவனத்தின் தடுப்பூசி ஆகிய மூன்றையும் முதலிலேயே கொள்முதல் செய்ய முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தங்களை பிரிட்டன் அரசு செய்துள்ளது.
  • சிறப்பான பலன்கள் கிடைக்கும் பட்சத்தில் வால்நேவோ நிறுவனத்தில் மேலும் 4 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்ய பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
காவல்துறையின் உதவியை நாடும் வகையில் Ladies First, Hello Seniors திட்டம்
  • நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடும் வகையில் Ladies First முற்றிலும் பெண்களுக்கான 9894515110 என்ற உதவி எண்ணும் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் காவல்துறையின் உதவியை எந்த நேரத்திலும் நாடும் வகையில் Hello Seniors 9994717110 ஆகிய இரண்டு திட்டங்களையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்.
'நம்பிக்கை' விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் சாதனை
  • உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு, 'நம்பிக்கை' என்ற தனது விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்துள்ளது. 
  • ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, ஹெச்2ஏ ராக்கெட் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின், 'அல் அமால்' என, அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் 'நம்பிக்கை'), 1.3 டன் எடை கொண்ட விண்கலம் அதிகாலை 1:58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
  • ராக்கெட்டிலிருந்து ஒருமணி நேரத்தில் விண்கலம் தனியாகப் பிரிந்து, அதனுள் இணைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மூலம் சக்தியைப் பெற்று, சிக்னல்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. இந்தத் தகவலை ராக்கெட்டை வடிவமைத்து அனுப்பிய மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் ஏவுதள நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • மேலும், துபாயில் உள்ள அல் கவானீஜ் விண்வெளிக் கட்டுப்பாட்டு அறைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
  • இந்த நம்பிக்கை விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் 20 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகள் 135 பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்த இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 
  • இதுவரை செவ்வாய் கிரகத்தில் ரோபாவை இறக்கி அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் மட்டுமே ஆய்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013ம் ஆண்டு தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014ம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. 
  • ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்புவது இதுதான் முதல் முறை.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் விண்வெளியில் 49.50 கோடி கி.மீ.,களை 201 நாட்களில் கடந்து, 2021ம் ஆண்டு பிப்., மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்று சேரும் வகையில் திட்டமிட்டு அனுப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 50வது ஆண்டு கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூகம்பத்தைத் முன்கூட்டியே கணித்து அதை தடுப்பதற்கான Google திய திட்டம் 
  • Google நிறுவனம் முத்திரையில் பதிக்கப்பட்ட ஃபைபர் கேபிள்களைப் பயன்படுத்தும். இந்த கேபிள்கள் சுனாமிகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படுவதற்கு முன்பு அவற்றைக் கண்டறியும் திறன் கொண்டவை, மேலும் அவற்றை எச்சரிக்கை அமைப்பாகவும் பயன்படுத்தப்படலாம். இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் 100 கி.மீ வரை எந்த இயக்கத்தையும் உணர பயன்படுத்தப்படுகின்றன.
  • கூகிள் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. கூகிள் கருத்துப்படி, கடல் மேற்பரப்பில் எந்த அசைவையும் கண்டறிய கடலில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஃபைபர் கேபிள்களைப் பயன்படுத்தும். 
  • கேபிள்கள் ஆப்டிகல் ஃபைபர்களால் ஆனவை, அவை மணிக்கு 204,190 கிமீ வேகத்தில் தரவை அனுப்பும். இவை எங்கு சென்றாலும் அவற்றின் குறைபாடுகளை சரிசெய்ய டிஜிட்டல் சிக்னல் செயலி பயன்படுத்தப்படுகிறது. 
  • ஒளியியல் பரவலின் ஒரு பகுதியாக அவை கண்டறியப்படும்போது, ​​ஒளி துருவமுனைப்பு நிலையில் (SOP) உள்ளது. கூகிளின் கூற்றுப்படி, "கேபிளில் இயந்திர இடையூறுகளுக்கு பதிலளிக்கும் வகையில் SOP மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த தடைகளை கண்டறிவது நில அதிர்வு இயக்கத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவும்".
  • கூகிள் இந்த திட்டத்தை 2013 இல் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் அதன் முதல் சோதனையை 2019 இல் தொடங்கவுள்ளது. அப்போதிருந்து, மெக்ஸிகோ மற்றும் சிலியில் லேசான பூகம்பங்களை தொழில்நுட்பம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்த தொழில்நுட்பம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.
முதல் மெகா உணவு பூங்கா :
  • ஜூலை 20, 2020 அன்று, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் மிசோரத்தில் முதல் மெகா உணவு பூங்காவை திறந்து வைத்தார்.
  • சிறப்பம்சங்கள்: மிசோரத்தில் திறக்கப்பட்ட சோரம் உணவு பூங்கா (அரசு சாரா) 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு முதன்மை செயலாக்க மையம் மற்றும் மைய செயலாக்க மையத்தில் 25,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
  • சுமார் 30 உணவு பதப்படுத்தும் பிரிவுகளில் இந்த பூங்கா ஆண்டுக்கு 450-500 கோடி ரூபாய் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மெகா உணவு பூங்கா திட்டம்:
  • சோரம் உணவு பூங்கா இந்திய அரசின் மெகா உணவு பூங்கா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. 18 மெகா உணவு பூங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் 19 மெகா உணவு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆறு மெகா உணவு பூங்காக்கள் வடகிழக்கில் உள்ளன.
  • மெகா உணவு பூங்கா திட்டத்தின் கீழ், ஒரு மெகா உணவு பூங்கா திட்டத்திற்கு இந்திய அரசு ரூ .50,000 கோடி நிதி உதவி வழங்கும்.
  • முக்கியத்துவம்:மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கு முக்கிய உந்துதல் அளிக்க உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மெகா உணவு பூங்காக்களை ஊக்குவித்து வருகிறது. இது 2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இந்தியாவின் இலக்கை நோக்கி பெரும் பங்களிப்பாளராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வு நாள் :
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று, மனிதனின் முதல் வரலாற்று நிலவு நிலத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விண்வெளி ஆய்வு நாள் கொண்டாடப்படுகிறது.
  • சிறப்பம்சங்கள்:ஜூலை 20, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் பஸ் ஆகியோர் சந்திரனின் மேற்பரப்பில் இறங்கிய முதல் மனிதர்களாக ஆனார்கள். ஆம்ஸ்ட்ராங்-ஆல்ட்ரின் இரட்டையர்கள் சந்திரனின் மேற்பரப்பில் 21.5 மணி நேரம் செலவிட்டனர். மேலும், அவர்கள் தங்கள் காப்ஸ்யூல்களுக்கு வெளியே 2.5 மணி நேரம் செலவிட்டனர். இந்த நாள் முக்கியமாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
  • 1960 களில், அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜான் எஃப் கென்னடி ஒரு தசாப்தத்திற்குள் ஒரு மனிதனை நிலவில் தரையிறக்கும் தேசிய இலக்கை நிர்ணயித்தார்.
  • நாசாவின் பணிகள்:சந்திரனில் வெற்றிகரமாக இறங்கியதைத் தொடர்ந்து, நாசா தனது விண்வெளி ஆய்வுகளைத் தொடர்ந்தது. 1969 மற்றும் 1972 க்கு இடையில், அமெரிக்கா 6 அப்பல்லோ பயணங்களைத் தொடங்கியது.
  • நாசா பின்னர் திட்ட ஜெமினி மற்றும் திட்ட அப்பல்லோவை அறிமுகப்படுத்தியது, இது விண்வெளி வீரர்களை சந்திரனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் அழைத்துச் சென்றது.
  • 1975 ஆம் ஆண்டில், நாசா சோவியத் யூனியனுடன் இணைந்து அப்பல்லோ-சோயுஸ் திட்டத்தைத் தொடங்கினார். இது 1975 இல் தொடங்கப்பட்ட முதல் சர்வதேச மனித விண்வெளி விமானத் திட்டமாகும்.
ஜூலை 20, 2020 அன்று, சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளுக்கான மரியாதை அடிப்படையில் 144 நாடுகளின் தரவரிசையை வெளியிட்டது
  • துரதிர்ஷ்டவசமாக, இந்த பட்டியலில் மிகக் குறைவான 10 நாடுகளில் இந்தியாவும் இருந்தது.
  • சிறப்பம்சங்கள்: பிரேசில், பங்களாதேஷ், கொலம்பியா, கஜகஸ்தான், ஹோண்டுராஸ், பிலிப்பைன்ஸ், எகிப்து, ஜிம்பாப்வே மற்றும் துருக்கி ஆகியவை குறைவான செயல்திறன் கொண்ட நாடுகளாகும்.
  • மத்திய கிழக்கு பிராந்தியமானது உழைக்கும் மக்களுக்கு உலகின் மிக மோசமான பகுதி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிரியா, பாலஸ்தீனம், சிரியா, லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் பாதுகாப்பின்மை மற்றும் மோதல்களும், தொழிலாளர் பிரதிநிதித்துவம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளின் மிகவும் பிற்போக்குத்தனமான பிராந்தியமும் இதற்குக் காரணம்.
  • அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்: ஐ.டி.யூ.சி அறிக்கை சுமார் 85% நாடுகள் வேலைநிறுத்த உரிமையை மீறியதாகவும் 80% கூட்டாக பேரம் பேசும் உரிமையை மீறியதாகவும் கூறுகிறது. அறிக்கையின் மற்ற முக்கிய கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
  1. பேச்சு சுதந்திரத்தை மறுத்த நாடுகளின் எண்ணிக்கை 2019 ல் 54 ஆக இருந்து 2020 ல் 56 ஆக உயர்ந்துள்ளது

  2. வன்முறைக்கு ஆளான தொழிலாளர்கள் 72% நாடுகளில் நீதிக்கான அணுகலை தடை செய்திருந்தனர்

  3. தொழிற்சங்கங்களின் பதிவுக்கு இடையூறு விளைவிக்கும் நாடுகள் அதிகரித்துள்ளன. தொழிலாளர்களுக்கான மோசமான 10 நாடுகளின் பட்டியலில் நுழைந்த புதிய நாடுகள் இந்தியா, ஹோண்டுராஸ் மற்றும் எகிப்து.
  • உலகளாவிய உரிமைகள் அட்டவணை: உலகளாவிய உரிமைகள் குறியீட்டின் மதிப்பின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை செய்யப்பட்டுள்ளது. 97 அளவீடுகளின் அடிப்படையில் குறியீட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் தொழிலாளர்களின் உரிமைகள், வேலைநிறுத்த உரிமை, வன்முறை நிலைமைகளிலிருந்து விடுபடுதல் ஆகியவை அடங்கும்.
  • சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு:ஐ.டி.யூ.சி 2006 இல் நிறுவப்பட்டது. இது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இது சர்வதேச சுதந்திர தொழிற்சங்கங்கள் மற்றும் உலக தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் இணைப்பில் உருவாக்கப்பட்டது. இந்தியா ஐ.டி.யூ.சி உறுப்பினராக உள்ளது.
ஜூலை 20, 2020:
  • நம்பிக்கை' விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் சாதனை
  • ஜூலை 20: விண்வெளி ஆய்வு நாள்
  • மிசோரத்தின் முதல் மெகா உணவு பூங்கா திறக்கப்பட்டது
  • தமிழக அரசு ரூ .10,399 கோடி 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
  • சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு: உழைக்கும் மக்களுக்கு மோசமான 10 நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 நடைமுறைக்கு வருகிறது; ஈ-காமர்ஸையும் உள்ளடக்கியது
  • தென்னாப்பிரிக்க சுங்க ஒன்றியத்துடனான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா புதுப்பிக்கிறது
  • சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து சூரிய மின்கலங்கள் மீதான பாதுகாப்பு கடமையை இந்தியா தொடர உள்ளது
  • இந்திய மசாலா ஏற்றுமதி 23% அதிகரிக்கும்
  • அசாம் வெள்ளம்: காசிரங்கா தேசிய பூங்காவில் 108 விலங்குகள் இறக்கின்றன

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel