Type Here to Get Search Results !

17th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் 
  • இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் முதல் தலைவராக இந்தியர் ஒருவரே பதவி வகித்துள்ளார். அந்த வகையில், இந்த அமைப்பை மேம்படுத்தியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
  • கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக அரசு மட்டும்போராடினால் போதாது என்பதை இந்தியா ஆரம்பத்திலேயே உணர்ந்தது. எனவே, கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள்,அரசு இயந்திரம் என அனைத்தையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • அதன்படி, இப்போது இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போராட்டம், மக்கள் இயக்கமாகமாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இங்கு இந்த தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
  • அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை 150 நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
  • தன்னுடைய வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இந்தியா இருந்தது கிடையாது. மாறாக, பல வளரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கும், அவற்றின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் என்றும் பக்கபலமாக இருந்து வருகிறது. 'அனைவருக்குமான வளர்ச்சி; அனைவருக்குமான நம்பிக்கை' என்பதே இந்தியாவின் தாரக மந்திரம் ஆகும்.
லா லிகா கால்பந்து போட்டி சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்
  • ஸ்பெயினில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி தொடரல் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, வில்லார்ரியலை எதிர்கொண்டது. 
  • முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொரோனா பாதிப்பு இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். 
  • மேலும் இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தையும் சொந்தமாக்கியது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ரியல் மாட்ரிட் பட்டத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியில் அந்த அணி பட்டத்தை வெல்வது இது 34-வது முறையாகும்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷ்னி நாடார் நியமனம்
  • இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் எச்.சி.எல்., என அறியப்படுகிறது. நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடார் பதவி வகித்து வந்தார். 
  • தற்போது அவர் பதவி விலகியுள்ளதால், 38 வயதாகும் அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்.
கொந்தகை பகுதியில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு
  • மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.
  • இங்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
  • அங்கு முதல்நாள் 2 குழந்தைகளின் உடல்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • நேற்று முதல்நாள் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் இரண்டும் மிக சிறிய உடல்கள் ஆகும். ஒரு உடலின் அளவு 1.05 மீட்டர் மட்டுமே இருந்தது. இன்னொரு உடல் 0.65 மீட்டர் இருந்துள்ளது. 
  • இரண்டு உடலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உடல்களை விட மிகவும் பழைய உடல்கள் ஆகும். அதில் இருந்த அளவு சதை பகுதி கூட இந்த உடல்களில் காணப்படவில்லை
  • இந்த உடல்கள் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிமு 300-400 ஆண்டுகளை சேர்ந்த உடல்களாக இது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் மீதான ஜீன் ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த உடல்களின் பாலினம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவில் இதன் மீதான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel