Type Here to Get Search Results !

CURRENT AFFAIRS IMPORTANT POINT MAY 2020


 • சமீபத்தில் இடப்பெயர்வு மற்றும் வளர்ச்சிக் குறிப்பு அறிக்கையானது உலக வங்கியின் கீழ் இயங்கும் இடப்பெயர்வு, தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புதல் பிரிவு மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, வெளியிடப் பட்டுள்ளது.
 • இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI - Airport Authority of India) திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வகை-I என்ற பிரிவிலிருந்து வகை-II என்ற பிரிவிற்கு மேம்படுத்தி உள்ளது.
  • அதே சமயத்தில் தூத்துக்குடி, பிரயாக்ராஜ், ஜபல்பூர், ஹீப்ளி மற்றும் கோரக்பூர் போன்ற விமான நிலையங்கள் வகை-IV என்ற பிரிவிலிருந்து வகை-III என்ற பிரிவிற்கு மாற்றப் பட்டு உள்ளது.
 • சுவீடன் நாடானது கொரான வைரஸ் தொற்றைக் கையாளுவதற்கு மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளது.
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தை (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அல்சைமர் நோய்க்காக ஒரு இயற்கைப் பொருளை (மருந்து) கண்டறிந்துள்ளனர்.
  • பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெர்பெரைன் என்ற பொருளானது பெர்-டி ஆக மாற்றப்படுகின்றது.
 • இயந்திர மனிதச் சாதனமான மருத்துவமனை நல உதவி இயந்திர மனிதச் சாதனம் (HCARD  - Hospital Care Assistive Robotic Device) ஆனது முன்கள சுகாதார நலப் பணியாளர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 • பிரிக்ஸ் அமைப்பில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
  • இந்த அமைப்பின் சுழற்சி முறைத் தலைவரான ரஷ்யாவினால் இந்தக் காணொலிக் கருத்தரங்கு நடத்தப்பட இருக்கின்றது.

 • கேரள அரசு அம்மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் அடுத்த 6 மாத காலத்திற்கு 6 நாட்கள் என்ற அளவில் ஊதியப் பிடித்தத்திற்கான (மாதம் 6 நாட்கள்) அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவச் சேர்க்கைக்கான தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வானது அரசியலமைப்பின் கீழ் உள்ள சிறுபான்மையினர் உரிமைகளை மீறவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தத் தீர்ப்பானது 2012 ஆம் ஆண்டில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழங்கப் பட்டுள்ளது.
 • ஜெர்மனியானது தனது நாட்டில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
  • ஹெஸ்புல்லாஹ் என்பது லெபனான் நாட்டில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய அரசியல் கட்சியாகும்.
 • இந்தியக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பானது சர்வதேசக் குத்துச் சண்டை மன்றத்திற்குப் போட்டியை நடத்துவதற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை இந்தியா இழந்துள்ளது.
  • தற்பொழுது இந்தப் போட்டித் தொடரானது செர்பியாவினால் நடத்தப்பட இருக்கின்றது.
 • பஞ்சாப் மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவலைக் கையாளுவதற்காக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
 • ஒரு தலைசிறந்த வங்கித் துறை நிபுணரான சுரேஷ் என் படேல் என்பவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவருக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சஞ்சய் கோத்தாரி அவர்களால் காணொலி மூலம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 
 • நாகாலாந்து மாநில அரசானது பெட்ரோல் மற்றும் டீசலின் மீது கோவிட் – 19 செஸ் கட்டணத்தை விதித்துள்ளது. இந்தியாவில் கோவிட் – 19 செஸ் கட்டணத்தை அறிமுகப் படுத்திய முதலாவது மாநிலம் நாகாலாந்து ஆகும். 


 • மணிப்பூரின் சக்-ஹாவ் என்று அழைக்கப்படும்  கருப்பு அரிசி, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் களிமண் பொம்மைகள் (டெரகோட்டா) மற்றும் கோவில்பட்டியின் கடலை மிட்டாய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • 2004-05 ஆம் ஆண்டில், டார்ஜிலிங் தேநீருக்கு இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 • தேசிய உள்கட்டமைப்புத் தொடர் (National Infrastructure Pipeline) குறித்த அதானு சக்கரவர்த்தி தலைமையிலான பணிக்குழு தனது இறுதி அறிக்கையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
  • 2025 நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கை நிறைவேற்றுவதில் தேசிய உள்கட்டமைப்புத் தொடரானது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
 • இந்தியாவின் பஹால் திட்டத்திற்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சர்வதேச மேம்பாட்டிற்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனமானது அறிவித்துள்ளது.
  • பஹால் என்பது மலிவான சுகாதார அணுகல் மற்றும் நீண்ட ஆயுளுக்கான ஒரு கூட்டாண்மை ஆகும்.
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகமாக கருதப்படும் மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்திற்கான  பாதுகாப்பு நிறுவனமானது, “அதுல்யா” எனப்படும் நுண்ணலை உயிர்க்கொல்லியை வடிவமைத்துள்ளது.
  • கோவிட்-19 வைரஸை சிதையச் செய்ய இது பயன்படுத்தப் படுகிறது.
 • கோவிட்-19 மீது கவனம் செலுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக் குழுவானது  YASH என்பதை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • YASH (Year of Awareness on Science and Health) – என்பதன் விரிவாக்கம் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு என்பதாகும்.
 • ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது சந்திரனில் தரையிறங்குவதற்கான புதிய முறைகளை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ், ப்ளூ ஆரிஜின் மற்றும் டைனடிக்ஸ் ஆகிய மூன்று விண்வெளி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை சந்திரனுக்குக் கொண்டுச் செல்லும்.
 • இந்திய ரயில்வேயானது பொது முடக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டு வருவதற்காக ஷ்ராமிக் சிறப்பு இரயில் சேவைகளைத் (Shramik Special trains) தொடங்கியுள்ளது.
 • கிசான் சபா செயலியானது சிஎஸ்ஐஆர் – தில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CSIR – CRRI/Central Road Research Institute) தொடங்கப் பட்டுள்ளது.
  • இது விவசாயிகளை விநியோகச் சங்கிலியில் இணைப்பதற்கும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் இணைப்பதற்கும் வேண்டி பணியாற்றுகின்றது. 
 • திக்ரி பெக்ரா என்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஒரு சமுதாயக் காவல் முறையாகும்.
  • இந்த மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தீவிரவாத இயக்கங்களின் எழுச்சிக்குப் பிறகும் காலா கச்சாக் குழுவின் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் வேண்டி இது தொடங்கப் பட்டது.
 • சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வரான பெமா காந்து அம்மாநிலத்தின் மேலை சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் தபோரிஜோவில் பாயும் சுபன்ஸ்ரீ நதியின் மீது சீரமைத்துக் கட்டப்பட்ட “ஹாங்பன் தாதா” என்ற ஒரு முதன்மைப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இந்த சீரமைப்புப் பணியை “அருணன்ங்க்” (ARUNANK) என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பானது மேற்கொண்டது.
 • திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகமானது மாநிலத்தின் (தமிழ்நாடு) முதலாவது சமூக விலகல் திரையரங்கை உருவாக்கியுள்ளது.
 • சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் என்பவர் ஊழல் தொடர்பான விவகாரங்களை வெளிப்படுத்தாத காரணத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் விளையாடுவதற்கு 3 ஆண்டுகளுக்குத் தடை செய்யப் பட்டுள்ளார்.

  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டமானது “IDEAthon” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
   • இது கோவிட் – 19  நோய்த் தொற்று எவ்வாறு நதி மேலாண்மை உத்திகளை மாற்றியமைக்கும் என்பதை ஆராயும் “நதி மேலாண்மையின் எதிர்காலம்” என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • ரோப்பரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது ஒரு தனிச்சுதந்திர தொகுதி உதவியாளர்களை அல்லது வார்டு பாட்டுகளை ('WardBot') வடிவமைத்து உள்ளது.
   • இது தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் உள்ள கோவிட் – 19 நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் உணவுகளைச் சென்று வழங்கும் திறன் கொண்டது.
  • அசாம் மாநில அரசானது மருந்துகளை வீடுகளுக்கேச் சென்று வழங்குவதற்காக “தன்வந்தரி” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
   • இதன்படி 200 ரூபாய்க்குக் கீழே உள்ள மருந்துகள் அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.
  • இமாச்சலப் பிரதேச மாநில சுகாதாரத் துறையானது மின்னணு சஞ்சீவனி-ஒபிடி என்ற இணையவாயிலின் மூலம் நோயுற்றவர்களுக்கு, அவர்களின் குடியிருப்புகளில் இலவசமாக ஆன்லைனில் (நிகழ்நேர) அறிவுரைகளை வழங்குதல் என்ற ஒரு தனித்துவமான கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சையைச் சோதனை முயற்சியாகத் தொடங்கிய நாட்டின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகேஷ் சர்மா என்பவர் சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் சங்கத்தின் (IMMA - International Motorcycle Manufacturers Association) தலைவராக 2 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப் பட்டு உள்ளார்.
   • IMMA என்பது உலக அளவில் இரு சக்கர வாகனங்களின் உற்பத்தித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சங்கமாகும்.
  • “பாரத் சந்தை” என்று அழைக்கப்படும் ஒரு தேசிய மின்னணு முறையிலான வர்த்தகச் சந்தையானது அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினால் (CAIT - Confederation of All India Traders) தொடங்கப் பட்டுள்ளது.
   • இந்த முன்னெடுப்பானது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தினால் வழி நடத்தப்பட்டு, ஆதரிக்கப் படுகின்றது.
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்திய-அமெரிக்கரான அசோக் மைக்கேல் பிண்டோ என்பவரை சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கிக்கான (IBRD - International Bank of Reconstruction and Development) அமெரிக்கப் பிரதிநிதியாக நியமித்துள்ளார்.
   • IBRD, அதன் கடன் வழங்கும் அமைப்புகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி மன்றம் ஆகியவை இணைந்து “உலக வங்கி” என்று அழைக்கப்படுகின்றன.

  Post a Comment

  0 Comments
  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

  Top Post Ad

  Below Post Ad

  Hollywood Movies

  close

  Join TNPSC SHOUTERS Telegram Channel

  Join TNPSC SHOUTERS

  Join Telegram Channel