Type Here to Get Search Results !

2nd JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி அருகே மணலூரில் உலைகலன் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மணலூரில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. 2 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வந்த நிலையில், மணலூரில் உள்ள ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டது. 
  • இந்த உலை கலன் ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில் கிடைத்துள்ளது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது, உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். உலைகலன் கிடைத்திருப்பது மணலூர் தொழில்நகரமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
3 வங்கிகளின் கடன் தர மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ்
  • கரோனா தீநுண்மி தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீா்குலைவு, இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு கடந்த 22 ஆண்டுகளில் முதன் முறையாக குறைக்கப்பட்டது. 
  • உள்ளிட்ட காரணங்களால், மூன்று வங்கிகள் மற்றும் எட்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடு செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.
  • அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிஎஃப்சி மற்றும் எக்ஸிம் ஆகிய மூன்று வங்கிகளின் கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆயில் இந்தியா, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பெட்ரோநெட் எல்என்ஜி, டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய எட்டு நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. 
  • இவை அனைத்தின் கடன் தகுதி மதிப்பீடும் 'எதிா்மறை (நெகட்டிவ்)' என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது என மூடிஸ் தெரிவித்துள்ளது. இவை தவிர, என்டிபிசி, என்ஹெச்ஏஐ, கெயில் உள்ளிட்ட ஏழு உள்கட்டமைப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டையும் மூடிஸ் குறைத்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் 'ரெம்டெசிவர்' மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
  • கொரோனா உலக நாடுகளை கதி கலங்கச் செய்து வருகிறது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்ப நாடுகளில் லட்சக்கணக்கி ல் உயிரிழந்துள்ளனர். 
  • உலக அளவில் புதிததா தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உலகில் பல நாடுகளில் கொரோனாவுக்கான மருந்தினை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
  • தற்போது கொரோனா சிகிச்சையில் பல்வேறு மருந்துகள் கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கான சிக்சையில் ரெம்டெசிவரை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மூலம் நல்ல பலன் கிடைத்ததையடுத்து இம்மருந்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. 
  • ஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
  • தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்த மருந்தினை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel