
நாமக்கல்லில் பயோகாஸ் உற்பத்தி மையம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
- நாமக்கல் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பயோகாஸ் உற்பத்தி மையம் மற்றும் நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயோ காஸ் சில்லறை விற்பனை நிலையங்களை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியத் துறை செயலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனிநிறுவனங்களின் கூட்டு முயற்சிநிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு, 2.4 மெகாவாட் திறன் கொண்ட பயோ காஸ் மின் உற்பத்தி செய்து வருகிறது.
- இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ காஸில் இருந்து கம்ப்ரஸ்டு பயோ காஸ் (சிபிஜி) தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
- இதன்மூலம் இப்புதிய தொழிற்சாலையில் தினசரி 15 டன் சிபிஜிமற்றும் 20 டன் உயிர் உரங்கள் தயாரிக்கப்படும். தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட்ஆகும்.
- இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை 8,523 மெகாவாட், சூரிய ஒளி 4,054 மெகாவாட், தாவரக்கழிவு 266 மெகாவாட் மற்றும் இணை மின் உற்பத்தி நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆக உள்ளது.
- தமிழகத்தில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் மாநிலத்துக்கு சொந்தமான 516 மெகாவாட்டும், தனியாருக்கு சொந்தமான 497 மெகாவாட்டும் என 1,013 மெகாவாட்டாக உள்ளது.
- சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ2,000 கோடி செலவில் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 50,000 வென்டிலேட்டர் தயாரிப்பு
- பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50 ஆயிரம் வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இதுவரை 2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1,340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன.
- மகாராஷ்டிராவுக்கு 275, டெல்லிக்கு 275, பீகாருக்கு 100, கர்நாடகாவுக்கு 90 மற்றும் ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஜூன் இறுதிக்குள் கூடுதலாக 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் டெலிவரி செய்யப்படும். பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- இதில், மகாராஷ்டிராவிற்கு ரூ.181 கோடி, உபி.ரூ.103 கோடி, தமிழகம் ரூ.83 கோடி, குஜராத்ரூ.66 கோடி, டெல்லி ரூ.55 கோடி, மேற்கு வங்கம் ரூ.53 கோடி தரப்பட்டுள்ளது.
- இதுவரை, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வென்டிலேட்டர் தயாரிக்க ரூ.2,000 கோடியும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 கோடியும் மற்றும் கொரோனா தடுப்பு பணி கண்டுபிடிப்பு பணிக்காக ரூ.100 கோடியும் என மொத்தம் ரூ.3,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிதியத்திற்கு ரூ.10,000 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாளுக்கு ரூ.2,700 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
- தேங்காய்க்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை 5% உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- நார் உரிக்கப்பட்ட முற்றிய தேங்காய்க்கான 2020 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு 2,700 ரூபாய் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு 2571 ரூபாயாக இருந்தது, தற்போது 5.02 சதவிகிதம் அதிகமாகும்.