Type Here to Get Search Results !

21st JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கரோனா வைரஸ் சிகிச்சைக்கு 'கோவிஃபார்'- மத்திய அரசு அனுமதியுடன் அறிமுகம் செய்தது ஹெட்ரோ நிறுவனம்
  • கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவிய நிலையில் இந்தியாவிலும் அதன் பாதிப்புதீவிரமாகி உள்ளது. தொடர்ந்து வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்கு மருந்து வழங்குவதில் சவால்கள் நீடித்து வருகின்றன.
  • வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு ஆயுர்வேத மருந்துகளும், வழக்கமான பொது மருத்துவ மருந்துகளும் கொடுத்து வரும் நிலையில், தற்போது கரோனாவுக்கென பிரத்யேக மருந்து ஒன்றை ஹெட்ரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • 'கோவிஃபார்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மருந்து அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் (Gilead's Remdesivir) மருந்தின் ஒரு வகையாகும். ரெம்டெசிவிர் மருந்துக்கு ஐரோப்பிய மருந்து ஆணையமும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன.
  • இந்நிலையில் இதன் ஒரு வகை மருந்தை இந்தியாவில் ஹெட்ரோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. 
  • இது 100 மில்லி கிராம் அளவுக்கு ஊசி மூலம் கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்து ஹைதராபாத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தில் தயார் செய்யப்பட உள்ளது.
சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க தமிழகத்திற்கு ரூ.1,428 கோடி
  • தேசிய அளவில் தமிழகத்தில்தான் அதிகளவு பழங்கள், காய்கறிகள், மருத்துவப் பயிா்கள், தானியப்பயிா்கள் அதிகளவு பயிரிட்டாலும் விவசாயிகள், சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க முன்வரவில்லை. 
  • இந்த நிலையில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்ய இந்த பிரதம மந்திரி வேளாண் நீா்ப் பாசன திட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு சொட்டு நீா் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • தமிழக அளவில் ரூ.2 லட்சம் ஹெக்டரில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயித்து அதற்கு ரூ.1,428.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டு நீா்ப் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன. சொட்டு நீா்ப் பாசனத்தால் பயிா்கள் சீராக வளரும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். 
  • இதுபோல் சொட்டு நீா்ப் பாசனத்தில் ஏராளமான நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிா்களை அடங்கிலில் பதிவு செய்து குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைப்படம், சிறு, குறு விவசாயிகளாக இருந்தால் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றுவட்டார தோட்டக்கலை உதவி அலுவலா்களை தொடா்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தோட்டக் கலைதுறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ரூ. 500 கோடி வரை ஆயுதங்கள் வாங்கிக்கொள்ள முப்படைகளுக்கும் அதிகாரம்
  • கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரைக் கொன்ற சீனா, இப்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்குச் சொந்தம் எனக் கூறி வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் படைகளின் எண்ணிக்கையையும் சீனா அதிகரித்து வருகிறது.
  • சீனாவின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருவதோடு, சீனாவின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கவும் முப்படைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • எல்லையில் சீனாவுடன் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், தேவை அடிப்படையில் தலா ரூ. 500 கோடி வரை முக்கிய ஆயுதங்களை கொள்முதல் செய்துகொள்ள முப்படைகளுக்கும் மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
ரூ.50,000 கோடி மூலதனம் திரட்டும் திட்டம்: எச்டிஎஃப்சி வங்கி இயக்குநா் குழு ஒப்புதல்
  • அடுத்த 12 மாதங்களில் பல்வேறு வகையான கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடியை திரட்டிக் கொள்ள எச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற வங்கியின் இயக்குநா் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
  • அதன்படி, நீண்ட கால கடன்பத்திர வெளியீடு உள்ளிட்ட வழிமுறைகளில் இந்த மூலதனம் திரட்டிக் கொள்ளப்படவுள்ளது.
  • இந்த மூலதனம், உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவில் நிதியுதவி அளிக்க பயன்படுத்திக் கொள்ளப்படும் என எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.
கடலுக்கடியில் அருங்காட்சியகம் இலங்கையில் திறந்து வைப்பு
  • இலங்கையின் காலி துறைமுகத்தில் முதன் முறையாக, கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தை, கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, நீருக்கடியில் சென்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 
  • 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருவாயை சார்ந்துள்ள இலங்கையில், கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டச்சு கோட்டையை காண வரும் அனைவரும், நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழடி 6ம் கட்ட அகழாய்வு குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிப்பு
  • கீழடி 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே பானைகள், செங்கல் கட்டடப் பகுதி, விலங்கின் எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கபட்ட நிலையில், உலை உள்ள குழி அருகே நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டது.
  • 13அடி நீளத்தில் 10அடி ஆழமான குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதே குழி அருகே கறுப்புக் கலரில் சாம்பல் துகள்கள் அமைப்பு உள்ளது.
  • ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற பல ஆய்வுகளில் அது தொழிற் நகரமாக இருந்ததற்கான சான்றாக பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நெருப்பு பயன்படுத்திய அமைப்பு மூலம் இரும்பு, கண்ணாடி, எஃக்கு போன்றவற்றைத் தயாரிக்க இது பயன்பட்டிருக்காலம் என தெரியவருகிறது.
  • தொடர்ந்து கீழடி பகுதிகளில் தொழிற் சம்பந்தமாக பொருட்கள் மற்றும் அமைப்புகள் தெரிய வருவதால் 2,600 ஆண்டுக்கு முன்னால் பண்டை தமிழர்கள் தொழிற்சாலை சார்ந்து இயங்கிவந்துள்ளதாக ஆய்வுகளில் தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel