
நேபாள நாடாளுமன்ற மேலவையில் புதிய வரைபட மசோதா நிறைவேற்றம்
- நேபாளத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- மேலவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மேலவை உறுப்பினா்கள் 57 பேரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். மசோதாவுக்கு எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை என்று அவைத் தலைவா் கணேஷ் திமில்சினா கூறினாா்.
- ஏற்கெனவே இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்புக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் ரூ.1,711 கோடி கடனுதவி வழங்குகிறது
- கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் ரூ.1,711 கோடி கடனுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே வியாழக்கிழமை கையெழுத்தானது.
- காணொலி வழியே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலா் சி.எஸ்.மொஹபத்ராவும், பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டு வளா்ச்சி அமைப்பின் (ஏஎஃப்டி) இயக்குநா் புரூனோ போஸலும் கையெழுத்திட்டனா்.
- இந்தியாவில் கரோனா சூழலால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதற்கு இந்தக் கடனுதவி வழங்கப்படுவதாக பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது
- 60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் கைப்பற்றியது.
- ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள் இந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி-4 , நாகா மக்கள் முன்னிலை-4 , லோக் ஜனசக்தி -1, சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர், டிஎம்சி எம்.எல்.ஏ ஒருவர் ஆகியருடன் கூட்டணியை அமைத்து 32 எம்.எம்.ஏக்களுடன் பாஜக ஆட்சியமைத்தது.
- இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏ-க்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பாஜக பெருபான்மையை இழந்துள்ளது. ஏற்கனவே, பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ரிலையன்ஸ் ஜியோவில் சவுதியைச் சேர்ந்த PIF ₹ 11,367 கோடி முதலீடு
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பேஸ்புக் நிறுவனம் 9.99 சதவிகித பங்குகளை ₹ 43,574 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் பங்குகளை வாங்கின.
- சில்வர் லேக் நிறுவனம் மேலும் ஜியோவில் முதலீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.16 சதவிகித பங்குகளை ₹ 5683 கோடிக்கு வாங்கியது. 7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தன.
- அதன் தொடர்ச்சியாக ADIA, L Catterton ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்த நிலையில், சவுதி அரேபியாவின் PIF ₹ 11,367 கோடி மதிப்பிலான 2.32% பங்குகளை வாங்க உள்ளது.
COVID-19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டள்ளது
- கோவிட் -19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது .இதனை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வதன் தொடங்கிவைத்தார்.
- இந்த வாகனம் நாடுமுழுவதும் உதவிக்கு சிரமப்படும் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும். இந்த வாகனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆர்டி-பிசிஆர் சோதனைகள் / நாள், 300 எலிசா சோதனைகள் / நாள் மற்றும் டிவி, எச்.ஐ.விக்கு சோதனைகள் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
- ஹர்ஷ் வதன் மேலும் கூறுகையில் நாங்கள் பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வகத்துடன் COVID-19 க்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினோம்.
- இன்று நாடு முழுவதும் 953 ஆய்வகங்கள் உள்ளன. இந்த 953 இல் 699 இல் அரசு ஆய்வகங்கள் உள்ளன. தொலைதூர பகுதிகளில் சோதனை வசதிகளை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன, இறப்பு எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணிகளை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி
- இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
- அதன்படி இந்தியாவில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
- பின்னர் உரையாற்றிய அவர், உலகில் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா இருந்தால், நாம் ஏன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடியாது என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.
- வணிக நிலக்கரி சுரங்கங்களுக்கான இந்த ஏல செயல்முறை அனைவருக்கும் வெற்றியை தேடித்தரும் எனவும் நிலக்கரி ஏலத்தின் மூலம், மாநிலங்கள் கூடுதல் வருவாயைப் பெறும் என தெரிவித்தார்.
- 2030க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக்க இலக்கு வைத்துள்ளோம் எனவும் இதற்காக நான்கு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் தனக்கு தெரிவிக்கபட்டுள்ளதாக கூறினார். இந்த நிலக்கரி வணிகச் சுரங்கமானது அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நாட்டில் சுமார் 33,000 கோடி ரூபாய் மூலதன முதலீட்டை ஈட்டும்.
- இந்த ஏலம் மூலம் மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் வரும். நிலக்கரிச் சுரங்கங்களின் இந்த ஏலப் பணியைத் தொடங்குவது 'சுய சார்பு இந்தியா திட்டத்தின்' கீழ் வெளியிடப்பட்ட தொடர் அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும்.
- 225 மில்லியன் டன் (எம்டி) உற்பத்தியின் உச்ச மதிப்பிடப்பட்ட திறனை அடைந்தவுடன், 2025-26 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் இந்த சுரங்கங்கள் 15% பங்களிப்பை வழங்கும்.
- இது நாட்டில் 2.8 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் - ஏறக்குறைய 70,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் சுமார் 2,10,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- வணிக சுரங்கத்தை தொடங்குவதன் மூலம், மின்சாரம் மற்றும் சுத்தமான நிலக்கரி துறைகள் தொடர்பான முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை இந்தியா நிலக்கரித் துறையை முழுமையாகத் திறந்துள்ளது.
- நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு இரண்டு கட்ட மின்னணு ஏல செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, வணிகச் சுரங்கமானது "சுயாதீன வெப்ப மின் நிலையங்கள் மற்றும் கேப்டிவ் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் இறக்குமதியை மாற்றுவதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும்".
- 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு (வெளிநாட்டு நேரடி முதலீடு) வழியின் கீழ் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு இந்த ஏல செயல்முறை திறக்கப்பட்டுள்ளது.
Important points
- தேசிய வேலைவாய்ப்பு கொள்கை. 116 மாவட்டங்களில் குடியேறுபவர்களுக்காக ₹ 50,000 கோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் தொடங்க பிரதமர்: எஃப்.எம்.
- யு.என்.எஸ்.சி.யின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 2019 ஆம் ஆண்டில் இந்தியா அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் 9 வது இடத்தில் உள்ளது, தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும்: ஐ.நா.
- வோல்கன் போஸ்கிர் 75 வது ஐ.நா பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- எச்.டி.எஃப்.சி எர்கோ நாட்டின் முதல் ட்ரோன் அட்டையை அறிமுகப்படுத்துகிறது
- கெலோ இந்தியா சிறப்பான மையங்களை நிறுவ விளையாட்டு அமைச்சகம்.
- ஜூன் 18 அன்று சர்வதேச சுற்றுலா தினம் அனுசரிக்கப்பட்டது