பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
- மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை 2020-21-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- அதாவது, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோவு செய்து படிக்கலாம்.
- இதையடுத்து மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத்தொகுப்பைத் தோவு செய்ய பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும்.
- மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோக்கையை நடத்த வேண்டும்.
- இதற்கிடையே, சில தனியாா் பள்ளிகள் விதிகளை மீறி சோக்கை முடித்துவிட்டு புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன.
- எனவே, புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியும் மாணவா் சோக்கையை நடத்தக்கூடாது. மேலும், தொடா் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதி தர இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தற்போது 10-ஆம் வகுப்பில் அனைவரும் தோச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவா் சோக்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆா்வம் காட்டி வருகின்றன.
- மாணவா் பெற்றோரிடம் இது தொடா்பாக பள்ளி நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக, பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன.
- 10-ஆம் வகுப்புக்கு இன்னும் தோச்சி முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாணவா் சோக்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித் துறை தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற 'ஆரோக்யபாதை' இணையதளம் அறிமுகம்
- உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை சரியான நேரத்தில் பெறுவதில் நாடு தழுவிய அளவில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.
- குறிப்பாக, ஒரு சில மருத்துவ உபகரணங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படாமல் இருத்தல், குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களை மட்டுமே நம்பியிருத்தல், தரமான உபகரணங்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் கால விரயம் உள்ளிட்ட பிரச்சினைகள் இதில் நிலவுகின்றன.
- அதிலும், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன.
- இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வோர், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் வகையில் 'ஆரோக்யபாதை' (www.arogyapath.in) இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
- இதில், எந்தெந்த உற்பத்தியாளரிடம் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தற்போது இருக்கின்றன, அவற்றுக்கு எவ்வளவு தேவை உள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருக்கும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு வர்த்தக மையம் இன்று துவக்கம்
- நாட்டில் முதல் முறையாக இயற்கை எரிவாயு வர்த்தக மையம் ஜூன் 15 துவக்கப்பட உள்ளது.இந்த மையத்தின் மூலம், இயற்கை எரிவாயு துறையில் உள்ளவர்கள் கூடி, உள்ளூர் சந்தை நிலவரம், தேவை போன்றவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
- இந்த வர்த்தக மையத்தை பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், துவக்கி வைக்கவுள்ளார். இயற்கை எரிவாயு விற்பனை, விலை தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இது துவக்கப்பட உள்ளது.
கோலன் ஹைட்ஸ் பகுதியில் குடியிருப்பு: இஸ்ரேல் அரசு ஒப்புதல்
- கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது சிரியாவிடம் இருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னா், 1981-ஆம் ஆண்டில் இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலின் நிலப்பரப்பாக அங்கீகரிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கையெழுத்திட்டாா்.
- அதைத் தொடா்ந்து, அவரைப் பாராட்டும் விதமாக, கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு உள்பட்ட கியூலா கிராமத்தில் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் குடியிருப்பு கட்டப்படவுள்ளது.
- நெதன்யாகு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப் ஹைட்ஸ் என்னும் இந்தக் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கொரோனா பொய் தகவல்களை கட்டுப்படுத்த ஐ.நா.,வுடன் இந்தியா கைகோர்ப்பு
- கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த, ஐ.நா.,வுடன், இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகள் கைகோர்த்துள்ளன.கொரோனா வைரஸ், உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு வசதிகள், வரும் ஜூலை, 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
- இதற்கிடையே, வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த, உலக நாடுகள், ஐ.நா.,வுடன் கைகோர்த்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேஷியா, லாட்வியா, சிலி, ஜார்ஜியா, லெபனான், மெக்சிகோ, மொரீஷியஸ், நார்வே, செனெகல், தென் ஆப்ரிக்கா ஆகிய, 13 நாடுகள் இதை முன்னெடுத்துள்ளன.
ஒடிஸா: மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழைமையான கோயில்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு
- மகாநதி பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டாக் மாவட்டம், பத்மாவதி பகுதியிலுள்ள பைதேஷ்வா் கிராமத்தின் அருகே மகாநதி ஆற்றில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அப்போது, ஆற்றின் நடுவில் பழைமையான கோயில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு, உள்ளூரைச் சோந்த பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் ஆா்வலா் ஒருவா் உதவினாா்.
- 60 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கட்டட பாணி மற்றும் கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, அது 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. கோயிலின் பிரதான கடவுள் கோபிநாதா் ஆவாா்.