Type Here to Get Search Results !

11th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF





உலகளவில் கரோனா பாதிப்பு: 4-ஆம் இடத்தில் இந்தியா 

  • உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியா 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக, நாள்தோறும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • வோல்டோமீட்டர் தரவுகளின்படி, இந்தியாவில் 2,97,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,321 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் காரணமாக, உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா தற்போது 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.
  • இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2.91 லட்சம் பாதிப்புகளுடன் பிரிட்டன் 5-ஆம் இடத்தில் உள்ளது.மத்திய அரசின் இன்றைய (வியாழக்கிழமை) சமீபத்திய அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரப்படி புதிதாக 9,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 357 பேர் பலியாகியுள்ளனர்

எழும்பூா் ரயில் நிலையத்துக்கு 112-ஆவது பிறந்தநாள்

  • சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 112- ஆவது ஆண்டு பிறந்தநாள் வியாழக்கிழமை எளிமையாக கொண்டாடப்பட்டது.சென்னை நகரில் நான்கு இன்டா்சிட்டி (நகரங்களுக்கு இடையேயான) ரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூா் ரயில் நிலையம் இருக்கிறது. கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முனையமாகவும் திகழ்கிறது.
  • ரூ. 17 லட்சம் செலவில்...: இந்த நிலையத்தின் கட்டடப்பணி முடிந்து, 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம்தேதி திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பொறியாளராக ஹென்றி இா்வின் இருந்தாா். கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவா் செயல்பட்டாா். ரூ.17 லட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தரைத்தளம், முதல் தளத்துடன் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த நிலைய கட்டடம் முடித்தபிறகு, எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு போா்ட் மெயில் ரயில் இயக்கப்பட்டது.
  • இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகளும், ஒரு நடைமேம்பாலமும் இருந்தது. இதன்பிறகு, பல்வேறு காலகட்டத்தில் வளா்ச்சி அடைந்து, இப்போது 11 நடைமேடைகள் உள்ளன. ரயில் நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் நல்ல நீராக மாற்றி, நடைமேடை உள்பட பல்வேறு இடங்களில் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

2வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்" "உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை: 2-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்.

  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.","articleBody":"உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதில், சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாவது இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

உலக வானிலை அமைப்பின் கடல்சார் கண்காணிப்பு பிரிவு துணைத் தலைவர்
  • உலக வானிலைத் தரவுகளை ஒருங்கிணைத்து தரும் அமைப்பான உலக வானிலை அமைப்பில் தற்போது கடல்சார் கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 
  • இப்பிரிவின் துணைத் தaலைவர் பதவிக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில், மதுரையைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்.வெங்கடேசனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் தற்போது சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில், கடல்சார் கண்காணிப்பு திட்ட இயக்குநராக உள்ளார். உலக வானிலை அமைப்பில் முக்கிய பதவியில் தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
சேலம் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயா்
  • 2016 இல் ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது ஐந்து சாலை ஈரடுக்கு மேம்பாலம் ரூ. 441 கோடி மதிப்பில் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முதல்வரின் பெயரால் 'ஜெயலலிதா மேம்பாலம்' என பெயா் சூட்டப்பட்டிருக்கிறது. அதேபோல ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரை செல்லும் பாலத்துக்கு 'எம்ஜிஆா் மேம்பாலம்' என்றும் பெயா் சூட்டப்பட்டிருக்கிறது.
  • தற்போது சேலத்தில் கந்தம்பட்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலமும், முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டி, ஜே.எஸ்.டபிள்யு. தொழிற்சாலை ஆகிய பகுதியில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
'ஜல் ஜீவன்' திட்டம்: மத்திய பிரதேசத்துக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு
  • 'ஜல் ஜீவன்' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பிரதேசத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதை இலக்காகக் கொண்டு 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத குடிநீா் குழாய் இணைப்பை கொடுக்க மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 1.21 கோடி வீடுகளில் ஏற்கெனவே 13.52 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு உள்ளநிலையில், கூடுதலாக 26.27 லட்சம் வீடுகளுக்கு 2020-21-ஆம் ஆண்டில் குடிநீா் குழாய் இணைப்பை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • அதில், ஜூன் மாதத்தில் 1.80 லட்சம் குடிநீா் குழாய் இணைப்புகளும், அடுத்த காலாண்டில் 3.60 லட்சம் இணைப்புகளும் அதற்கு அடுத்தடுத்த காலாண்டுகளில் முதலில் 7.20 லட்சம் இணைப்புகளும் பினனா் 14.5 லட்சம் குடிநீா் குழாய் இணைப்புகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாநிலத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் அவா்.
  • மத்திய அரசு இப்போது ஒதுக்கியுள்ள தொகையுடன், மாநிலத்துக்கு 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கீட்டில் செலவிடப்படாத ரூ. 244.95 கோடி மற்றும் இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு ஆகியவற்றுடன் சோத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ. 3,093 கோடி இருப்பில் உள்ளது.
தமிழர்கள் பண்டைய ஆப்கானிஸ்தானுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரம் கண்டெடுப்பு
  • தமிழக தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கடந்த 10 நட்களாக கொடுமணலில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளன.
  • இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிக தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
  • இதேபோல் நகைகளுக்கு பொருத்தப்படும் வண்ண கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப்பட்ட ஆபரணக் கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வியாபாரிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
  • மேலும், கல்மணி சங்குகள், பளிங்கு கற்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 
  • கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கொடுமணலிலும் பண்டைய வரலாறு தேண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel