Type Here to Get Search Results !

National Institute of Virology and ICMR discovered 1st indigenous antibody detection kit for Covid / இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி : சாதனை படைத்த என்.ஐ.வி

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா தொற்றை உடனுக்குடன் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தது.
  • ஆனால் அந்த கருவிகள் முறையாக செயல்படாமல் தவறுதலான முடிவுகளை அளித்தது. இதனை தொடர்ந்து சீனாவில் ரேபிட் கிட்களை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தடைவிதித்தது. அதனை தொடர்ந்து கொரியாவிடம் இருந்து ரேபிட் கிட்களை இந்திய அரசு இறக்குமதி செய்தது.
  • இந்த நெருக்கடியான சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தேசிய வைராலஜி நிறுவனமும் இணைந்து கொரோனாவை கண்டறியும் ரேபிட் கிட்களை கண்டுபிடித்துள்ளது. 
  • இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். இந்த ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் கட்டமான ஒரு உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புசக்தி) உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும்.
  • இந்த கருவியை பயன்படுத்தி இரண்டரை மணி நேரத்தில் 90 நபர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இதன் பரிசோதனை முடிவுகளையும் விரைவாக அறிந்து கொள்ள முடியும். 
  • இந்த கருவியை இரண்டு இடங்களில் சோதனை நடத்தியுள்ளது வைராலஜி அமைப்பு. வருகின்ற நாட்களில் ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்றும் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel